• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்தையே திரும்பிப் பார்க்கச் செய்வோம் - மநீம தலைவர் கமல்ஹாசன்

Google Oneindia Tamil News

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்தையே திரும்பிப் பார்க்கச் செய்வோம் என்றும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கும் தயார் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். நம்மைப் படகாக்கி தங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள விரும்பும் சதிகாரர்களுக்கு கட்சியில் இடமில்லை என்றும் கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் சகித்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் ,சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. முதல்வர் வேட்பாளராக கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கிய கமல்ஹாசன் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்தார்.

தேர்தல் தோல்விக்கு பிறகு மக்கள் நீதி மய்யத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் கட்சித் தலைமை சரியில்லை என்று கூறி ஒவ்வொருவராக தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு வெளியேறினர். இந்த சூழலில் மக்கள் நீதி மய்யத்தை வலுப்படுத்த தேவையான மாற்றங்களை செய்வேன் என்ற உறுதிமொழி எடுத்துக்கொண்ட கமல்ஹாசன் புதிய ஆலோசகர்கள் ,துணைத் தலைவர்கள், மாநில செயலாளர்கள், நிர்வாக குழு உறுப்பினர் என பலரை நியமனம் செய்துள்ளார். அத்துடன் கட்சியின் தலைவர் என்ற பொறுப்புடன் கூடுதலாக கட்சியின் பொதுச்செயலாளர் என்று பொறுப்பினையும் அவர் இன்று முதல் ஏற்றுக்கொண்டுள்ளார்.

 மிதுனுக்கு 26 வயசுதான்.. செய்த செயலால் ஆடிப் போன சொந்தங்கள்.. நடுங்கிப் போன தேனி! மிதுனுக்கு 26 வயசுதான்.. செய்த செயலால் ஆடிப் போன சொந்தங்கள்.. நடுங்கிப் போன தேனி!

கமல்ஹாசன் பேச்சு

கமல்ஹாசன் பேச்சு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் கூட்டம் இணையவழியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகளின் நியமனப் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார். அப்போது பேசிய கமல்ஹாசன், கட்சி உறுப்பினர்களும் நிர்வாகிகளும் தங்களது உடல்நலனில் முழுக்கவனம் செலுத்தவேண்டும் என்று கூறினார்.

கொள்கைகள் திட்டங்கள்

கொள்கைகள் திட்டங்கள்

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். மண், மொழி, மக்கள் காக்க களம் கண்ட நமது கட்சியை வலுப்படுத்தவும், நமது கொள்கைகளை செயல் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும் சில புதிய நியமனங்களைச் செய்திருக்கிறேன்.

புதிய அறிவிப்புகள்

புதிய அறிவிப்புகள்

கட்சியின் தலைவர் எனும் பொறுப்புடன் கூடுதலாக கட்சியின் பொதுச் செயலாளர் எனும் பொறுப்பினையும் ஏற்று பணியாற்ற இருக்கிறேன். புதிதாக இரு அரசியல் ஆலோசகர்கள், இரண்டு துணைத் தலைவர்கள், மூன்று மாநிலச் செயலாளர்கள், நிர்வாகக்குழுவில் மேலும் ஒரு உறுப்பினர், நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சில அறிவிப்புகள் இனி வரும் நாட்களில் வெளியாகும்.

அநீதிகளுக்கு எதிராக போர்

அநீதிகளுக்கு எதிராக போர்

புதிய மாநிலச் செயலாளர்கள் ஏற்கனவே நமது கட்சியின் வேட்பாளர்களாக கடந்த சட்டசபைத் தேர்தலில் களம் கண்டவர்கள்தான். எனினும் அவர்களைப் பற்றி மீண்டும் இங்கே குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன். சிவ. இளங்கோ சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் நிறுவனர். மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அநீதிகளுக்கு எதிராக சட்டப் போராட்டங்களைத் தொடர்ந்த காரணத்தால் ஆட்சியாளர்களால் வேட்டையாடப்பட்டு சிறை சென்றவர்.

நல்லாட்சி மலர வேண்டும்

நல்லாட்சி மலர வேண்டும்

செந்தில் ஆறுமுகம் தகவல்தொழில்நுட்பத் துறையில் 7 ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு சமூகப் பணி செய்ய வேண்டும் என்ற தனது லட்சியத்திற்காக பணியை ராஜினாமா செய்தவர். கடந்த 20 ஆண்டுகளாக உழைத்துவருபவர். சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர். தகவல் அறியும் உரிமை சட்டத்தினை முழுமையாகப் பயன்படுத்துவது என மக்கள் நலன் சார்ந்து தொடர்ந்து இயங்கி வருகிறார் என்று அறிமுகம் செய்தார் கமல்ஹாசன்.

முழு ஒத்துழைப்பு தேவை

முழு ஒத்துழைப்பு தேவை

சரத்பாபு தன் கடின உழைப்பாலும், திறமையாலும் வெற்றிகரமான தொழில்முனைவராகத் திகழ்பவர். ஃபுட்கிங் அறக்கட்டளையை நிறுவி பசியோடு இருப்பவர்களுக்கு உணவு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வருகிறார். மக்கள் சேவைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட தலைமைப்பண்பு மிக்க இவர்களுக்கு முழு ஒத்துழைப்பை நல்குங்கள். இவர்கள் உங்களோடு சேர்ந்து உழைத்து கட்சியினை வலுவாக்குவார்கள்.

லோக்சபா தேர்தலுக்குத் தயார்

லோக்சபா தேர்தலுக்குத் தயார்

உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. அதற்கு நாம் தயாராக வேண்டும் என்று தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்தையே திரும்பிப் பார்க்கச் செய்வோம் என்றும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கும் தயார் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

English summary
MNM leader Kamal Haasan has said that he will look back at Tamil Nadu in the local government elections and is ready for the 2024 parliamentary elections. Kamal Haasan has said that there is no place in the party for conspirators who want to sail us and enrich their lives and those who betray the party will not be tolerated.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X