சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாடு மாறி வந்த சிறுத்தை குட்டி.. புட்டி பால் குடித்து ஹேப்பி.. தாய்லாந்துக்கே திரும்ப தயாராகிறது

மீட்கப்பட்ட சிறுத்தை குட்டியை பாங்காக் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னைக்கு நாய்க்குட்டியென கடத்தி வரப்பட்ட சிறுத்தை குட்டி-வீடியோ

    சென்னை: நாடு மாறி வந்த சிறுத்தை குட்டி கொஞ்சம் கொஞ்சமாக புது இடத்துக்கு ஏத்த மாதிரி மாறி வருகிறது.

    சென்னை ஏர்போர்ட்டில், கடந்த 2-ம் தேதி நள்ளிரவு, தாய்லாந்தில் இருந்து வந்த விமானத்தில் பலர் இறங்கி வந்து கொண்டிருந்தனர். அதில் ஒருவர் மட்டும் கையில் ஒரு மூங்கில் கூடையை பிடித்து கொண்டு நடந்தார். ஆனாலும் அந்த கூடை இப்படியும் அப்படியும் ஆடிக் கொண்டே இருந்ததை அங்கிருந்த அதிகாரிகள் கவனித்து விட்டார்கள்.

    அதனால் அந்தநபரை அழைத்து கூடையில் எட்டி பார்த்தால் கர்சீப் போட்டு மூடியிருந்தது. கூடைக்குள்ளே இருந்து வித்தியாசமான சத்தம் வந்தது. அதனால் கூடையில் என்ன என்று கேட்டார்கள். "இது காஸ்ட்லி நாய், வீட்டில் வளர்க்க கொண்டு போகிறேன்" என்றார்.

    எதுக்கு கர்சீப்?

    எதுக்கு கர்சீப்?

    நாயை எதுக்கு கர்சீப் போட்டு மூடிக்கொண்டு போக வேண்டும் என்று கேட்டு, போலீசார் அதனை விலக்கி பார்த்தனர். அப்போது ஒரு சிறுத்தைக்குட்டி திருதிருவென விழித்துகொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தது. சட்டவிரோதமாக நாடு கடத்தி கொண்டு வந்தது என்பது தெரியவந்ததையடுத்து சிறுத்தைக்குட்டியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    50 நாள் ஆன குட்டி

    50 நாள் ஆன குட்டி

    பார்க்கவே அந்த குட்டி ரொம்ப வீக்-ஆக இருந்தது. அதன் எடை 1.1 கிலோதான் இருக்கும். பிறந்து 50 நாள் ஆன குட்டியாம். விமானத்தில் வருவதற்கு முன்பு எப்போ, என்ன சாப்பிட்டதோ தெரியாது என்பதால் உடனடியாக அங்கிருந்த விமான நிலைய அதிகாரிகள் ஒரு பாட்டிலில் பால் எடுத்து வந்து சிறுத்தைக்கு புகட்டினார்கள்.

    விளையாடி வருகிறது

    விளையாடி வருகிறது

    பிறகு, உடனடியாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொண்டு போய் விடப்பட்டது. கடந்த 5 நாளாக அந்த பூங்காவில் சிறுத்தைக்குட்டி சூப்பராக விளையாடி வருகிறதாம். புது இடம் என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக பழக்கப்படுத்தி கொண்டு வருகிறதாம்.

    சுறுசுறுப்பாக இருக்கிறது

    சுறுசுறுப்பாக இருக்கிறது

    பூங்கா நிர்வாகமும் இந்த ஃபாரீன் சிறுத்தைக்குட்டியை கொஞ்சம் ஸ்பெஷலாகவே கவனிக்கிறார்கள். இப்போது குட்டி நல்ல நிலையில் இருக்கிறதாம். சுறுசுறுப்புடனும் மகிழ்ச்சியுடனும் பூங்காவை சுற்றி வருகிறது. ஆனால் விஷயம் என்னவென்றால், விலங்குகள், பறவைகள் என எதுவாக இருந்தாலும், அதனுடைய சொந்த இடத்துக்கே திரும்ப அனுப்ப வேண்டியது இந்தியாவின் கடமை.

    ஸ்பெஷல் கவனிப்பு

    ஸ்பெஷல் கவனிப்பு

    அதனால் திரும்பவும் இந்த சிறுத்தைக் குட்டி தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. சிறுத்தை குட்டியை திரும்ப பெற்றுக்கொள்ளவும் தாய்லாந்து அரசு ஒப்புக் கொண்டுவிட்டது. எப்படியோ, இந்தியாவுக்கு திடீர் விசிட் அடித்துள்ள இந்த ஃபாரீன் குட்டிக்கு ஸ்பெஷலான கவனிப்பு பூங்காவில் நடந்து வருகிறது.

    English summary
    Leopard Cub rescued at Chennai Airport to be returned to Bangkok
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X