சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்று முதல் இரண்டாம் கட்ட கோவிட் தடுப்பூசி.. வயது 45ஐ தாண்டிவிட்டதா? அப்போ முதல்ல இதைப் படிங்க

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா தடுப்பூசி இரண்டாம் கட்டம் இன்று தொடங்கும் நிலையில், 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் யார் யாருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

கொரோனா தடுப்பூசி இயக்கத்தின் இரண்டாம் கட்டம் மார்ச் 1 முதல் தொடங்கும் என்று மத்திய அரசு கடந்த புதன்கிழமை அறிவித்தது. குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும், உடலில் ஒன்றுக்கும் மேற்பட்ட நோய் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்திருந்தது.

List of comorbidities that can make people 45 plus eligible for Covid vaccination second phase

இதற்கான ஏற்பாடுகள் 20 ஆயிரம் தனியார் மருத்துவமனைகள், 10 ஆயிரம் அரசு மருத்துவமனைகளில் செய்யப்பட்டு வருகின்றன. மத்திய சுகாதாரத் துறையின் வழிகாட்டுதலின்படி, ​தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசிக்கு ரூ.250 வரை கட்டணம் வசூலிக்க முடியும். தடுப்பூசி மையத்தின் பயனாளிகள் கட்டணமாக ரூ. 150, தடுப்பூசி சேமிப்பு, பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு நபருக்கு ரூ.100 வரை வசூலிக்க முடியும். அதேநேரத்தில் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசியானது இலவசமாக கிடைக்கும்.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள Co-WIN Appஐ மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்காக அவர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளவேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்பும் பயனாளிகள் தாங்களாகவே 'கோ-வின் 2.0' இணையதளத்திலும், 'ஆரோக்கிய சேது' செயலியிலும் முன்பதிவு செய்யலாம்.

இதில், உடலில் எந்தெந்த பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

இதய செயலிழப்பு காரணமாக கடந்த ஒரு வருடத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள்

இதய மாற்று அறுவை சிகிச்சை / இடது வென்ட்ரிகுலர் உதவி சாதனம் பொருத்தப்பட்டவரக்ள்

குறிப்பிடத்தக்க இடது வென்ட்ரிகுலர் சிஸ்டாலிக் செயலிழப்பு

மிதமான அல்லது கடுமையான வால்வுலர் இதய நோய்

கடுமையான PAH அல்லது இடியோபாடிக் PAH உடன் பிறவி இதய நோய்

CABG / PTCA / MI சிகிச்சையில் உயர் இரத்த அழுத்தம் / நீரிழிவு நோயுடன் கரோனரி தமனி நோய்

ஆஞ்சினா மற்றும் உயர் இரத்த அழுத்தம் / நீரிழிவு நோய்

CT / MRI சிகிச்சையில் பக்கவாதம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் / நீரிழிவு நோய் சிகிச்சையில் இருப்பவர்கள்

நுரையீரல் தமனி உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் / நீரிழிவு சிகிச்சையில் இருப்பவர்கள்

நீரிழிவு நோய் (10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக) மற்றும் உயர் இரத்த அழுத்தம் / நீரிழிவு சிகிச்சையில் இருப்பவர்கள்

சிறுநீரகம் / கல்லீரல் / ஹீமாடோபாய்டிக் ஸ்டெம் செல் மாற்று: பெறுநர் / காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்கள்

ஹீமோடையாலிசிஸ் / சிஏபிடியில் நிலை சிறுநீரக நோய்

கார்டிகோஸ்டீராய்டுகள் / நோயெதிர்ப்பு தடுப்பு மருந்து

சிதைந்த சிரோசிஸ்

கடந்த இரண்டு ஆண்டுகளில் கடுமையான சுவாச நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் / FEV1

லிம்போமா / லுகேமியா / மைலோமா

ஜூலை 1, 2020 அன்று அல்லது அதற்குப் பிறகு புற்றுநோய் பாதிப்பு அல்லது சிகிச்சை பெறுவோர்

சிக்கிள் செல் நோய்/போம் மஜ்ஜை பலவீனம்/அப்பிளாஸ்டிக் அனீமியா/தலசீமியா

ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட 45க்கு மேற்பட்டோர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

English summary
List of comorbidities that can make people 45 plus eligible for Covid vaccination second phase
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X