சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முஸ்லீம்கள் அதிமுகவுக்கு எதிராக உள்ளனர்.. தோல்விக்கு அதுதான் காரணம்.. மாறவேண்டும்..அன்வர்ராஜா அதிரடி

மகனும், மகளும் தோல்வி குறித்து அன்வர் ராஜா விளக்கம் தந்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன ?

    சென்னை: "மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவாக அதிமுக வாக்கு அளித்தது.. அதனால்தான் என் மகள், மகளுக்கு தோல்வி ஏற்பட்டிருக்கிறது.. தோல்வி கிடைக்கும் என்று தெரிந்துதான்.. தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதால்தான்.. எனது மகள், மகனை நிறுத்தினேன்" என்று அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.

    உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.. இதில் திமுக, அதிமுக இரண்டும் சரிக்கு சரி சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்தும் வருகின்றன.

    இறுதி முடிவு அறிவிக்கப்படும் முன்பே, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அவர்கள் தோல்வியடைந்தது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக அதிமுக வாக்களித்ததுதான் காரணம் என்று திமுக சொல்ல ஆரம்பித்துள்ளது.

    ஆட்சியில் இருந்தும்... அதிமுக பிரமுகர்களின் வாரிசுகள் தோல்வி... புறக்கணித்த மக்கள் ஆட்சியில் இருந்தும்... அதிமுக பிரமுகர்களின் வாரிசுகள் தோல்வி... புறக்கணித்த மக்கள்

    சிறுபான்மையினர்

    சிறுபான்மையினர்

    இந்த குடியுரிமை திருத்த சட்டம் குறித்து அதிமுகவின் மூத்த தலைவர் அன்வர் ராஜா, கடந்த 30-ம் தேதி தனது கருத்தை இவ்வாறு வலியுறுத்தினார். "பாஜக அரசுக்கு ஆதரவாக அதிமுக அரசு செயல்படுவதால் தமிழகத்தில் உள்ள சிறுபான்மை மக்களின் வாக்குகளை அதிமுக இழந்து வருகிறது. தேசிய மக்கள் குடியுரிமை பதிவேடு நாடு முழுக்க நடைமுறைப்படுத்தப்படும் என்ற அச்சம் இஸ்லாமிய மற்றும் சிறுபான்மை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் நாட்டின் இறையாண்மை மற்றும் மதசார்பின்மைக்கு பாதிப்பு வந்துவிடும். எனவே அதிமுக, மத்திய அரசின் இந்த சட்டத்தை எதிர்க்க வேண்டும்" என்று ஆழமாகவே தெரிவித்திருந்தார்.

    தோல்வி

    தோல்வி

    இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையில், அன்வர் ராஜாவின் மகன், மகள் இருவருமே அதிர்ச்சி தோல்வியை தழுவியுள்ளனர்.. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவாக அதிமுக வாக்கு அளித்ததுதான் மகன், மகள் தோல்விக்கு காரணம் என்று அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.

    பொய் பிரச்சாரம்

    பொய் பிரச்சாரம்

    மகன், மகளின் தோல்வி குறித்து அன்வர் ராஜா தனியார் டிவிக்கு போன் மூலம் பேட்டி தந்தார்.. அப்போது இந்த தோல்விக்கான காரணத்தையும் சொன்னார். அதில், "மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவாக அதிமுக வாக்கு அளித்தது.. அதனால்தான் தோல்வி ஏற்பட்டிருக்கிறது.. சட்டம் பற்றி எதிர்த்தரப்பினர் பரப்பிய பொய்யை நம்பி இஸ்லாமியர்கள் அதிமுகவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

    சட்டதிருத்தம்

    சட்டதிருத்தம்

    அதிமுகவில் இருந்து அந்த வார்டுகளில் யாரும் போட்டியிட முன் வராததால், தோல்வி கிடைக்கும் என்று தெரிந்துதான்.. தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதால்தான்.. எனது மகள், மகனை நிறுத்தினேன்... குடியுரிமை திருத்த சட்டம் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று மக்கள் நம்புகின்றனர். இப்போதைய சூழலில் முஸ்லிம்கள் எங்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை

    பரிசீலனை

    பரிசீலனை

    ஊரக உள்ளாட்சி தேர்தலில் சிறுபான்மையின மக்கள் அதிமுகவையும், அதன் கூட்டணி கட்சிகளையும் புறக்கணித்துள்ளனர். அதோடு, தேசிய குடியுரிமை பதிவேடு நாடு முழுவதும் அமலாகும் என்ற அச்சம் சிறுபான்மையினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.. சிறுபான்மையினர் அச்சப்படுவதால் அதிமுக தனது முடிவை பரிசீலனை செய்யும் என்று நம்புகிறேன்" என்றார்.

    English summary
    local body election result: anwar raja says about son and daughters defeat
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X