சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் தீபாவளி மது விற்பனை ரூ. 455 கோடியாம்.. கடந்த ஆண்டை விட அதிகமாம்!

Google Oneindia Tamil News

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் ரூ 455 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கடந்த சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டன. இதற்காக திங்கள்கிழமை வரை தமிழகத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

Liquor sales in Tamilnadu on the account of Deepavali is Rs 455 Crores

இதனால் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது மது விற்பனை குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அதில் கடந்த 25-ஆம் தேதி ரூ 100 கோடிக்கும், அடுத்த நாள் சனிக்கிழமை ரூ 183 கோடிக்கும், ஞாயிற்றுக்கிழமை 172 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது. இந்த 3 நாட்களில் தமிழகத்தில் மொத்தம் ரூ 455 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

எப்படி இருக்கிறான் சுஜித்.. மீட்பு நடவடிக்கைகள் எப்படி போகின்றன.. முதல்வரிடம் விசாரித்தார் மோடிஎப்படி இருக்கிறான் சுஜித்.. மீட்பு நடவடிக்கைகள் எப்படி போகின்றன.. முதல்வரிடம் விசாரித்தார் மோடி

கடந்தாண்டு தீபாவளி பண்டிகையின் போது ரூ 325 கோடி விற்பனையானது. இந்த ஆண்டு ரூ 130 கோடி அதிகமாக விற்பனையாகியுள்ளது. தீபாவளி பலகாரம் கூட இந்த அளவுக்கு விற்பனையாகி இருக்காது என நெட்டிசன்கள் கமெண்ட் அடிக்கின்றனர்.

English summary
Liquor sales in Tamilnadu on the account of Deepavali is Rs 455 Crores. This amount is Rs. 130 crores higher than last year sales.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X