குறைந்த விலை குலோப்ஜாமூன்! பேக்கரி ஓனர் முகத்தில் பளார் விட்ட பாலாஜி! சிசிடிவியால் சிக்கிய "லோக்கல் கை"
சென்னை : சென்னையில் குறைந்த விலைக்கு குலோப்ஜாமூன் தரக்கோரி பேக்கரி கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கிய சட்டக்கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை வைத்து மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை மடிப்பாக்கம் பொன்னியம்மன் கோயில் தெருவில் நியூ பாம்பே ஸ்வீட் ஸ்டால் என்ற பெயரில் இனிப்பு வகைகளை விற்பனை செய்யும் கடை உள்ளது.
இந்த கடையின் உரிமையாளர் லோகேஷ் கான் நேற்றைய முன்தினம் இரவு 10:15 மணியளவில் கடையை மூடும் நேரத்தில் இருவர் கடைக்கு வந்துள்ளனர்.
பட்டப்பகலில் நடுரோட்டில் பைனான்சியர் வெட்டிக்கொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி - 2 பேர் சரண்!

குளோப்ஜாமூன் விலை
கடைக்கு வந்த இருவர் குளோப்ஜாமூன் எவ்வளவு என்று கேட்டதற்கு 100 ரூபாய் என கடையின் உரிமையாளர் லோகேஷ் கான் கூற லோக்கல்ல இருக்குற எங்களுக்கே 100 ரூபாயா என கேட்டு இருவரும் திடீரன அடித்துள்ளனர். பின்னர் கடை உரிமையாளரை கடைக்குள் தள்ளி இருவரும் உள்ளே சென்று உரிமையாளரின் கன்னத்தில் பளார் பளார் என மாறி மாறி அறைந்தனர்.

திடீர் தாக்குதல்
பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்லோகேஷ் கான் கடையில் பாதுகாப்பிற்காக பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான தன்னை தாக்கும் காட்சியுடன் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் சிவக்குமாரிடம் நேற்று நண்பகல் 12 மணியளவில் புகார் அளித்துள்ளார்.

ஒருவர் கைது
புகார் அளித்த அடுத்த அரை மணி நேரத்தில் ஆய்வாளர் சிவக்குமார் உள்ளிட்ட போலீசார் பேக்கரி உரிமையாளரை தாக்கிய ஒருவரை கைது செய்தனர். பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் மடிப்பாக்கம் கன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்த 28-வயதான பாலாஜி என்பதும் இவர் ஆந்தரா, அனந்தபூர் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு சட்டம் படித்து வருவதும் தெரியவந்துள்ளது.

போலீசார் விசாரணை
பின்னர் பாலாஜி மீது 5 பிரிவீன் கீழ் வழக்கு பதிவு செய்த மடிப்பாக்கம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள மதனை போலீசார் தேடி வருகின்றனர். குறைந்த விலைக்கு குலோப்ஜாமூன் தரக்கோரி பேக்கரி கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கிய சட்டக்கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டுள்ள அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.