சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"தேங்க்ஸ்டா நண்பா".. ஒரு கரடிக்கு இவ்வளவு அறிவா.. என்னா ஒரு டிசிப்ளின்.. செம வீடியோ!

அசைந்து அசைந்து நடக்கும் கரடியின் வீடியோ வைரலாகிறது

Google Oneindia Tamil News

சென்னை: என்னதான் மனிதர்கள் என்று நாம் சொல்லிக் கொண்டாலும்.. ஆறறிவு கொண்டவர்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டாலும்.. விலங்குகளுக்கு நிகர் விலங்குகள்தான். பல நேரங்களில் புல்லரிக்க வைத்து விடுகின்றன.

Recommended Video

    ஒரு கரடிக்கு இவ்வளவு அறிவா.. என்னா ஒரு டிசிப்ளின்.. செம வீடியோ!

    உலகிலேயே மிகவும் ஒழுங்கான உயிரினம் நிச்சயம் விலங்குகள்தான். அவற்றின் முன்பு மனிதர்கள் நிற்கவே முடியாது. மனிதர்களிடம் உள்ள எந்த கெட்டப் பழக்கத்தையும் விலங்குகளிடம் பார்க்க முடியாது. போட்டி பொறாமை அடிதடி குழி பறிப்பது என எந்த கெட்ட பழக்கத்தையும் விலங்குகளிடம் பாார்க்க முடியாது.

    வன விலங்குகளின் வாழ்க்கை அத்தனை அழகானது.. நாம் அவற்றிடமிருந்து நிறையவே கற்றுக் கொள்ள முடியும். இதோ இந்த வீடியோ இன்னும் ஒரு உதாரணம்தான்.

    அடங்காத கோயம்பேடு கேஸ்கள்.. தினமும் விரட்டும் கொரோனா கிளஸ்டர்.. விடைதெரியாத சில கேள்விகள்! அடங்காத கோயம்பேடு கேஸ்கள்.. தினமும் விரட்டும் கொரோனா கிளஸ்டர்.. விடைதெரியாத சில கேள்விகள்!

     கரடி வீடியோ

    கரடி வீடியோ

    பிரபல ஐஎப்எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டுள்ளார். அந்த வீடியோவில் ஒரு கரடி அழகாக ஆடி அசைந்து நடந்து செல்கிறது. பார்க்கவே அவ்வளவு க்யூட்டாக இருக்கிறது அந்த கரடி. ரோட்டோரமாக ஒரு சைன் போர்டு சாய்ந்து கிடக்கிறது. ஜிங்கு ஜிங்குன்னு ஒரு சைசாக நடந்து செல்லும் கரடி அந்த போர்டுக்கு அருகே வந்ததும் செய்த காரியம்தான் இங்கு ஹைலைட்.

     ஜிங்கு ஜிங்கு நடை

    ஜிங்கு ஜிங்கு நடை

    கீழே விழுந்து கிடந்த அந்த பார்டை தனது வாயால் மெல்ல நெம்பி எடுத்து தூக்கி நிறுத்தியது. அத்தோடு நில்லாமல் அதை சரியாகவும் வைத்து விட்டு அது பாட்டுக்கு போய்க் கொண்டே இருக்கிறது. என்ன ஒரு அறிவாற்றல் பாருங்க அந்த கரடிக்கு.. அதுக்கு இருக்கும் அறிவு மெய் சிலிர்க்க வைக்கிறது. விலங்குகள்தானே என்று சாதாரணமாக சொல்லி விட்டு கடந்து சென்று விடுகிறோம். ஆனால் இந்த கரடி செய்த காரியம் நிச்சயம் ஆச்சரியப்பட வைக்கிறது.

     ஆரஞ்சுப் பழமும் குரங்கும்

    ஆரஞ்சுப் பழமும் குரங்கும்

    சமீபத்தில் இதேபோல இன்னொரு புகைப்படத்தையும் பார்க்க நேர்ந்தது. அது காரில் இருக்கும் ஒருவர் குரங்கு ஒன்றிடம் ஆரஞ்சுப் பழத்தைக் கொடுக்கிறார். அதை வாங்கிய அந்தக் குரங்கு அவரைப் பார்த்து அப்படி அழகாக சிரிக்கிறது. தேங்க்ஸ்டா நண்பா என்று சொல்வது போல அப்படி அழகான க்யூட் சிரிப்பு அந்த குரங்கின் முகத்தில்.

     நிறைய கத்துக்கலாம்

    நிறைய கத்துக்கலாம்

    ஒரு விலங்குக்கு இவ்வளவு அறிவா என்ற ஆச்சரியத்தை விட இந்த விலங்குகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.. நெருக்கடி நிலையிலும் கூட மது குடித்தே ஆக வேண்டும் என்று பலர் வயது வித்தியாசமே இல்லாமல் தெருத் தெருவாக நிற்பதைப் பார்க்கும்போது வந்த வேதனை, இந்த கரடி, குரங்கைப் பார்த்ததும் ஓடிப் போய் விட்டது.

    English summary
    This laughing monkey and disciplined beer have made humans to learn something.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X