சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

7 பேர் விடுதலையில் சட்டம் கடமையை செய்யவேண்டும்.. தமாகா நிலைப்பாட்டை சொன்ன ஜி.கே.வாசன்

Google Oneindia Tamil News

Recommended Video

    7 பேர் விடுதலையில் சட்டம் கடமையை செய்யவேண்டும் - ஜி.கே.வாசன்- வீடியோ

    சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை விவகாரத்தில் சட்டம் தமது கடமைகளை செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.

    சென்னை கோடம்பாக்கத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் அலகிரியாஸ் ஹாலி டே இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. நிகழ்ச்சியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் துவங்கி வைத்தார்.

    Law will decide regarding rajiv gandhi assassination convicts release says g.k.vasan in chennai

    நிகழ்ச்சியில் மக்களுக்கு அவர் துணிப்பைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு ஜி.கே.வாசன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டியது என்பது மிகவும் அவசியமானது. காடுகளை தொடர்ந்து அழிப்பதால் புவி வெப்பமாகிறது.

    அதன்காரணமாக, நீர், நிலைகள் வறட்சி அடைகிறது.இதனால் விவாசயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வனங்களை அழிப்பதை நாம் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக்கை உபயோகிக்க கூடாது என்பதை வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தமிழக அரசு தடைசெய்துள்ளது. அதற்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். இந்த பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு என்பது கிராமபுறங்களையும் சென்றடைய வேண்டும்.

    ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை விவகாரத்தில் சட்டம் தன்னுடைய கடமைகளை செய்ய வேண்டும். அது தான் தமிழ் காங்கிரஸ் கட்சியின் நிலைபாடு என்று அவர் கூறினார்.

    English summary
    Law will decide regarding Rajiv Gandhi assassination convicts including Murugan release says TMC President G.K.Vasan in Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X