சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வந்தா ராஜாவாதான் வருவேன்.. அடம்பிடித்த ராமதாஸ்.. கஷ்டப்பட்டு டீல் முடித்த அதிமுக!

அதிமுக, திமுக, பாஜக என்று எல்லா கட்சிகளையும் தொங்கலில் விட்டு கடந்த ஒருமாதமாக பாமக மிகப்பெரிய கண்ணா மூச்சி ஆட்டத்தை ஆடிக்கொண்டு இருந்தது.

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக, திமுக, பாஜக என்று எல்லா கட்சிகளையும் தொங்கலில் விட்டு கடந்த ஒருமாதமாக பாமக மிகப்பெரிய கண்ணா மூச்சி ஆட்டத்தை ஆடிக்கொண்டு இருந்தது. இந்த நிலையில் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின் தற்போது அதிமுக கூட்டணியில் பாமக சேர்ந்து உள்ளது.

நான் வரணுமா? செக்க சிவந்த வானம் படத்தில் சிம்பு சொல்லும் இந்த வசனம் மிக வைரலான மீம் டெம்ப்லேட். இதை வைத்து பலர் மீம் போட்டு கலாய்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இதை நிஜத்தில் நிகழ்த்திக் காட்டி இருக்கிறது பாமக.

திமுகவிடம் நான் வரணுமா என்று கேட்டுவிட்டு இன்னொரு பக்கம் அதிமுகவிடமும் நான் அங்க வரட்டுமா என்று கேட்டு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது பாமக கட்சி. பாமகவின் குழப்பமான நிலைப்பாடு காரணமாக தமிழகத்தில் தேர்தல் கூட்டணி உருவாகாமல் இழுபறி நீடித்தது.

பாமக இப்படித்தான்

பாமக இப்படித்தான்

இதனால் மீண்டும் அதிமுக பக்கம் சென்று ''மீண்டும் முதலில் இருந்து'' பேச்சு வார்த்தையை தொடங்கியது பாமக. ஆனால் இந்த முறையும் பாமக தனது சீட் கோரிக்கையில் இருந்து குறைந்து வரவில்லை. இதற்கான ஆலோசனை தற்போது சென்னையில் நடந்தது. இந்த நிலையில் சென்னையில் நடந்த ஆலோசனையில் தற்போது சுமூகமாக தீர்வு எட்டப்பட்டு இருக்கிறது.

அதிமுக கூட்டணி

அதிமுக கூட்டணி

முதலில் அதிமுக - பாஜக கூட்டணியில்தான் பாமக வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான பேச்சுவார்த்தைகள் கடந்த இரண்டு வாரங்களாக நடந்து வந்தது. பாஜகவின் தமிழக பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் இதற்காக தமிழகம் வந்து வந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த கூட்டணியில் 8-9 சீட்களை பாமக கேட்டு இருந்தது.

ஆனால் நடக்கவில்லை

ஆனால் நடக்கவில்லை

ஆனால் பாமகவிற்கு அத்தனை சீட்கள் கொடுக்கும் அளவிற்கு அதிமுக - பாஜக கூட்டணி ஒப்புக்கொள்ளவில்லை. அதேபோல் பாமக கேட்கும் பல தொகுதிகளை பாஜகவும் கேட்டதால் மிகப்பெரிய குழப்பம் நீடித்து வந்தது. இதனால் அதிமுக என்ன செய்வது என்று தெரியாமல் பெரிய குழப்பத்தில் இருந்தது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நீடித்து வந்தது.

திமுக கூட்டணி

திமுக கூட்டணி

இதற்கு இடையில்தான் பாமகவின் பார்வை திமுக பக்கமும் சென்றது. திமுகவுடனும் பாமக ரகசியமாக கூட்டணி பேச்சுவார்த்தைகளை தொடங்கியது. ஆனால் இங்கும் அதே பிரச்சனைதான். இந்த கூட்டணியிலும் தனது 7-8 சீட் வேண்டும் என்று பாமக கேட்டது. 5 சீட்டிற்கு குறைவாக பெற பாமக விரும்பவில்லை என்றும் கூறப்பட்டது.

இங்கும் பிரச்சனை

இங்கும் பிரச்சனை

அதே சமயம் பாமகவிற்கு நிறைய இடங்கள் கொடுப்பது விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட்கள் ஆகியோரை கோபத்திற்கு உள்ளாக்கியது. இது அவர்களுக்கான சீட் ஷேரிங்கையும் குறைத்தது. இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பாமகவால் குழப்பம் ஏற்படும் நிலை உருவானது.

மீண்டும் பேச்சுவார்த்தை

மீண்டும் பேச்சுவார்த்தை

இதனால் மீண்டும் அதிமுக பக்கம் சென்று ''மீண்டும் முதலில் இருந்து'' பேச்சு வார்த்தையை தொடங்கியது பாமக. ஆனால் இந்த முறையும் பாமக தனது சீட் கோரிக்கையில் இருந்து குறைந்து வரவில்லை. இதற்கான ஆலோசனை தற்போது சென்னையில் நடந்தது. இந்த் நிலையில் சென்னையில் நடந்த ஆலோசனையில் தற்போது சுமுகமாக தீர்வு எட்டப்பட்டு இருக்கிறது.

பாமக அடம்

பாமக அடம்

பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. ஆனால் பாமகவிற்கு இந்த கூட்டணியில் எத்தனை இடங்களை அதிமுக அளிக்கிறது என்று விவரம் வெளியாகவில்லை. இன்று மாலை தமிழகம் வரும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறுகிறார்கள்.

English summary
Let's play some game, PMK is playing basketball with Tamilnadu and National parties for alliance talk.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X