சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கஜா புயலை தேசிய பேரிடராக அறிவிங்க.. ஆளுநர் மாளிகையை முற்றுகையிட வந்த மாணவி நந்தினி கைது

Google Oneindia Tamil News

சென்னை: ஆளுநர் மாளிகையை முற்றுகையிட வந்த சட்டக் கல்லூரி மாணவி நந்தினி கைது செய்யப்பட்டார்.

கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்து டெல்டா மாவட்ட மக்கள் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அவர்களுக்கு அரசு நிவாரண உதவி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரண உதவி செய்யப்பட்டாலும், போதுமானதாக இல்லை என கூறப்படுகிறது.

law student Nandhini arrested

குடியிருக்க வீடு, குடிக்க தண்ணீர் இன்றியும், போதிய உணவு இல்லாமல் பொதுமக்கள் ஆங்காங்கே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தென்னை மரங்கள், விவசாய பயிர்கள் கஜா புயலில் அழிந்ததால், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி விவசாயிகள் உள்ளனர். முழுமையான மின் இணைப்புக்கு இன்னும் சில வாரங்கள் ஆகும் என கூறப்படுகிறது.

இதுவரை தமிழகத்தை தாக்கிய இயற்கை பேரிடர்களுக்கு போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்கியதில்லை. அதே நேரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களும் கிடைப்பதில்லை என்பது பரவலாக பேச்சு. இதற்கிடையே, கோர தாண்டவம் ஆடிய கஜா புயலை தேசிய பேரிடராக அறிவிக்க பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. புயலால் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் மீண்டும் முழுமையாக பார்வையிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

பாருங்கய்யா.. பெல்ஜியம் பீட்டர் கூட களம் இறங்கி விட்டார்.. நம்ம தலைவர்கள் பலரை இன்னும் காணோம்! பாருங்கய்யா.. பெல்ஜியம் பீட்டர் கூட களம் இறங்கி விட்டார்.. நம்ம தலைவர்கள் பலரை இன்னும் காணோம்!

இந்தநிலையில், கஜா புயலை தேசிய பேரிடராக அறிவிக்க மறுக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஆளுநர் மாளியை முற்றுகையிட வந்த சட்டக் கல்லூரி மாணவி நந்தினியை போலீசார் தடுத்தி நிறுத்தி கைது செய்தனர் . மாணவி நந்தினியின் தந்தை ஆனந்தனையும் போலீஸ் கைது செய்தது. சின்னமலையில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி வந்த போது நந்தினியை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தது.

English summary
Law student Nandhini arrested on midway who came to besiege the governor house for demands declare a national disaster
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X