சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊரக உள்ளாட்சி தேர்தல்.. அசராத அதிமுக.. அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது

Google Oneindia Tamil News

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அதிமுகவின் 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில், 2 கட்டங்களாக, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து, அனைத்து கட்சிகளும், தேர்தலை எதிர்கொள்ள முழு வீச்சில் தயாராகி வருகின்றன.

Local body election: AIADMK released 2nd list of candidates

இந்த நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான, முதல்கட்ட, அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. முதல்கட்டமாக, தேனி, கிருஷ்ணகிரி, அரியலூர், சேலம், திருவாரூர், மதுரை புறநகர் கிழக்கு, தூத்துக்குடி வடக்கு ஆகிய மாவட்டங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், திருவள்ளூர், திருவண்ணாமலை, நாமக்கல், நீலகிரி, திருச்சி, பெரம்பலூர், கரூர், தஞ்சை, நாகை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக இன்று 2வது கட்டமாக அறிவித்துள்ளது.

வழக்கமாக ஜெயலலிதா அதிமுக பொதுச்செயலாளராக இருந்த காலகட்டங்களில், எந்த தேர்தலாக இருந்தாலும், அதிமுக முதலில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும். இப்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும், ஓ.பன்னீர் செல்வம் என இரு தலைமை இருக்கும் நிலையிலும், வேகமாக வேட்பாளர் பட்டியல் வெளியாகி வருகிறது.

ஒரே நேரத்தில் 70 டிராபிக் ரூல்ஸ் பிரேக்.. பைக் விலைக்கு ஈடாக அபராதம்.. ஸ்டன்னான மஞ்சுநாத்ஒரே நேரத்தில் 70 டிராபிக் ரூல்ஸ் பிரேக்.. பைக் விலைக்கு ஈடாக அபராதம்.. ஸ்டன்னான மஞ்சுநாத்

இந்த நிலையில், முறைப்படியாக தேர்தல் அறிவிக்கவில்லை என சட்டப் போராட்டம் நடத்தி வரும் திமுகவும், தனது வேட்பாளர் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. அடுத்த 2 நாட்களில், முதலாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அந்த கட்சி மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
AIADMK released 2nd list of candidates for this local body election, on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X