சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தை மிரட்டும் தண்ணீர் பிரச்சனை.. பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் விளக்கம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையை ஆட்டிப்படைக்கும் தண்ணீர் பஞ்சம்..4000 ஹோட்டல்களை மூட முடிவு!

    சென்னை: தண்ணீர் பிரச்சனையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

    சென்னையில் சொல்ல முடியாத அளவுக்கு தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. அன்றாட தேவை, குடிநீர் என அனைத்திற்கும் குடங்களுடன் அலைந்து வருகின்றனர் மக்கள்.

    தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு திருவள்ளூர் உள்ளிட்ட பக்கத்து மாவட்ட விவசாயிகளின் போர் குழாய்களில் இருந்து தண்ணீர் பெற்று வருகிறது. இதேபோல் சிக்கராயபுரம் உள்ளிட்ட கல்குவாரிகளில் இருந்தும் தண்ணீரை பெற்று மக்களின் தாகத்தை போக்கி வருகிறது.

    பள்ளி மாணவர்கள் 'யூ டியூப்' மூலம் பாடம் படிக்க ஏற்பாடு... அமைச்சர் செங்கோட்டையன் அசத்தல் பள்ளி மாணவர்கள் 'யூ டியூப்' மூலம் பாடம் படிக்க ஏற்பாடு... அமைச்சர் செங்கோட்டையன் அசத்தல்

    தொழில்நிறுவனங்கள் பாதிப்பு

    தொழில்நிறுவனங்கள் பாதிப்பு

    இருப்பினும் சென்னை மக்களின் தண்ணீர் தட்டுப்பாட்டை முழுவதுமாக போக்க முடியவில்லை. தண்ணீர் பஞ்சம் பொதுமக்கள் மட்டுமின்றி தொழில்நிறுவனங்களையும் பாதித்துள்ளது.

    ஹோட்டல்கள் மூடப்படும் ஆபத்து

    ஹோட்டல்கள் மூடப்படும் ஆபத்து

    தண்ணீர் பற்றாக்குறையால் ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்கும்படி அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    பள்ளிகள் தகவல்

    பள்ளிகள் தகவல்

    பள்ளிகளும் தண்ணீர் பிரச்சனையில் இருந்து தப்பவில்லை. மாணவர்களுக்கு புத்தகப் பையோடு குடிக்க தண்ணீர் பாட்டிலையும் கொடுத்து அனுப்புமாறு பெற்றோர்களின் செல்போனுக்கு குறுந்தகவல்களை பள்ளி நிர்வாகம் அனுப்பியது.

    பள்ளிகளுக்கு விடுமுறை

    பள்ளிகளுக்கு விடுமுறை

    இந்நிலையில் பள்ளிகளில் ஏற்படும் தண்ணீர் பிரச்சனைக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தீர்வு காணப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஒரு தகவல் தீயாய் பரவியது.

    அமைச்சர் மறுப்பு

    அமைச்சர் மறுப்பு

    இந்நிலையில் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். கோபிச்செட்டி பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் தண்ணீர் பிரச்சனையால் பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான தகவல் தவறானது என்றார்.

    அது ஒரு வதந்தி

    அது ஒரு வதந்தி

    மேலும் அது ஒரு வதந்தி என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழகத்தில் சில பள்ளிகளில் தண்ணீர் பிரச்சனை இருப்பதாக தகவல்கள் வருகிறது என்ற அவர், தண்ணீர் தேவையை பூர்த்தி செய்துக்கொள்ள பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

    ஜூன் 17 முதல் ஆய்வு

    ஜூன் 17 முதல் ஆய்வு

    தண்ணீர் பிரச்சனையை போக்க பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நிதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். பள்ளிகளில் உள்ள தண்ணீர் பிரச்சனை குறித்து ஜூன் 17 ஆம் தேதி முதல் அதிகாரிகள் ஆய்வு பணிகளை மேற்கொள்ளவுள்ளனர் என்றும் பள்ளிகளில் தண்ணீர் பிரச்சனை குறித்து தெரிவித்தால் 24 மணி நேரத்தில் சரி செய்யப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

    English summary
    Minister Sengottaiyan has denied that schools will be closed due to water crisis. He said Its a false news.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X