சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உள்ளாட்சி தேர்தல் வாக்கு சதவிகிதம்.. திமுக-அதிமுக இடையில் இவ்வளவு வித்தியாசமா?3வது பெரிய கட்சி எது?

Google Oneindia Tamil News

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் சதவிகித ரீதியாக எந்த கட்சி எவ்வளவு இடங்களை பெற்றுள்ளது என்று தேர்தல் ஆணையம் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

9 மாவட்டங்களில் நடந்து முடிந்த இடைத்தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது. மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் , ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் , பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து கவுன்சிலர் ஆகிய பதவிகளை தேர்வு செய்ய இந்த தேர்தல் நடந்தது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி நடந்தது.

இதில் சில பதவிகளுக்கு இன்னும் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய இரண்டு முக்கியமான பதவிகளையும் திமுக, திமுக கூட்டணி கட்சிகள்தான் கைப்பற்றி உள்ளன.

பரோட்டா சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கிய கல்லூரி மாணவர் மரணம்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்பரோட்டா சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கிய கல்லூரி மாணவர் மரணம்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்

இடங்கள்

இடங்கள்

140 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் பதவிக்கு நடந்த தேர்தலில் 138 இடங்களில் திமுக வென்றுள்ளது. 2 இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றுள்ளது. ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்த 1,381 இடங்களில் 1,1180 இடங்களை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெற்றுள்ளன. திமுக மட்டும் தனியாக 974 இடங்களை வென்றுள்ளது. அதிமுக கூட்டணி 220 ஒன்றிய இடங்களை வென்றுள்ளது. அதிமுக தனியாக 212 இடங்களை வென்றுள்ளது . பா.ம.க. 45 இடங்களை ஒன்றிய கவுன்சில் பெற்றுள்ளது.

சதவிகிதம்

சதவிகிதம்

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் சதவிகித ரீதியாக எந்த கட்சி எவ்வளவு வாக்குகளை, எவ்வளவு சதவிகித இடங்களை பெற்றுள்ளது என்ற விவரங்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் பெற்ற இடங்கள் சதவிகித வாரியாக .

திமுக - 90.85% இடங்கள்

அதிமுக - 1.31%இடங்கள்

காங்கிரஸ் - 5.23%இடங்கள்

பாஜக - உள்ளிட்ட மற்ற அனைத்து கட்சிகளும் ஒரு இடங்களை கூட பெறவில்லை

முடிவு அறிவிக்கப்படாதவை 1.96% இடங்கள்

 மாவட்ட கவுன்சிலர் பெரிய கட்சி

மாவட்ட கவுன்சிலர் பெரிய கட்சி

மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் திமுகதான் அதிக இடங்களை வென்றுள்ளது. திமுக - 90.85% இடங்கள் பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. அதிமுக - 1.31% இடங்கள் மட்டுமே பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்ற மொத்த அதிமுக கூட்டணியை விட அதிக இடங்கள் பெற்றுள்ளது. காங்கிரஸ் - 5.23% இடங்கள் திமுக கூட்டணியில் இருந்து மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு பெற்றுள்ளது.

இடங்கள் அடிப்படை

இடங்கள் அடிப்படை

இடங்கள் அடிப்படையில் மாவட்ட கவுன்சிலர் பதவியில் காங்கிரஸ்தான் இரண்டாவது பெரிய கட்சியாகும். அதேபோல் விசிக 3 இடங்களை மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு பெற்றுள்ளது. இதனால் விசிகவும் மாவட்ட கவுன்சிலர் இடங்கள் அடிப்படையில் அதிமுகவை விட பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

ஒன்றிய கவுன்சிலர்

ஒன்றிய கவுன்சிலர்

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் பெற்ற இடங்கள் சதவிகித வாரியாக .

திமுக - 68.26% இடங்கள்

அதிமுக - 14.84% இடங்கள்

காங்கிரஸ் - 2.32% இடங்கள்

பாஜக - 0.56% இடங்கள்

சிபிஐ - 0.21% இடங்கள்

சிபிஐஎம் - 0.28% இடங்கள்

தேமுதிக - 0.07% இடங்கள்

சிபிஐஎம் - 0.28% இடங்கள்

மற்றவை - 12.46% இடங்கள்

 எத்தனை இடங்கள்

எத்தனை இடங்கள்

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் பெற்ற இடங்கள் சதவிகித வாரியாக திமுகவே முன்னிலை பெற்றுள்ளது. திமுக - 68.26% இடங்கள் பெற்று முதலிடத்தில் உள்ளது. அதிமுக - 14.84% இடங்கள் பெற்றுள்ளது. மூன்று பெரிய கட்சியாக காங்கிரஸ் - 2.32% இடங்கள் பெற்றுள்ளது.பாஜக - 0.56% இடங்கள் பெற்று நான்காம் இடம் பிடித்துள்ளது.

English summary
Tamilnadu Local Body Election Result: Election Commision releases seat share percentage of DMK, ADMK, INC, BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X