சட்டென லியோனி என்ன இப்படி சொல்லிட்டாரே.. திமுகவுக்கு என்ன ஆச்சு?.. குஷியில் துள்ளி குதிக்கும் பாஜக
சென்னை: தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் லியோனி சொன்ன அந்த வார்த்தைதான், தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக உருவெடுத்துள்ளது..!
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜகவுடன் பல்வேறு கருத்துகளுடன் மோதல் போக்கையே கடைப்பிடித்துவருகிறது. தொடர்ந்து தன்னுடைய நிலைப்பாட்டில் கருத்தியல் ரீதியிலும் மோதல் போக்கையே கடைப்பிடித்துவருகிறது.
குறிப்பாக, மத்திய அரசை "ஒன்றிய அரசு" என்று அழைத்து, பாஜகவுக்கு ஷாக் தந்ததை மறுக்க முடியாது.. இந்த ஒன்றிய அரசு என்ற வார்த்தையே சில மாதங்களுக்கு சோஷியல் மீடியாவில் பேசுபொருளாகி வந்ததையும் மறக்க முடியாது.
ஜெயலலிலா எப்படி இறந்தார் தெரியுமா..? திண்டுக்கல் லியோனி பேச்சால் எழுந்த சர்ச்சை

ஒன்றிய அரசு
அதாவது, முதல்வராக பொறுப்பேற்றதுமே, முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் "ஒன்றிய அரசு" என்று குறிப்பிட்டு எழுதி, டெல்லியை கடுப்பாக்கியிருந்தார்.. இதற்கு முன்புகூட, மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சீமான் சொல்லி வந்தாலும், ஸ்டாலின் சொன்னதுமே, அந்த வார்த்தை தேசிய அளவில் கவனம் பெற்றுவிட்டது.. அதனால், திமுக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரை, மத்திய அரசு என்பதா? அல்லது ஒன்றிய என்பதா? என்ற குழப்பமும் நீடித்தது.

ஐ லியோனி
இதற்கு பிறகுதான், திமுக தன்னுடைய வீர்யத்தை சற்று குறைத்தது.. ஆளுநர் உரையில், மத்திய அரசு என்றே பலமுறை குறிப்பிட்டு பேசியதே தவிர, ஒன்றிய அரசு என்று ஓரிரு முறைதான் உச்சரிக்கப்பட்டது.. இந்த சூழலில், திடீரென ஒரு அறிவிப்பு தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பில் வெளியாகி உள்ளது.. அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் அதன் தலைவர் ஐ லியோனி ஆவார்.

லியோனி அறிவிப்பு
பள்ளிப் பாடப்புத்தகங்களில் மத்திய அரசு என்ற வார்த்தைக்கு பதில் ஒன்றிய அரசு என இந்த கல்வியாண்டில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என்று லியோனி தெரிவித்துள்ளார்.. வழக்கமாக ஒவ்வொரு வருஷமும், தேவைக்கு ஏற்ப, பள்ளிப் பாடப்புத்தகங்களில் மாநில அரசுகள் மாற்றங்களை மேற்கொள்ளும்... அப்படித்தான் இந்த வருஷமும், தமிழ்நாடு பாடப்புத்தகங்களில் சில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது..

கருணாநிதி
அதில், மத்திய அரசு என்ற வார்த்தைக்கு பதிலாக ஒன்றிய அரசு என்று மாற்றுதல், கருணாநிதியின் செம்மொழி பாடலை புகுத்துதல், ஆளுநரின் அதிகாரங்கள் பற்றிய குறிப்பில் திருத்தல் செய்தல் போன்ற மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டு வந்தது... ஆனால், வரும் கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படாது என்று லியோனி கூறியுள்ளார்..

லியோனி சொன்ன காரணம்
மேலும், 2022-2023ஆம் கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டுவிட்டதாகவும், 2023-2024ஆம் கல்வியாண்டுக்கான புத்தகங்களில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி & பயிற்சி நிறுவனத்தின் பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.. அதுமட்டுமல்ல, திருத்தம் இருப்பின் அது, 2023-2024ஆம் கல்வியாண்டில் அமலாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

அச்சடிக்கப்படவில்லை
லியோனி இப்படி அறிவித்துள்ளது மீண்டும் பேசுபொருளாகி உள்ளது.. காரணம், பொறுப்பேற்ற உடனேயே லியோனி ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "ஒன்றிய அரசு எனும் வார்த்தையை மக்கள் சிறப்பாக பயன்படுத்த துவங்கி விட்டனர். அடுத்து பருவ புத்தகங்கள் அச்சிடும் போதும் மத்திய அரசு என்ற சொல் நீக்கப்பட்டு ஒன்றிய அரசு என்று புத்தகங்களில் அச்சிடப்படும்" என்றும் உறுதி கூறியிருந்தார்.. இப்போது ஏன் ஒன்றிய அரசு என்று அச்சிடப்படவில்லை? கடந்த ஒரு வருடமாகவே இந்த விவகாரம் இருக்கும்போது, பாடப்புத்தகங்களில் ஏன் அவ்வாறு அச்சடிக்கப்படவில்லை என்ற கேள்வி பரவலாக எழுகிறது.. மற்றொருபுறம் இதுகுறித்து சிலர் கருத்துக்களையும் சொல்ல ஆரம்பித்துள்ளனர்..

லியோனி
அதாவது, பாஜகவை திமுக அளவுக்கு அதிகமாக பகைத்து கொள்ள முடியாது, ஓரளவு இணக்கமாக போக வேண்டிய சூழல் உள்ளது.. தேவையில்லாமல் மத்திய அரசை சீண்டுவதால், பொதுமக்களுக்குதான் பாதிப்பு ஏற்படும்.. குடியரசு தலைவர் தேர்தலை கணக்கு செய்து, பாஜகவும் தற்போதைக்கு திமுக மீதான வெறுப்புணர்ச்சியை லேசாக கைவிட்டு வரும் சூழலில், இந்த விஷயத்திலும் நாசூக்காகவே கையாள வேண்டியிருக்கும் என்ற ஆதரவு கருத்தும் வருகிறது.. மேலும் சிலரோ, "பாஜக மீது பயமா? அந்த பயம் இருக்கட்டும்" என்றும் விமர்சித்து வருகிறார்கள்.. !