சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குட் நியூஸ்... இன்றும் மழை இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்

Google Oneindia Tamil News

Recommended Video

    திடீரென கொட்டிய மழை... ஆட்டம் போட்டு ரசித்த மழலைகள்...

    சென்னை: தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்கள், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை,ராமநாதபுரம் மற்றும் காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

    light showers are likely in the southern parts of Tamil Nadu

    வெப்ப சலனம் காரணமாக வங்கக் கடல் பகுதியில் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டு அதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், மாலையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை டி.ஜி.பி. அலுவலக வளாகம், சேலத்தில் தலா 5 சென்டி மீட்டரும், சென்னை நகர், சங்கராபுரம், சோழவரத்தில் 4 சென்டிமீட்டரும், சென்னை விமான நிலையம், அண்ணா பல்கலைக்கழகம், மாதவரம், செங்குன்றம், ஏற்காடு, வால்பாறை, சின்னக்கல்லாரில் 3 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

    எத்தனை நாள் தாங்கும் எடியூரப்பா ஆட்சி? காங்கிரஸ் அரசை கலைத்த அதே ஆயுதம் இப்போது பாஜகவுக்கு எதிராக! எத்தனை நாள் தாங்கும் எடியூரப்பா ஆட்சி? காங்கிரஸ் அரசை கலைத்த அதே ஆயுதம் இப்போது பாஜகவுக்கு எதிராக!

    மேலும், தமிழகத்தை ஒட்டிய கேரள பகுதி மற்றும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. இந்த நிலை 27ம் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனிடையே, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், தென்மேற்குப் பருவமழை வலுப்பெற்று வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    English summary
    The Meteorological Department Report that light showers are likely in the southern parts of Tamil Nadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X