சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னது.. கள்ளக்குறிச்சியில் தோற்ற சுதீஷூக்கு ராஜ்ய சபா சீட்டா?

ராஜ்ய சபா சீட்டுக்காக டெல்லியில் எல்கே சுதீஷ் முகாமிட்டு வருகிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    LK Sudheesh: ராஜ்யசபா சீட்டுக்கு அடிப்போடும் சுதீஷ்.. பாமக-வுடன் போட்டியா?- வீடியோ

    சென்னை: ஆசை யாரை விட்டது.. ஒரு இடத்தில்கூட ஜெயிக்க முடியலேன்னாலும், ராஜ்ய சபா சீட் தருவார்களா என்று தேமுதிக தரப்பு முயற்சி செய்து வருகிறது.

    அதிமுகவுடன் வந்து கூட்டணி வைத்திருந்தால் இருக்கும் மரியாதையாவது தப்பி இருக்கும். ஆனால் சீட் பேரம் பேசி, தன் இமேஜை கெடுத்து கொண்டதுடன், பாஜக, அதிமுக இமேஜையும் டேமேஜ் செய்துவிட்டது தேமுதிக.

    பாமகவுடன் போட்டி போட்டுக் கொண்டு சீட் கேட்டதற்கு காரணம், வட மாவட்டங்களில் தங்களுக்கு இன்னும் செல்வாக்கு இருக்கிறது என்ற நினைப்பால்தான். ஆனால் ரெண்டு தரப்புமே வெற்றி பெறவில்லை.

    புதிய கல்விக் கொள்கை: இனி இந்தி 'கட்டாய பாடம்'-கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகள் வெளியீடு! புதிய கல்விக் கொள்கை: இனி இந்தி 'கட்டாய பாடம்'-கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகள் வெளியீடு!

    சிக்கல்

    சிக்கல்

    இருந்தாலும் பாமக அப்போது ராஜ் சபா சீட்டுக்காக ஒப்பந்தமே போட்டுவிட்டது என்பதால், இப்போது அந்த வாய்ப்பு அந்த கட்சிக்கு அதாவது அன்புமணிக்கு இல்லை என்று சொல்ல முடியாது. அதனால் அவருக்கு ராஜ்யசபா சீட் தருவதில் பெரிய அளவில் சிக்கல் இருக்காது.

    அன்புமணி

    அன்புமணி

    இருந்தாலும், தருமபுரியில்கூட அன்புமணி ஜெயிக்கவில்லையே என்ற ஆதங்கம் அதிமுக, பாஜகவுக்கு இருக்கத்தான் செய்யும். அதுவும் இல்லாமல் பாமக தோற்றாலும், வாக்கு வங்கியை பலமாக வைத்துள்ளது. இந்த ஒன்றை காரணம் காட்டியும், அல்லது ஒப்பந்தத்தில் கையெழுத்தானதை முன்னிறுத்தியும் அன்புமணிக்கு ராஜ்ய சபா சீட் கிடைக்க நிறைய வாய்ப்புள்ளது.

    நெருக்கம்

    நெருக்கம்

    ஆனால், தேமுதிக தங்களுக்கு ஒரு ராஜ்ய சபாசீட் கேட்கிறதாம். இதற்காக 2 நாட்களாக டெல்லியில் சுதீஷ் முகாமிட்டுள்ளாராம். பாஜக மேலிடத்து நபர்களுடன் தனிப்பட்ட முறையில் நல்ல பழக்கம் வைத்துள்ளவர் சுதீஷ். விஜயகாந்த் அமெரிக்காவுக்கு போயிருந்த சமயத்திலும் சரி, திரும்பி வந்ததில் இருந்தும் சரி, பாஜக நெருக்கத்தை அவர் குறைத்து கொள்ளவில்லை. இதை வைத்து ராஜ்ய சபா சீட் கிடைக்குமா என்று எதிர்பார்ப்பில் உள்ளாராம்!

    பாமகவுடன் போட்டி?

    பாமகவுடன் போட்டி?

    ஒரு தொகுதியில்கூட ஜெயிக்கவில்லை, வாக்கு வங்கியையும் பலப்படுத்தி கொள்ளவில்லை, இனி கட்சியை எப்படி காப்பாற்றுவது என்பதை பற்றி யோசிக்கவில்லை.. ஆனால் சீட் மட்டும் வேண்டும் என்று கேட்பது நியாயமா என்பதை தமிழக மக்களே முடிவு செய்து கொள்ளட்டும். ஒன்று மட்டும் தெரிகிறது.. டெல்லியில் முகாமிடுவதை பார்த்தால், பாமகவுடன் இன்னும்கூட போட்டிக் கொண்டுதான் இருக்கிறது தேமுதிக!

    English summary
    DMDK Kallakurichi Candidate LK Sudheesh is trying to get the rajya sabha seat
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X