சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்.. இன்று வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கான ஊரக பகுதி உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களில ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தலாம் என தீர்ப்பு அளித்துள்ளது.

Local body elections in 27 districts of Tamil Nadu: Start filing nominations today

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து பழைய அறிவிப்பினை ரத்து செய்த மாநில தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பினை வெளியிட்டது.

அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு,வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற 27 மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் டிசம்பர் 27. 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

குடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு மட்டும் ஏன் இந்திய குடியுரிமை இல்லை? ராஜ்நாத் விளக்கம்குடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு மட்டும் ஏன் இந்திய குடியுரிமை இல்லை? ராஜ்நாத் விளக்கம்

இந்த தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் இன்று (திங்கள் கிழமை) முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனு தாக்கல் செய்ய டிசம்பர் 16ம் தேதி கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பு மனு பரிசீலனைகள் டிசம்பர் 17ம் தேதி நடைபெறும். மனுக்களை திரும்ப பெற டிசம்பர் 19ம் தேதி கடைசி நாளாகும்.

27 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜனவரி 2ம் தேதி எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் உறுப்பினரகள் பதவி ஏற்பு ஜனவரி 6ம் தேதி நடைபெற உள்ளது.

English summary
Local body election in tamilnadu: Start filing nominations from today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X