சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஏலத்துக்கு வரும் உள்ளாட்சி பதவிகள்.. தேர்தலே இல்லாமல் ஜெயிக்க ஆசைப்படும் புது கலாச்சாரம்.. ஆபத்து

Google Oneindia Tamil News

சென்னை: ஊராட்சி பதவிகளை அதிகாரத்தில் இருந்த அரசியல்வாதிகள் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்து ஏலம் விட்டு தேர்தலே இல்லாமல் பதவிக்கு வர விரும்புகிறார்கள். இந்த தேர்தலில் இத்தகைய புதுமையான கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இதுதொடர்பான ஆதாரங்களை திரட்டுவது தேர்தல் ஆணையத்திற்கு மிகவும் சவாலானது.

தமிழகத்தின் ஊரக பகுதிகளுக்கு வரும் டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதி ஆகிய நாட்களில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடக்கிறது. இதில் போட்டியிட விரும்புவோர் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும்.

இந்நிலையில் துரதிஷ்டவசமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிகள், கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடுவோர் இந்த முறை சிண்டிகேட் அமைத்து ஏலம் விட்டு தேர்தலே இல்லாமல் பதவிக்கு வர விரும்பும் கலாச்சாரம் பரவி வருகிறது.

புதுவையிலும் வெடித்தது போராட்டம்.. மாணவர்கள் ஸ்டிரைக்... ஜனாதிபதி வரும் நேரத்தில் டென்ஷன்!புதுவையிலும் வெடித்தது போராட்டம்.. மாணவர்கள் ஸ்டிரைக்... ஜனாதிபதி வரும் நேரத்தில் டென்ஷன்!

மறுக்கமுடியாது

மறுக்கமுடியாது

இதற்கு முன்பும் இப்படி சில ஊராட்சிகளில் நடந்திருக்கிறது என்றாலும் இப்படி ஏலம் நடந்து ஒரு மனதாக தேர்வு செய்யப்படும் புதிய கலாச்சாரம் ஜனநாயக தேர்தல் முறையையே கேலிக்கூத்தாக்கும் வகையில் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகள்

முன்பெல்லாம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இரு தரப்பு வலுவான வேட்பாளர்கள் பணம், பரிசு பொருள்களை கொடுத்து அதிகாரத்துக்கு வர விரும்புவார்கள். அதன்படி வாக்காளர்களுக்கு தேர்தலுக்கு முந்தைய நாளில் பணத்தை அரசியல்வாதிகள் சரியாக சேர்த்து விடுவார்கள். இதை தடுக்க தேர்தல் ஆணையம் இதுவரை எந்த உறுதியான நடவடிக்கை எடுக்க முடியாமல் வேடிக்கைதான் பார்க்கிறது.

வேடிக்கை பார்க்கும்

வேடிக்கை பார்க்கும்

இந்த சூழலில் தேர்தலே இல்லாமல் சிண்டிகேட் அமைத்து ஊராட்சி பதவிகள் ஏலம் விடப்படுவதை தடுக்க என்ன செய்யபோகிறது தேர்தல் ஆணையம் என்று பொதுமக்கள் கேட்கிறார்கள்.

கவனிக்க வேண்டும்

கவனிக்க வேண்டும்

மதுக்கடைகளை ஏலம் எடுப்பதை போல் சிண்டிகேட் போட்டு ஊராட்சி தலைவர் பதவிக்கு ஏலத்தை மறைமுகமாக நடத்துவதாக புகார் எழுந்துள்ளது. எனவே இதுவரை எந்தெந்த ஊராட்சிகளில் எவ்வளவு பதவிக்கு ஒருவரை தாண்டி வேறு யாருமே போட்டியிடவில்லை என்பதே தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டியது அவசியம் ஆகும்.

முட்டாள் அல்ல

முட்டாள் அல்ல

உண்மையிலேயே யாரும் போட்டியிடவில்லையா.. இல்லை அதில் ஏதேனும் சதிகள் உள்ளதா என்பதை தீர விசாரிக்க வேண்டும். இன்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிய உள்ள நிலையில், எத்தனை பேர் தேர்தல் இல்லாமல் போட்டியின்றி தேர்வு செய்யப்பட போகிறார்கள் என்பது குறித்த ஐயமே அச்சத்தை உருவாக்கியுள்ளது. மக்களை முட்டாளாக்கும் நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Take a Poll

English summary
Auction local body posting : politicians willing to win without election to get local body posting
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X