சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காக்கி சட்டை காஞ்சனா.. கம்பீர உடைக்குள் ஈர மனசு.. இழுத்து கொண்டு வந்த பாசம்!

தான் படித்த பள்ளியை பெண் இன்ஸ்பெக்டர் காஞ்சனா தத்தெடுத்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    lady police inspector adopted the school in chennai

    சென்னை: காக்கி சட்டைக்குள் ஸ்கூலுக்குள் நுழைந்த காஞ்சனாவை பார்த்ததுமே பள்ளி மாணவர்கள் ஆச்சரியமாகவும், குழப்பமாகவும் பார்த்தனர். பிறகுதான் தெரிந்தது காஞ்சனாவின் ஈர மனசு!

    சென்னை,வண்ணாரப்பேட்டையில் 1941-ம் ஆண்டு தொடங்கப்பட்டது வட சென்னை நடுநிலை பள்ளி. ரொம்பவும் பழமையான பள்ளி இது.. 82 வருஷ பெருமை வாய்ந்தது.

    lady police inspector adopted the school in chennai

    வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலை மகாராணி தியேட்டர் அருகே உள்ளது. பார்த்தால் பள்ளி என்று உடனே தெரியாது. அந்த அளவுக்கு டல் அடித்து காணப்படும். மாணவர்களின் எண்ணிக்கை கூட குறைவாகி விட்டது. 60-க்கும் குறைவானர்கள்தான் இங்கு படித்து வருகிறார்கள்.

    காக்கி யூனிபார்மில் இந்த பள்ளியில் திடீரென நுழைந்த காஞ்சனா, கிண்டி ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருபவர். அவர் இந்த ஸ்கூலில்தான் படித்தார். தான் படித்த பள்ளி அவல நிலையில் உள்ளதாக காஞ்சனா கேள்விப்பட்டதும், உடனே இங்கு கிளம்பி வந்துவிட்டார்.

    lady police inspector adopted the school in chennai

    பள்ளியை அப்படியே தத்தெடுத்து கொண்டார்.. தன் சொந்த செலவில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மொத்த பள்ளி கட்டிடத்திற்கும் பெயிண்ட் அடித்தார்.. அங்கு படிக்கும் மாணவ மாணவிகளை சந்தித்து கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் அதனால் இன்று சாதித்து பலதுறைகளில் பணியாற்றி வருபவர்கள் குறித்தும் விலாவரியாக எடுத்து சொன்னார். பின்னர், மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி உற்சாகப்படுத்தினார்.

    lady police inspector adopted the school in chennai

    அரசு வேலை கிடைத்தும், அதுவும் போலீஸ் அதிகாரியாக உயர்ந்தும், படித்த பள்ளியை மறக்காமல் ஓடிவந்து உதவிய காஞ்சனாவின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். "படித்த பள்ளிக்கு சென்று பள்ளியின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்" என்று காஞ்சனாவும் பிள்ளைகளிடம் கேட்டுக் கொண்டார்.

    இவ்வளவும் செய்த காஞ்சனா, இந்த ஸ்கூலில் 1982-ல் படித்தவர், அதாவது 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை இங்கு படித்த... அந்த பாசம்தான் இப்போது இழுத்துகொண்டு வந்துவிட்டது.

    English summary
    lady police inspector has adopted the washerman pet school in chennai and public appreciate her service
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X