• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

லட்சத்தீவு என்பது மக்களின் சொர்க்கம்; நிர்வாகி பொது ஊழியன், ஆட்சியாளர் அல்ல - ப. சிதம்பரம் ட்வீட்

Google Oneindia Tamil News

சென்னை: லட்சத்தீவு என்பது மக்களின் நெறிமுறைகள் மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப அமைதி, நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சிக்கான சொர்க்கமாக இருந்தது என்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். லட்சத்தீவில் மத்திய அரசு நிர்வாகியான பாஜகவின் பிரபுல் கோடா படேலை நீக்கம் செய்ய வேண்டும் எனவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.

  புதிதாக வந்த BJP நிர்வாகி.. Lakshadweep-ல் மாறும் சட்டங்கள்.. கொந்தளிக்கும் Kerala

  கேரளக் கரையில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில், அரபிக்கடலில் அமைந்துள்ளது லட்சத்தீவு. இந்திய யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் சுமார் 65 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.

  Lakshadweep was a paradise for peace P.Chidambaram Tweets #saveLakshadweep

  அமைதியும் அழகும் நிறைந்த இந்த லட்சத்தீவில் மீன்பிடித் தொழிலும், சுற்றுலாத் துறையும் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. இந்த தீவின் அமைதி தற்போது மாறி விட்டது. போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்குக் காரணம் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பிரஃபுல் படேல் என்ற நிர்வாகியே என்று புகார் வாசிக்கிறார்கள், லட்சத்தீவில் வசிக்கும் மக்கள்

  ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளே லட்சத்தீவின் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டு வந்த நிலையில், அரசியல்வாதி ஒருவர் நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கொண்டுவந்த ஒவ்வொரு கட்டுப்பாடுகளும் மக்களை பாதித்துள்ளது.

  கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தால், 48 மணி நேரத்திற்குள் லட்சத்தீவுக்கு வரலாம் என்ற அறிவிப்பை பிரஃபுல் படேல் வெளியிட்டார். கடந்த ஜனவரி மாதம் வரை ஒரேயொரு கொரோனா பாதிப்பு கூட பதிவாகாத லட்சத்தீவில், இன்று 5 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியாக இது காரணமாக அமைந்துள்ளது என்பது மக்களின் குற்றச்சாட்டாகும்.

  இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் லட்சத்தீவில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்தது உச்சபட்ச கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் மதுபான விற்பனைக்கு அனுமதி அளித்திருக்கும் பிரஃபுல் படேல், பள்ளிகளில் அசைவ உணவிற்கு தடை விதித்திருக்கிறார்.

  இதனால் கொதித்தெழுந்த மக்கள் பாஜக நிர்வாகியை நீக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். #save Lakshadweep என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இப்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. லட்சத்தீவில் இருந்து வரும் செய்திகள் மிகவும் தீவிரமானவை என ட்விட்டரில் பதிவிட்டுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், அம்மக்களின் வாழ்க்கை, வாழ்வாதாரம் மற்றும் கலாசாரம் மீது சுமத்தப்பட்ட சவால்களை ஏற்க முடியாது என கண்டனத்தை பதிவு செய்துள்ளார். லட்சத்தீவு அதன் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதே, அங்குள்ள மக்களின் எண்ணமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

  இதனிடையே லட்சத்தீவில் மத்திய அரசு நிர்வாகியான பாஜகவின் பிரபுல் கோடா படேலை நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

  லட்சத்தீவு என்பது மக்களின் சொர்க்கம்; நிர்வாகி பொது ஊழியன், ஆட்சியாளர் அல்ல எனவும் ப. சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். லட்சத்தீவில் பாஜக நுழைந்து சர்ச்சையை ஏற்படுத்தி அராஜகம் செய்கிறது. பாஜக நிர்வாகியை பதவி நீக்கம் செய்து விட்டு அனுபவம் வாய்ந்த அதிகாரியை நியமிக்கும் நடைமுறை மீட்டெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  உள்துறை அமைச்சகத்தின் முன் ஒப்புதல் இல்லாமல் எந்த வரைவு ஒழுங்குமுறையும் வெளியிட முடியாது. எந்த கட்டத்தில் தவறாக வடிவமைக்கப்பட்ட விதிமுறைகள் முன் அங்கீகரிக்கப்பட்டன? என்று கேள்வி எழுப்பியுள்ள ப. சிதம்பரம், உள்துறை அமைச்சகம் பொறுப்பேற்று உடனடியாக வரைவு விதிமுறைகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

  English summary
  Lakshadweep was a paradise for peace, harmony and development according to the ethos and desire of the people. The administrator, who is a BJP leader, should be sacked immediately. The Ministry of Home Affairs should take responsibility and immediately repeal the draft regulations.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X