சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொங்கல் விடுமுறை..வழக்கம்போல் வசூல் சாதனை நிகழ்த்திய டாஸ்மாக்..2 நாளில் ரூ.417 கோடிக்கு விற்பனை!

Google Oneindia Tamil News

சென்னை: பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி தமிழகத்தில் 2 நாட்களில் ரூ.417.18 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.55.27 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. சென்னை மண்டலத்தில் ரூ.54.47 கோடிக்கு மது விற்பனை கொடி கட்டி பறந்துள்ளது.

Liquor worth Rs 417.18 crore has been sold in Tamil Nadu in two days

தமிழக அரசின் நிதி வருவாய்க்கு முக்கிய ஆதாரதமாக திகழும் டாஸ்மாக் கடைகளில் பண்டிகை நாட்களில் மது விற்பனை கொடிகட்டி பறப்பது வழக்கம். தமிழகத்தில் கொரோனா காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டு கிடந்த டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு வசூலை வாரி குவித்து வருகிறது. தீபாவளியையொட்டி டாஸ்மாக்கில் ரூ.466 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி டாஸ்மாக் மீண்டும் வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. 2 நாட்களில் ரூ.417.18 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக்கில் போகி பண்டிகை அன்று ரூ.147 கோடிக்கு மது பானங்கள் விற்பனையானது. நேற்று பொங்கல் பண்டிகை நாளன்று ரூ.269 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

பாஜகவின் நம்ம ஊரு பொங்கல் விழா... தமிழர் பாரம்பரியமான வேட்டி சட்டையில் கலக்கிய ஜே.பி.நட்டா..! பாஜகவின் நம்ம ஊரு பொங்கல் விழா... தமிழர் பாரம்பரியமான வேட்டி சட்டையில் கலக்கிய ஜே.பி.நட்டா..!

அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.55.27 கோடிக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் ரூ.54.47 கோடியும், திருச்சி மண்டலத்தில் 56.39 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ.50.12 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.50.18 கோடிக்கும் மது விற்பனையாகி இருப்பதாக டாஸ்மார்க் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வருவாய் அதிகம் என்று கூறப்படுகிறது.

English summary
Liquor worth Rs 417.18 crore has been sold in Tamil Nadu in two days due to the Pongal holiday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X