சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சமத்தா இப்படி உட்கார்ந்திருக்காரே.. யார்னு தெரியுதா.. நம்ம முருகன்தான்.. நோயுடன் போராடும் பரிதாபம்!

லலிதா ஜுவல்லரி முருகனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: இதோ இப்படி சமத்து பிள்ளையா வீல் சேரில் கண்ணை மூடிட்டு உட்கார்ந்திருக்கிறது யார்னு பார்த்தீங்களா.. சாட்சாத் திருவாரூர் திருடன் முருகன்தான்.. எய்ட்ஸ் வந்து இந்த கதி ஆகிவிட்டார்.. இப்போது கைகாலும் செயல்படாமல் வீல் சேரில் உட்கார வைத்திருக்கிறார்கள்!

Recommended Video

    Lalitha Jewellery robbery Murugan பக்கவாதத்தால் பாதிப்பு

    பேர் என்னவோ திருவாரூர் முருகன் என்று சொன்னாலும்,நேஷனல் லெவல் கொள்ளையில் ஈடுபட்டு வந்தவர்தான் முருகன்.. கொள்ளையடித்த பணத்தில் சினிமா படங்களை எடுக்க தெலுங்கு பக்கம் போனார்.

    அக்கா பையன் சுரேஷை நடிக்க வைக்கும் முயற்சியிலும் இறங்கினார்.. தெலுங்கு மொழியில் 2 படங்களும் தயாரித்தார்... படம் எதுவும் வெளியாகவில்லை.. நஷ்டம் ஏற்பட்டுவிடவும் திரும்பவும் கொள்ளையடிக்க மச்சான் சுரேஷூடன் பிளான்களை போட்டார்.

     லலிதா ஜூவல்லரி கொள்ளையன் முருகன் சீரியஸ்.. உயிருக்கு போராடுகிறாராம்.. தீவிர சிகிச்சை! லலிதா ஜூவல்லரி கொள்ளையன் முருகன் சீரியஸ்.. உயிருக்கு போராடுகிறாராம்.. தீவிர சிகிச்சை!

     திருச்சி

    திருச்சி

    திருச்சி வங்கியில் கொள்ளையடித்துவிட்டு அந்த பணத்தில் ஒரு படம் எடுக்க முடிவு செய்து பிரபல நடிகையை சந்தித்து கால்ஷீட் கேட்டார்.. அதற்கே காஸ்ட்லி நெக்லஸ் ஒன்றை கிப்ட் தந்துவிட்டு வந்தார்.. அந்த தமிழ் நடிகை யார் என கடைசி வரை தெரியவில்லை. அதேபோல, கொள்ளை அடித்த பணத்தில் தெலுங்கு நடிகைகளுடன் ஆட்டம் போட்டார்.. ஜாலியாக இருந்தார். கடைசியில் எய்ட்ஸ் வந்துவிட்டதாக சொல்லப்பட்டது.. அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டது.. ஆள் மெலிந்து விட்டார்.

     புது கெட்டப்

    புது கெட்டப்

    அரசு ஆஸ்பத்திரிகளில் வேறு வேறு பெயர்களில் அட்மிஷன் போட்டு இதற்காக சிகிச்சையும் எடுத்து கொண்டு வந்தாராம். இதன்பிறகு போலீசாருக்கு அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார்.. பல் செட் மாட்டி கொண்டார்.. புது கெட்டப் வந்துவிட்டது.. இதனால் இன்னும் எளிதாகவே நடமாட தொடங்கினார்.. அப்படித்தான் லலிதா ஜுவல்லரியில் ஓட்டைய போட்டு ஆட்டைய போட்டது!!

     பக்க வாதம்

    பக்க வாதம்

    பெங்களூரு ஜெயிலில் அடைத்த சில நாட்களிலேயே உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. அதாவது கை கால் வரவில்லையாம்.. பக்கவாத நோய் பாதிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.. இதனால் உடல்நிலை இன்னும் மோசமானது.. இவர் கைதாகி 90 நாட்களுக்கு மேலாகியும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.. கோர்ட் விடுமுறை என்பதால் சிக்கலானது.. இதனிடையே அவரது குடும்பத்தினர் முருகன் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்யவும், திருச்சி கோர்ட் ஜாமீன் வழங்கி உள்ளது.

     வீல் சேர்

    வீல் சேர்

    இதை வைத்தே பெங்களூருவில் உள்ள மற்ற வழக்குகளிலும் ஜாமீன் பெற முயற்சி நடக்கிறது.. எனினும் முருகனின் ஒரு போட்டோ இப்போது வெளியாகி உள்ளது.. வீல் சேரில் உட்கார வைக்கப்பட்டு இருக்கிறார்.. ஆள் இன்னும் மெலிந்து சோர்வாக இருக்கிறார்.. சேரில் உட்கார்ந்திருந்தாலும் கண்களை மூடி கொண்டுதான் இருக்கிறார். கை, கால் நடக்க முடியாது என்பதால் அவரால் எழுந்து நடக்க சாத்தியம் இல்லை

    உயிருக்கு ஆபத்தான சூழலை காரணம் காட்டி சிறைகளில் இருந்து பலமுறை வெளியே வரும் முருகன், உடல்நலன் தேறிய பிறகு தொடர்ந்து கைவரிசை காட்டுவதுதான் அவரது ஸ்டைல்.

    English summary
    trichy lalitha jewellery thief thiruvarur murugan got bail
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X