சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போதை இல்லாத, சமத்துவ சமூகநீதி இந்தியாவை உருவாக்குவோம்:டாக்டர் ராமதாஸ்,அன்புமணி சுதந்திர தின வாழ்த்து

Google Oneindia Tamil News

சென்னை: நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எல்லைப்பகுதியில் ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மது, சூது, போதை இல்லாத வளமான இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம் என்றும், சமத்துவமும், சமூக நீதியும் மிளிரும்
இந்தியாவை உருவாக்குவோம் என்றும் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளனர்.

ஆன்லைன் ரம்மி விளம்பரம்.. சரத் குமார் நடிக்க வேண்டாம்.. அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்! ஆன்லைன் ரம்மி விளம்பரம்.. சரத் குமார் நடிக்க வேண்டாம்.. அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

 நீண்ட பயணம்

நீண்ட பயணம்

பாமக நிறுவனர் ராமதாஸ் சுதந்திர தின விழாவையொட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "சுதந்திர இந்தியா 75ஆவது ஆண்டை நிறைவு செய்து, 76-ஆவது ஆண்டு விழாவை நாளை கொண்டாடும் நிலையில், இந்திய மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகளை கடந்திருப்பது சாதாரணமான ஒன்றல்ல. இந்த நீண்ட பயணத்தில் பல மைல்கற்களை கடந்திருக்கிறோம். அனைத்துத் துறைகளிலும் முன்னேறியிருக்கிறோம்; நிலவுக்கு விண்கலம் அனுப்பியிருக்கிறோம்; போர்ப்படை அணிகளை தலைமையேற்று வழிநடத்தும் வீராங்கனைகளைக் கூட உருவாக்கியிருக்கிறோம்.

 உண்மையான விடுதலை

உண்மையான விடுதலை

ஆனால், வறுமையை ஒழித்திருக்கிறோமா? அனைவரும் சமம் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறோமா? இந்த வினாக்களுக்கெல்லாம் இல்லை என்பதுதான் பதில் என்றால், நாம் அடைந்த விடுதலையைக் கொண்டாடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை அடைந்தது மற்றும் விடுதலை அல்ல. பொருளாதாரம், சமூகம் என எவையெல்லாம் மனிதர்களை அடிமைபடுத்துகின்றனவோ, அவை அனைத்திலும் சமநிலையை உருவாக்கி, அவற்றிலிருந்து மக்களுக்கு விடுதலை அளிப்பது தான் உண்மையான விடுதலை ஆகும்.

சமூகநீதி

சமூகநீதி

அனைத்திலும் சமநிலையை உருவாக்கி சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால், அதற்கான கருவி சமூகநீதி தான். அது தமிழ்நாட்டு மக்களுக்கு இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள பாட்டாளி மக்களுக்கு போராடிப் பெற்ற சமூகநீதி என்னும் கனியை அந்த மக்கள் அனுபவிப்பதற்கு முன்பாகவே சமூகநீதிக்கு எதிரான கூட்டம் சதி செய்து பிரித்துவிட்டது. பறிக்கப்பட்ட சமூகநீதியை மீண்டும் வென்றெடுக்கும் நாள் தான் உண்மையான விடுதலை நாளாகும்.

உறுதியேற்பு

உறுதியேற்பு

ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்த நாம், வறுமையிலிருந்தும் விடுதலை அடைய வேண்டும். அனைவருக்கும் கவுரவமான வேலை, கண்ணியமான வாழ்க்கை, சமத்துவமான சமுதாயம், அடித்தட்டு மக்களுக்கு சமூகநீதி, அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி ஆகியவை நிறைந்த சமத்துவ நாட்டை உருவாக்க கடுமையாக உழைப்பதற்கு இந்த விடுதலை நாளில் நாம் உறுதியேற்க வேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

இவரைத் தொடர்ந்து மது, சூது, போதை இல்லாத வளமான இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம் என சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா அதன் 76-ஆவது விடுதலை நாளை கொண்டாடும் வேளையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

 மகிழ்ச்சி

மகிழ்ச்சி

மேலும், "ஒரு நாட்டு மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் வரம் என்பது விடுதலை என்பதை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? 400 ஆண்டுகளுக்கு மேல் ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியா 75 ஆண்டுகளுக்கு முன் அடிமைத்தளையிலிருந்து விடுபட்ட போது ஒட்டுமொத்த இந்திய மக்களும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. விடுதலை என்ற அந்த ஒற்றை வார்த்தையின் மூலமாகத் தான் ஆங்கிலேயர்களின் பொருளாதார, சமூக, கல்விச் சுரண்டல்களில் இருந்து நாம் தப்பித்து வந்தோம். அந்த வகையில் ஒவ்வொரு விடுதலை நாளும் பெருமகிழ்ச்சி அளிக்கும் நாள் தான் என்பதில் ஐயமில்லை.

போதை

போதை

ஆனால், அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கும் நிலையில் நாம் இல்லை என்பது தான் இந்த மகிழ்ச்சியான நாளில் வருத்தமான உண்மை. ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலையடைந்த நாம், இப்போது போதை, மது, சூது ஆகிய மூன்று அரக்கர்களிடம் சிக்கிக் கொண்டு தவிக்கிறோம். ஆங்கிலேயர்களை விட இந்த சமூகக் கேடுகள் நம்மை பல மடங்கு கூடுதலாக சுரண்டுகின்றன. ஆங்கிலேயர்களால் ஏற்பட்ட உயிர், பொருளாதார இழப்புகளை விட இந்த அரக்கர்களால் ஏற்படும் இழப்புகள் அதிகம். ஆங்கிலேயர்களிடம் இருந்து பெற்ற விடுதலையை போதை, மது, சூது ஆகிய அரக்கர்களிடம் நாம் இழந்து கொண்டிருக்கிறோம். மகிழ்ச்சியான மனித வாழ்க்கை இந்த சமூகக் கேடுகளால் நரகமாக மாறிக் கொண்டிருப்பதை உணர முடிகிறது.

 மனித உரிமை

மனித உரிமை

சுதந்திரம் என்பது ஒற்றை வார்த்தை அல்ல. அமைதி, வளம், சமத்துவம், வாழ்வுரிமை, சமூகநீதி, கவுரமான வாழ்க்கை உள்ளிட்ட மனித உரிமைகளின் ஒட்டுமொத்த தொகுப்பு தான் விடுதலை ஆகும். இத்தகைய சிறப்புமிக்க விடுதலையை இந்த நாடும், நாட்டு மக்களும் முழுமையான அனுபவிக்க வேண்டும் என்றால், போதை, மது, சூது ஆகிய மூன்று சமூகக் கேடுகளும் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்; அவை இல்லாத வளமான இந்தியாவை உருவாக்க இந்த விடுதலை நாளில் அனைத்து மக்களும் உறுதியேற்றுக் கொள்வோம்" என்று வலியுறுத்தியுள்ளார்.

English summary
(சுதந்திர தினவிழாவையொட்டி பாமக தலைவர், நிறுவனர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்): As the 75th Independence Day is being celebrated across the country, PMK founder Ramadoss and PMK president Anbumani Ramadoss have extended their greetings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X