சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சத்தம் இல்லாமல் சுவரை உடைத்தது எப்படி? லலிதா ஜுவல்லரி கொள்ளையன் வெளியிட்ட பரபரப்பு சீக்ரெட்!

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையில் சுவர் இடிக்கப்பட்டது எப்படி, அங்கு இருந்த பாதுகாவலர்கள் ஏமாற்றப்பட்டது எப்படி என்று கொள்ளையன் மணிகண்டன் வாக்குமூலம் அளித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Lalitha Jewellers theft :சத்தம் இல்லாமல் சுவரை உடைத்தது எப்படி? கொள்ளையன் வெளியிட்ட சீக்ரெட்!

    சென்னை: திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையில் சுவர் இடிக்கப்பட்டது எப்படி, அங்கு இருந்த பாதுகாவலர்கள் ஏமாற்றப்பட்டது எப்படி என்று கொள்ளையன் மணிகண்டன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை ஒரு கிரைம் நாவல் போல நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. கடந்த 2ம் தேதி திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளை நடந்தது. இந்த கொள்ளையில் மொத்தம் 30 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

    இந்த கொள்ளையை திட்டமிட்டு முருகன் என்ற கொள்ளையனின் தலைமையிலான குழு அரங்கேற்றி உள்ளது . இதில் இதுவரை மணிகண்டன் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    லலிதா ஜுவல்லரி கொள்ளை.. தொடர்ந்து டிமிக்கி கொடுக்கும் முருகன்.. உறவுக்கார பெண் அதிரடி கைது!லலிதா ஜுவல்லரி கொள்ளை.. தொடர்ந்து டிமிக்கி கொடுக்கும் முருகன்.. உறவுக்கார பெண் அதிரடி கைது!

    என்ன விசாரணை

    என்ன விசாரணை

    இந்த கொள்ளையில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் உட்பட 17 பேரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் பல முக்கியமான விஷயங்கள் தற்போது வெளியாகி உள்ளது. முக்கியமாக அந்த கடையில் நான்கு பாதுகாவலர்கள் இருந்தும் எப்படி கொள்ளை நடந்தது என்று விளக்கி உள்ளனர்.

    என்ன வாக்குமூலம்

    என்ன வாக்குமூலம்

    மொத்தமாக ஜுவல்லரியில் நான்கு பாதுகாவலர்கள் இருந்துள்ளனர். அருகே இருந்த பள்ளியில் ஒரு பாதுகாவலர் இருந்துள்ளார். அதேபோல் நான்கு பாதுகாவலர்களும் தூங்காமல் இருந்துள்ளனர். இதுவும் சிசிடிவி வீடியோக்கள் மூலம் உறுதியாகி உள்ளது.

    கொள்ளை எப்படி

    கொள்ளை எப்படி

    ஆனால் இதை எல்லாம் மீறித்தான் இந்த கொள்ளை நடந்து இருக்கிறது. கொள்ளை நடந்த அன்று மழை காரணமாக சுவர் ஈரமாக இருந்துள்ளது. இதனால் சுவரை இடிக்காமல் மெதுவாக ரம்பம் வைத்து அறுத்து இருக்கிறார்கள். மிக மிக மெதுவாக துளையிட்டுள்ளனர்.

    எப்படி துளை

    எப்படி துளை

    சுமார் 2.30 மணி நேரம் சுவற்றில் துளையிட்டு இருக்கிறார்கள். சுவருக்கு ஒரு பக்கம் பாதுகாவலர் இருந்துள்ளார். ஆனால் அவருக்கே சத்தம் கேட்காத வகையில் இந்த வேலையை செய்துள்ளனர். இரண்டு பேர் சேர்ந்து 2.30 மணி நேரம் பொறுமையாக அறுத்து கற்களை எடுத்துள்ளனர்.

    யாருக்கும் கேட்கவில்லை

    யாருக்கும் கேட்கவில்லை

    இதனால்தான் அவர்கள் சுவரில் துளையிட்ட போது அது யாருக்கும் கேட்கவில்லை என்று வாக்குமூலம் மூலமாக தெரிய வந்துள்ளது. கண்டிப்பாக இதற்கு பின் அவர்கள் இது தொடர்பாக கடுமையாக பயிற்சி எடுத்து இருப்பார்கள். பயிற்சி இல்லாமல் இப்படி சத்தமே இல்லாமல் சுவரை உடைக்க முடியாது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Lalitha Jewellers Robbery: Manikandan explains hoe they broke into the store without making sound.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X