சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாங்க ஏரி குளங்களை தூர்வாருங்க... பொதுமக்கள்.. தனியாருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    EPS PRESS MEET | முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அதிரடி செய்தியாளர்கள் சந்திப்பு- வீடியோ

    சென்னை: தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களை வட்டாட்சியர், விஏஓ அனுமதி பெற்று தூர்வார முன்வரலாம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரம் மற்றும் கட்டிடத் துறையின் பணிகள் குறித்து நேற்று ஆய்வு செய்தார் இந்த ஆய்வில் பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், முதன்மை தலைமைப் பொறியாளர், தலைமைப் பொறியாளர்கள் மற்றும் முதன்மை தலைமை பொறியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Lake and pools should be cleaned, tn cm edappadi palaniswami calls people and ngos

    இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், தமிழகத்தில் 2017-18-ம் ஆண்டில் 29 மாவட்டங்களில் 1,511 ஏரி குளங்களை தத்தெடுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதில் 1,311 ஏரி மற்றும் குளங்களில் பணிகள் முடிக்கப்பட்டது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். 2018-19-ம் ஆண்டில் 31 மாவட்டங்களில் ஒப்புதல் அளிக்கப்பட்ட 1,829 நீர் நிலை பணிகளை சிறப்பாகவும், துரிதமாகவும் மேற்கொள்ள வேண்டும்.

    தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் அவர்களாகவே முன்வந்து அந்தந்த பகுதிகளில் இருக்கிற ஏரிகள், குளங்களை தூர்வார முன்வந்தால், அதற்கு தகுந்த தெளிவான உத்தரவை மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கியிருக்கிறோம்.

    இப்பணிகளை மேற்கொள்ள தனியாருக்கு அனுமதி வழங்க அரசு தயாராக இருக்கிறது. அந்தந்தப் பகுதிகளில் இருக்கின்ற வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்களிடம் அனுமதி பெற்று அப்பணிகளை யார் வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம்.

    அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றும் விதமாக, ரூ.1,652 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டு, பணிகள் தொடங்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. சென்னை மக்களுடைய குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக, கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகையில் புதிதாக ஒரு நீர்தேக்கம் கட்டுவதற்கு 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றிருக்கின்றன,

    English summary
    tn cm edappadi palaniswami calls people and ngos, all Lake pools should be cleaned
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X