சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2020ல்.. உங்களது கனவுகள் மெய்ப்படட்டும்!

Google Oneindia Tamil News

சென்னை: கனவுகள் என்பது வாழ்க்கையில் அனைவருக்கும் இருக்கும். நான் இந்த நாட்டின் பிரதமராகப் போகிறேன்.. நான் இந்த நிறுவனத்தின் சிஇஓவாகப் போகிறேன் என்று இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள்.

கனவுகள் அது தான் நமது வாழ்க்கையைத் தீர்மானிக்கும். நம் இலக்கை அடைய வேண்டும் என்பதை நம்மிடம் நினைவுப் படுத்திக் கொண்டே இருக்கும். நம்முடைய கனவுகள் தான் நம்மை வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் செல்லும். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒவ்வொரு திறமை. கனவுகள் பலவிதம். ஆனால் அக்கனவுகள் நிஜமாகும் போது அதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை எனலாம்.

let this new year bring all your dreams true

புது வருடம் பிறந்திருக்கிறது. இந்த வருடம் நமக்கு எப்படி இருக்கும் நாம நம்ம வாழ்க்கையில் முன்னேறுவோமா என்ற எதிர்பார்ப்புக் கூட கனவு தான். தினமும் பசியில் இருப்பவனுக்கு என்றாவது ஒரு நாள் நம் பசி தீர்க்க உணவு நிறைய கிடைக்காதா என்ற கனவு படிக்கும் மாணாக்கர்களுக்கு நான் ஒரு டாக்டர் ஆவேன் நான் ஒரு இன்ஜினியர் ஆவேன் நான் ஒரு கலெக்டராவேன் என்று கனவு காண்கிறார்கள்.

குஜராத் விவசாயிகளை கதறவைக்கும் 'காப்பான்' பட ஸ்டைல் பூச்சிகள்- பாக். ஏவிவிட்டதா? குஜராத் விவசாயிகளை கதறவைக்கும் 'காப்பான்' பட ஸ்டைல் பூச்சிகள்- பாக். ஏவிவிட்டதா?

வாடகை வீட்டில் வசிப்பவருக்குச் சொந்த வீடு வாங்க வேண்டும் என்று கனவு குடிசையில் வாழ்பவனுக்கு ஓட்டு வீடு கட்ட வேண்டும் என்ற கனவு கடையில் வேலை செப்பவனுக்கு எதிர்காலத்தில் ஒரு கடை வைக்க வேண்டும் என்று ஓர் கனவு. இருட்டில் வாழ்பவனுக்குத் தான் வெளிச்சத்தின் அருமைத் தெரியும் அது போல கனவு காண்பவருக்குத் தான் அந்த கனவு நிஜமாகும் போது இருக்கும் சந்தோஷம் எப்படி இருக்கும் என தெரியும். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு.

let this new year bring all your dreams true

தல அஜித் அவர்கள் நடித்த பில்லா படத்தில் எனக்கு கீழே நான்கு பேர் அதற்குக் கீழே நாற்பது பேர் அப்படியே சும்மா ஜம்முனு ஜம்முனு என்ற வசனம் தான் நினைவுக்கு வருகிறது. இதைப் போல இருக்க வேண்டும் என்றுப் பலரும் விரும்புகிறார்கள். நடிகர் கருணாஸ் அவர்கள் நடித்த ஒரு படத்தில் நான் அம்பானியாவேன் என்று தினமும் கனவு கண்டிருப்பார். தள்ளுவண்டியில் வியாபாரம் செய்த அவர் இறுதியில் தனக்கென ஒரு வீடு வாங்கிச் சொந்தமாக ஒரு கடையும் வைத்து விடுவார். அது போலத் தான் நாம் கனவு காண்பதோடு மட்டும் நின்று விடாமல் அதைச் செயல்படுத்துவதற்கான முயற்சிகளையும் செய்ய வேண்டும்.

அதனால் தான் மாணவர்களையும் இளைஞர்களையும் அன்றே அப்துல் கலாம் ஐயா அவர்கள் கனவு காணுங்கள் கனவு காணுங்கள் என்று கூறினார். ஏனென்றால் அவர்கள் நினைத்தால் முடியாதது ஒன்றுமில்லை என நினைத்தார். நம் அப்துல் கலாம் ஐயா கூட ஆம் ஆண்டில் இந்தியா வல்லரசு ஆகும் என்றுக் கனவுக் கண்டார். அதனால் அனைவரும் கனவு காணுங்கள். உங்கள் கனவுகளை நனவாக்க முயற்சி எடுங்கள்.உங்கள் கனவுகள் அனைத்தும் மெய்ப்பட வேண்டும். என்ன எல்லோரும் கனவு காண ஆரம்பிச்சிட்டீங்களா!

- ஜி. உமா மகேஸ்வரி

English summary
Let this new year bring all your dreams true, a story from our reader.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X