சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போனவாட்டியும் இதே ரிசல்ட்.. இந்த முறையும் அதே முடிவு.. மக்கள் தீர்ப்பு விசித்திரமா இருக்கே!

சென்ற முறை போலவே இந்த முறையும் வாக்கு பதிவு வித்தியாசமாக உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழக லோக்சபா தேர்தல் முடிவுகளைப் பார்த்தால் படு விசித்திரமாக இருக்கிறது- வீடியோ

    சென்னை: தமிழக லோக்சபா தேர்தல் முடிவுகளைப் பார்த்தால் படு விசித்திரமாக இருக்கிறது. எப்படி இது சாத்தியம் என்ற சந்தேகமெல்லாம் கூட வந்து போகிறது.

    2014ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவையும், இப்போதைய முடிவையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த ஆச்சரியம் பல மடங்காக பெருகும்.

    கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுகவை தங்கள் அணிக்கு இழுக்க பாஜக கடுமையாக முயன்றது. ஆனால் முடியவில்லை. ஜெயலலிதா தனித்துப் போட்டியிட்டார்.

    செய்ய வேண்டியதை சரியாக செய்த எடப்பாடி.. ஆட்சியை தக்க வைக்க செய்த தியாகம்.. செம ராஜதந்திரம்! செய்ய வேண்டியதை சரியாக செய்த எடப்பாடி.. ஆட்சியை தக்க வைக்க செய்த தியாகம்.. செம ராஜதந்திரம்!

    அதிமுக தோற்றது

    அதிமுக தோற்றது

    தனித்துப் போட்டியிட்ட ஜெயலலிதாவின் முடிவை தமிழக மக்கள் மொத்தமாக ஆமோதித்தனர். மொத்தம் 37 இடங்களை அதிமுக தனித்து வென்றது. இரு இடங்களில் மட்டுமே அதிமுக தோற்றது.

    பாஜக

    பாஜக

    தர்மபுரியில் பாமகவுக்கு வெற்றி கிடைத்தது. அன்புமணி ராமதாஸ், அதிமுக வியூகத்தையும் தாண்டி அழகான வெற்றியைப் பெற்றார். பாஜகவுக்கு கன்னியாகுமரி கிடைத்தது.. பொன் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று மத்திய அமைச்சரும் ஆனார்.

    என்னதான் சொல்லுங்க.. அதிமுகவுக்கு இது வெற்றிகரமான தோல்விதான்.. அசத்திட்டாங்களே! என்னதான் சொல்லுங்க.. அதிமுகவுக்கு இது வெற்றிகரமான தோல்விதான்.. அசத்திட்டாங்களே!

    சாதனை

    சாதனை

    இந்த முறை ரிசல்ட்டைப் பார்த்தால் கிட்டத்தட்ட அப்படியே இடம் மாறி வந்துள்ளது. திமுக கூட்டணிக்கு மொத்தமாக 37 இடங்கள் கிடைத்துள்ளன. ஒரே ஒரு வித்தியாசம்தான். கடந்த முறை அதிமுக தனித்து 37 இடங்களை அள்ளியது. ஆனால் திமுக கூட்டணியாக அதை சாதித்துள்ளது.

    சிபி ராதாகிருஷ்ணன்

    சிபி ராதாகிருஷ்ணன்

    கடந்த முறையும் பாஜகவுக்கு கிடைத்தது போல இந்த முறையும் ஒரே ஒரு இடம்தான். கடந்த முறை பொன்ராதாகிருஷ்ணன் வென்றார். இந்த முறை சிபி ராதாகிருஷ்ணன் வெல்கிறார்.

    சரியவில்லை

    சரியவில்லை

    பாமகவுக்கு கடந்த முறை தர்மபுரி கிடைத்தது. இந்த முறையும் தர்மபுரி மட்டுமே கிடைத்துள்ளது. அன்புமணி ராமதாஸ் தனது தொகுதியை தக்க வைத்துள்ளார். பாமகவின் செல்வாக்கு சரியவில்லை என்பதையும் அவர் நிரூபித்துள்ளார்.

    கருணாநிதி

    கருணாநிதி

    இன்னொரு முக்கியமான விஷயம்.. கடந்த தேர்தலில் ஜெயலலிதா இருந்தார், கருணாநிதியும் இருந்தார். இந்த முறை இருவரும் இல்லை. இதனால் நஷ்டத்தை சந்தித்திருப்பது அதிமுகதான். திமுக கருணாநிதி இல்லாமலும் வெல்லக் கூடிய கட்சி என்பதை காட்டி விட்டது.

    English summary
    Like the last time we have different Election Results. The DMK has got 37 seats in total this time. But the only difference is, last time, the AIADMK had 37 seats. But DMK has achieved it as a coalition now.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X