சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மே 23 இல் வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம்- இந்திய வானிலை மையம்

Google Oneindia Tamil News

டெல்லி: மே 23 ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது புயலாக மாறும் என்றும் தெரிவித்துள்ளது.

Newest First Oldest First
12:50 PM, 19 May

தென்மேற்கு பருவமழை 21ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணிப்பு. தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய கடல் பகுதியில் 21ஆம் தேதி பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. கேரளா, தமிழகத்தில் மே இறுதியில் தென்மேற்கு பருவ மழை தொடங்க உள்ளது
11:57 AM, 19 May
ராஜஸ்தான்

வலுவிழந்த டவ்-தே புயல் தென்கிழக்கு ராஜஸ்தான் பகுதியில் மையம் கொண்டிருக்கிறது
11:57 AM, 19 May

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 23-இல் உருவாகிறது- இந்திய வானிலை மையம். வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும். வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறினாலும் தமிழகத்திற்கு பாதிப்பில்லை
7:52 AM, 19 May

குஜராத்
டவ்-தே புயலால் குஜராத்தில் 13 பேர் பலி; 5,000 கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு
6:47 AM, 19 May

மகாரஷ்டிரா
டவ்-தே புயலில் சிக்கிய ஓ.என்.ஜி.சி. கப்பலில் இருந்த மேலும் 93 பேரை மீட்கும் பணி தொடருகிறது
6:46 AM, 19 May

மகாராஷ்டிரா
டவ்-தே புயலில் சிக்கிய ஓ.என்.ஜி.சி. கப்பலில் இருந்து 637 பேர் மீட்கப்பட்டனர்
6:46 AM, 19 May

குஜராத்
குஜராத்தில் பேரழிவை ஏற்படுத்திய டவ்-தே புயல்- மீட்பு நிவாரணப் பணிகள் தீவிரம்
6:46 AM, 19 May

குஜராத்
டவ்-தே புயல் வலுவிழந்த நிலையில் ராஜஸ்தானுக்குள் சென்றது
6:46 AM, 19 May

குஜராத்
டவ்-தே புயல் பாதிப்புகளை பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்கிறார்
11:36 PM, 18 May
ராஜஸ்தான்

டவ்-தே புயல் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று நள்ளிரவில் ராஜஸ்தானுக்குள் நுழையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ராஜஸ்தானின் ஏழு மாவட்டங்கள் கனமழை முதல் அதிக மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
12:33 PM, 18 May

வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்தம் மே 23 -இல் உருவாகிறது- வெதர்மேன்
மே 19- 22 வரை சென்னையில் மழை பெய்யும்- வெதர்மேன்
டவ் தே புயலின் தாக்கம் மற்றும் மேற்கு காற்று வலுவிழந்ததால் புதிய காற்றழுத்தம் உருவாகிறது
7:54 AM, 18 May

மகாராஷ்டிரா
மும்பையில் டவ்-தே புயலால் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழு
6:43 AM, 18 May

குஜராத்
டவ்-தே புயல் கரையை கடப்பதற்கு முன்னதாகவே குஜராத் கடலோர பகுதிகளில் இருந்து சுமார் 2 லட்சம் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்
குஜராத்
டவ்-தே புயல் கரையை கடந்ததால் அகமதாபாத் விமான நிலையம் காலை 5 மணிவரை மூடப்பட்டது
மகாராஷ்டிரா
டவ்-தே புயல் காரணமாக திங்கள்கிழமையன்று பகலில் மூடப்பட்டிருந்த மும்பை விமான நிலையம் இரவு 10 மணி முதல் செயல்பட தொடங்கியது
மகாராஷ்டிரா
டவ்-தே புயல் காரணமாக மும்பை விமான நிலையத்தில் 55 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன
6:41 AM, 18 May

குஜராத்
டவ்-தே புயல் கரையை கடந்த நிலையில் குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு; செல்போன் சேவைகளும் பாதிப்பு
குஜராத்
அதிதீவிர டவ்-தே புயல் குஜராத்தில் அதிகாலை 2.30 மணியளவில் முழுமையாக கரையை கடந்தது
1:41 AM, 18 May
டாமன் டையு

அதி தீவிர டவ்-தே புயல், தற்போது தீவிர புயலாக வலுவிழந்த டையு-க்கு 30 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தகவல்
1:34 AM, 18 May
குஜராத்

குஜராத் மாநிலத்தில் சௌராஷ்டிரா அருகே டவ் தே புயல் முற்றிலுமாக கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
12:47 AM, 18 May
கர்நாடகா

அதி தீவிர டவ்-தே புயல் காரணமாக கர்நாடகாவிலுள்ள 121 கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், புயல் காரணமாக கர்நாடகாவில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்
12:14 AM, 18 May
டாமன் டையு

அதி தீவிர டவ்-தே புயலானது டையூ-க்கு 20 கிலோமீட்டர் வடகிழக்கே மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தகவல். அடுத்த இரண்டு மணி நேரத்திற்குக் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை.
11:30 PM, 17 May
உத்தரப்பிரதேசம்

அதி தீவிர டவ் தே புயல் கரையைக் கடந்து வரும் நிலையில், உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் சில பகுதிகளில் அடுத்த 2 மணி நேரத்திற்குக் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தகவல்
11:05 PM, 17 May
குஜராத்

டவ் தே புயல் அடுத்த இரண்டு மணி நேரத்தில் குஜராத்தில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
10:17 PM, 17 May
குஜராத்

டவ்-தே புயல் காரணமாக குஜராத்திலுள்ள முக்கிய விமான நிலையங்கள் அனைத்தும் இன்று நள்ளிரவு வரை மூடப்படும் என அறிவிப்பு
9:44 PM, 17 May
குஜராத்

டவ் தே புயலின் கண் பகுதி அடுத்த 3 மணி நேரத்தில் சவுராஷ்டிராவில் கரையை கடக்கும். டையுவின் கிழக்கு பகுதியை நோக்கி நகரும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
9:25 PM, 17 May
குஜராத்

மிக அதி தீவிர புயலான டவ்-தே புயல் குஜராத்தின் மகுவா-போர்பந்தர் இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது.
8:44 PM, 17 May
மகாராஷ்டீிரா

டவ்-தே புயல் காரணமாக மும்பை விமான நிலையம் இன்று இரவு 10 மணி வரை மூடப்படும் என அறிவிப்பு
8:26 PM, 17 May
மகாராஷ்டீிரா

டவ்-தே புயல் காரணமாக மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் வெவ்வேறு விபத்துகளில் 6 பேர் கொல்லப்பட்டனர். நவி மும்பை மற்றும் உல்ஹாஸ்நகரில் சூறாவளிக் காற்று காரணமாக மரங்கள் விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும், சிந்துதுர்க் மாவட்டத்தில் ஒருவரும் ராய்காட் மாவட்டத்தில் மூவரும் உயிரிழந்தனர்.
7:22 PM, 17 May
குஜராத்

அதி தீவிர டவ்-தே புயல் இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் குஜராத்தில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அப்போது கடலோர பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்றுடன் மிகக் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7:08 PM, 17 May
குஜராத்

அதி தீவிர டவ்-தே புயலானது குஜராத் கடற்கரையை நோக்கி மணிக்கு 185 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத்தில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
7:08 PM, 17 May
குஜராத்

அதி தீவிர டவ்-தே புயலானது குஜராத் கடற்கரையை நோக்கி மணிக்கு 185 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத்தில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
6:20 PM, 17 May
டெல்லி

பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத், கோவா முதல்வர்கள், டாமன் மற்றும் டையூ துணைநிலை ஆளுநர் ஆகியோருடன் தொலைப்பேசி வழியாக உரையாடினார்.டவ்-தே புயலை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
6:19 PM, 17 May
மகாராஷ்டீிரா

டவ்-தே புயல் காரணமாக ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிக்க மும்பையில் மட்டும் ஆறு தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
READ MORE

Live Updates Cyclone Tayktae: Weather forecast and breakings of the storm
English summary
Tauktae Cyclone Live Tracking: Know Current Location, Speed, Path, Latest News Updates in Tamil
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X