சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓ மை டியர் மக்களே.. 6 மணி நேரத்தில் ரூ. 211 கோடி மது பானம் விற்பனையா.. இது சாதனை இல்லை.. வேதனை!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் 23, 24ம் தேதிகளில் 2 நாளில் 410 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. 144 தடை உத்தரவால் முன் கூட்டியே குடிமகன்கள் வாங்கி குவித்தனர். கடைசி வெறும் 6 மணி நேரத்தில் 211 கோடிக்கு மதுவிற்பனையாகி உள்ளது.

Recommended Video

    1 மீட்டர் இடைவெளியில் வாங்க... டாஸ்மாக்கில் பின்பற்ற படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

    இதைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கடந்த 24ம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.

    இதைத்தொடர்ந்து கொரோனாவை வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கடந்த 24ம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச்31ம் தேதி வரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.

    198 கோடிக்கு மதுவிற்பனை

    198 கோடிக்கு மதுவிற்பனை

    இதன் காரணமாக டாஸ்மாக் கடைகள் அடுத்த 10 நாளுக்கு மூடப்படும் என்பதை முன்கூட்டிய அறிந்த குடிமகன்கள் கடந்த 23 மற்றும் 24ம் தேதிகளில் டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். இதனால் கடந்த 23ம் தேதி ஒரு நாளில் மட்டும் 198 கோடிக்கு மதுவிற்பனையானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கிடைத்த மதுபாட்டில்களை எல்லாம் குடிமகன்கள் வாங்கி குவித்தனர்.

    211 கோடிக்கு மதுவிற்பனை

    211 கோடிக்கு மதுவிற்பனை

    இந்நிலையில் மறுநாள் பிற்பகல் ( 24ம் தேதி ) கடை மாலை 6 மணியுடன் மூடப்பட உள்ளது என்பதை அறிந்த குடிமகன்கள் தங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு மதுவை வாங்கி சென்றனர். இதனால் அன்றைக்கு மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே கடை திறந்த நிலையில் வெறும் ஆறு மணி நேரத்தில் 211 கோடிக்கு மதுவிற்பனையாகி உள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    எல்லா காசும் காலி

    எல்லா காசும் காலி

    கடை ஆறுமணி நேரம் மட்டுமே திறக்கும் என்பதை அறிந்த குடிமகன்கள் காலை 11.30 மணி முதலே டாஸ்மாக் கடைகள் முன்பு பயங்கரமாக குவிந்தனர். எப்படியாவது குவாட்டர்களை வாரிகுவித்துவிட வேண்டும் என்று பரிதவிப்புடன் வாங்கினார்கள். ஆனாலும் திடீரென ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் ஒன்று இரண்டு அல்லது அதிகபட்சம் 5 என்றே வாங்கி சென்றார்கள் குடிமகன்கள். அதற்கு மேல் வாங்கி குவிக்க குடிமகன்களுக்கு கையில் காசும் இல்லை நேரமும் இல்லை.

    குடிக்க முடியாது

    குடிக்க முடியாது

    இந்நிலையில் குடிமகன்களுக்கு சோகமான அறிவிப்பு அன்று மாலை தான்வந்தது. பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பித்து உத்தரவிட்டார். இதை கேட்டு குடிமகன்கள் பேரதிர்ச்சி அடைந்தனர். என்ன தான் பயங்கர குடிகாரர்களாவே இருந்தாலும் அதிகபட்சம் 31ம் தேதி வரைக்குமான சரக்கைத்தான் வாங்கி குவித்து இருப்பார்கள். அடுத்த 14 நாட்கள் குடிப்பதற்கு சரக்கு வாங்கி வைத்திருக்க முடியாது. எனவே இந்த 21 நாட்களில் பல குடிமகன்கள் குடிப்பதே இல்லை. இதை வைத்து அவர்கள் திருந்தினால் சிறப்பு. இது அவர்களுக்கு கிடைத்த நல்ல ஒரு வாய்ப்பு.

    English summary
    Liquor sales in Tamil Nadu in just 6 hours for Rs 211 crores , drinkers create record in 2 Days for Liquor buying
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X