• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஆரம்பிச்சாச்சு.. வெடிக்கும் பூகம்பம்.. எல்லாத்துக்கும் "அவங்க" தான் காரணம்.. புலம்பும் பாஜக.. நிஜமா?

|

சென்னை: வாக்குப்பதிவு முடிந்த நிலையில், கூட்டணி கட்சிகள் குறித்த தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.. அந்த வகையில், கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒன்றுக்கொன்று தலைமையிடம் அதே இணக்கத்துடன் இருக்கின்றனவா? அல்லது ஏதேனும் அதிருப்திகள் கிளம்பி உள்ளனவா என்பது குறித்த செய்திகளும் கசிந்து வருகின்றன.

இந்த முறை தேர்தலில் கூட்டணிகளின் முக்கியத்துவம் அபாரமானவை.. தவிர்க்க முடியாதவையும்கூட.. அந்த வகையில் 4 கட்சிகளின் கூட்டணி பெரிதும் பேசப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், கமல், சீமான், டிடிவி தினகரன் என ஐந்து முனை போட்டி இருந்தாலும்கூட, இதில் சீமானை தவிர்த்து மற்ற 4 கட்சிகள்தான் கூட்டணி வைத்தன.

திமுக

திமுக

அதேபோல, அதிமுக கூட்டணியைவிட திமுக கூட்டணி பலம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.. கூட்டணியை வலுப்படுத்த அதிமுக தலைமை தவறிவிட்டது என்றும், விஜயகாந்த், கருணாஸ் என கூட்டணியில் இருப்பவர்களையும் இழுத்து பிடிக்க முடியாமல், கையில் இருப்பவர்களையும் நழுவவிட்டுவிட்டது அதிமுக என்பதே பேச்சாக உள்ளது.

அதிமுக

அதிமுக

அதேபோல, அமமுக கூட்டணியில் நிர்ப்பந்தம் காரணமாகவும், வேறு வழியில்லை என்பதற்காகவும்தான் தேமுதிக இடம்பிடிக்க நேர்ந்தது.. கடைசியில் கூட்டணியை ஆதரித்து சரிவர பிரச்சாரம் செய்யாதது என்பன உட்பட பல அதிருப்திகள் அமமுக-தேமுதிக கூட்டணிக்குள் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. கமலின் மய்யமும் இதில் சேர்த்து கொள்ளலாம்.. சமகவுக்கு எதற்காக அத்தனை சீட்களை தந்தும், ராதிகா மட்டுமே அத்தனை பிரச்சாரத்தையும் தூக்கி நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

கமல்

கமல்

கமல் தன் கட்சி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்யவே டைம் கிடைக்காமல், ஹெலிகாப்டரில் பறந்து பறந்து போராடினார்.. அதனால், இக்கட்சிகள் ஒன்றோடொன்று கூட்டணி வைக்க பாடுபட்டதைவிட, பிரச்சார சமயங்களில் பெரிதும் அவதிப்பட்டுவிட்டன என்றே தெரிகிறது. இப்போது, அடுத்த கூட்டணியான அதிமுக - பாஜக பற்றின தகவல்கள் கசிந்து வருகின்றன.. 20 சீட்களை தந்து என்ன பிரயோஜனம்? தொகுதிக்குள் இறங்கி அதிமுக தரப்பில் சரியாக வேலைசெய்யவில்லை என்ற அதிருப்தி பாஜக தரப்பில் கிளம்பி உள்ளதாம்..

குஷ்பு

குஷ்பு

"தேர்தலுக்கு பிறகு வெளிவந்த கணிப்புகளில், அதிமுகவின் வாக்குகள் எங்களுக்கு முழுமையாக விழவில்லை, நாங்கள் போட்டியிட்ட பல தொகுதிகளில் அதிமுகவையே மலைமாதிரி நம்பியிருந்தோம்... ஆனால், எங்களுக்கு ஒழுங்காக வேலை செய்யவில்லை.. குஷ்புவுக்கு கூட அதிமுக நிர்வாகிகள் தொகுதியில் வேலை செய்யாமல், கண்டுகொள்ளமல் இருந்தனர்..

தொகுதி

தொகுதி

அதனால்தான், சுந்தர்.சி களத்தில் இறங்கி முயற்சிகளை மேற்கொண்டார்.. தொகுதிக்குள் அதிமுக நிர்வாகிகளிடம் பேசி, தேர்தல் வேலையை செய்யவைத்தார். இதெல்லாம் டெல்லி தலைமையிடமும் சொல்லப்பட்டுள்ளது.. எல்லாம் ரிசல்ட் வரட்டும் பார்த்துக்கலாம் என்று மட்டும் சொல்லி விட்டார்கள்" என்ற புலம்பல்கள் தற்போது வெடித்து கிளம்பி உள்ளதாம்.

பாஜக

பாஜக

இப்படித்தான், இதே குற்றச்சாட்டைதான் கடந்த எம்பி தேர்தலின்போதும் பாஜக தரப்பில் முன்வைக்கப்பட்டது.. தங்கள் தோல்விக்கு அதிமுகவின் ஒத்துழைப்பு கிடைக்காததே என்று வெளிப்படையாகவே தலைவர்கள் சொல்லி வந்தனர்.. இப்போதும் அதே அதிருப்தி குரல்கள் கேட்க தொடங்கி உள்ளது.. இது வரப்போகும் நாட்கள்ல அதிமுக - பாஜக கூட்டணியை எந்த அளவுக்கு வலுப்படுத்தப்போகிறதோ? அல்லது பலவீனப்படுத்தப் போகிறதோ தெரியவில்லை.. பார்ப்போம்..!

English summary
Local Politics in ADMK and BJP, sources say
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X