சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதான் என் நம்பர்.. எனி டைம்.. எனி ஹெல்ப்.. கால் பண்ணுங்க.. அதிர வைத்து அசத்திய பெண் போலீஸ்

பெண் போலீசின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    குழந்தைகள் கல்வி அவசியம்.. பெண் போலீசின் வைரல் வீடியோ

    சென்னை: "யாருக்காவது ஏதாவது உதவி வேணுமா.. இந்தாங்க.. இதுதான் என் நம்பர்.. எனி டைம் கால் பண்ணுங்க" என்று பெண் போலீஸ் ஒருவர் பொது மேடையில் தன்னுடைய செல்போன் நம்பரை தந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அது மட்டுமல்ல.. மாணவர்களின் கல்வி, அவர்களின் எதிர்காலம் குறித்த தன்னுடைய அறிவுரையையும் சேர்த்தே இவர் வழங்கி உள்ளார்.

    இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகிறது. ஒரு பெண் போலீஸ் விழா மேடை ஒன்றில் பேசுகிறார். அவர் பெயர், எந்த ஊர் என்று தெரியவில்லை. ஆனால் குழந்தைகளின் கல்வியில் மிகுந்த அக்கறை உள்ளவர் என்று மட்டும் புரிகிறது.

    அவரது பேச்சில் கல்வியின் அவசியம் குறித்தும், பெற்றோர்கள் அதற்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதையும் தன்னுடைய எதார்த்தமான பேச்சில் அழகாக வெளிப்படுத்துகிறார். இவர் பொதுக்கூட்டத்தில் தன்னுடைய செல்போன் நம்பரை கொடுத்தது முதல், ஒவ்வொரு பேச்சுக்கு நடுவிலயும் மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள். அந்த வீடியோ பேச்சுதான் இது:

    கல்வி

    கல்வி

    "என்னுடைய உயிர் இருக்கும்வரை, எங்க இருந்து கேட்டாலும் உதவி செய்வேன். படிக்கிற குழந்தைங்களுக்கு எங்க இருந்தாலும் உதவி செய்வேன். இதை நான் மேடைக்காக சொல்லல. இன்னமும் 60 குழந்தைங்க என்கிட்ட படிச்சிட்டு இருக்காங்க. கல்வியை தவிர நம்மை எதுவுமே பிற்காலத்தில் காப்பாத்தாது.

    உதவி செய்யணும்

    உதவி செய்யணும்

    அரசு வேலை கிடைப்பது ரொம்ப கஷ்டம். ஆம்பளையா இருந்து, என்னென்ன வேலையெல்லாம் செய்யணும்னு என் அப்பா நினைச்சாரோ, அதை எல்லாம் நான் இப்போ செய்துட்டு வரேன். சின்ன குழந்தைங்களுக்கு நல்ல என்கரேஜ் பண்ணுங்க. படிக்க வைங்க. தயவு செய்து திரும்ப திரும்ப சொல்றேன்.. படிக்கிற குழந்தைங்களுக்கு பெற்றோர் கண்டிப்பா உதவி செய்யணும்.

    பள்ளி குழந்தைகள்

    பள்ளி குழந்தைகள்

    சாயங்காலம் 6 மணி ஆயிடுச்சுன்னா, டிவி சீரியலை போட்டுட்டு எல்லாரும் வாயை திறந்து உட்கார்ந்துக்ககூடாது. 10.30 மணி வரைக்கும் கொசு போறதுகூட தெரியாமல் வாயை ஆ..ன்னு திறந்துட்டு லேடீஸ் டிவி பார்க்ககூடாது. சின்ன குழந்தைங்க ஸ்கூல்ல இருந்து திரும்பி வந்தா, உட்கார்ந்து பேசுங்க. அவங்கள பேச விடுங்க. அவங்க என்ன பேசறாங்கன்னு கேளுங்க. அவங்களோட பேசினால் வெளியே யாரும் போக மாட்டாங்க.

    செல்போன் நம்பர்

    செல்போன் நம்பர்

    பேரன்ட்ஸ் சரியா இருந்தால் குழந்தைங்க சரியா இருப்பாங்க. சின்ன குழந்தையில இருந்து பேசாம, இப்போ பேசினா கேட்பாங்களா? எல்லா குழந்தைங்களுக்கும் ஆல் தி பெஸ்ட். என் செல்போன் நம்பர் இன்னொரு முறை சொல்றேன்.. 9498153935 எனி டவுட்? 2021 மார்ச் வரைக்கும் நான் இங்க இருப்பேன். இதுக்கு நடுவுல டிஎஸ்பியா பிரமோஷன் ஆகி போயிடுவேன். 2032-வரைக்கும் சர்வீஸ்ல இருப்பேன்.

    English summary
    Lady Police says about Students Education and this motivational speech is viral on socials now
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X