சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யார் மனதும் காயப்படாமல் பேசியவர் ஞானதேசிகன்... நினைவலைகளை பகிரும் அரசியல் தலைவர்கள்..!

Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், யார் மனமும் காயப்படும் படி நடந்துகொள்ளாதவர் என அரசியல் கட்சித் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

மருத்துவமனையில் இருந்து மீண்டு வந்துவிடுவார் என எண்ணியிருந்த நிலையில் மீளாமல் சென்றுவிட்டார் என வேதனை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தலைவர்கள் விடுத்துள்ள இரங்கல் அறிக்கை மற்றும் நினைவுக் குறிப்பின் விவரம் பின்வருமாறு;

'மாபியா' ஆதரவை பாஜக-அதிமுக பெற்றால் துக்ளக் ஆதரிக்காது.. குருமூர்த்தி திடீர் விளக்கம்! 'மாபியா' ஆதரவை பாஜக-அதிமுக பெற்றால் துக்ளக் ஆதரிக்காது.. குருமூர்த்தி திடீர் விளக்கம்!

தமிழிசை இரங்கல்

தமிழிசை இரங்கல்

யாருடைய மனதும் புண்படாமல் பேசக்கூடிய சிறந்த பண்பாளர் ஞானதேசிகன். இயக்கங்களின் எல்லை தாண்டி நட்பு பாராட்டியவர். ஞானதேசிகன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

நீங்கா இடம்

நீங்கா இடம்

த.மா.கா. துணைத் தலைவரும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நெருங்கிய நண்பருமான ஞானதேசிகன் அவர்கள் மறைவெய்தியதை அறிந்து மிகுந்த மனவேதனைக்குள்ளானேன். இந்திய, தமிழக அரசியலில் பெரும்பங்காற்றிய அவர் நம் நெஞ்சங்களில் என்றும் நீங்கா இடம் கொண்டவர்.
அவரை பிரிந்து வாடும் உற்றார் உறவினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.

பேரிழப்பு

பேரிழப்பு

இளமைப் பருவம் முதல் பெருந்தலைவர் காமராஜர் மீது பற்றுகொண்டு மாணவர் காங்கிரஸில் தம்மை இணைத்துக்கொண்டவர். அன்னை இந்திரா காந்தி, அமரர் ராஜீவ் காந்தி, அன்னை சோனியா காந்தி ஆகியோரின் நம்பிக்கையை பெற்றவர். மறைந்த மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனார் அவர்களின் அன்பையும், ஆதரவையும் பெற்று அவரது தலைமையில் தீவிரமான அரசியல் பணிகளை மேற்கொண்டவர். சிறந்த வழக்கறிஞர். பழகுவதற்கு இனிய பண்பாளர். தம் வாழ்நாள் முழுவதும் தேசியவாதியாக வாழ்ந்து மறைந்த திரு பி.எஸ்.ஞானதேசிகன் அவர்களது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

வைகோ புகழாரம்

வைகோ புகழாரம்

ஐயா ஜி.கே. மூப்பனார் அவர்களுடைய நம்பிக்கைக்கு உரியவராகத் திகழ்ந்தார். அவர் மீது ஞானதேசிகன், மிகுந்த பற்றும் பாசமும் கொண்டு இருந்தார். தற்போது, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகின்றார். பழகுதற்கு இனிய பண்பாளர், நண்பர் ஞானதேசிகன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினருக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

புள்ளி விவரங்கள்

புள்ளி விவரங்கள்

ஐயா. மூப்பனார் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட அரசியல் தலைவர் அவர். மதிப்புமிக்க அரசியலாளர்களில் ஒருவராக பயணித்தவர்.
சிறந்த நாடாளுமன்றவாதியாக தன்னை நிருபித்த அவர், புள்ளி விபரங்களோடு பேசக் கூடியவராகவும், பண்பாளராகவும் தமிழக அரசியலில் வலம் வந்தார். அவரை இழந்து வாடும் அண்ணன் GK வாசன் உள்ளிட்ட தமாகா வினருக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் அபிமானிகளுக்கும் மனிதநேய ஐனநாயக கட்சியின் சார்பில் எமது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

English summary
Leaders mourn the death of Gnanadesikan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X