சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வந்தது சிக்கல்.. ஸ்டாலின் காதுக்கு சென்ற புகார்.. 2 அமைச்சர்கள் செய்த காரியம்.. பரபரப்பில் அறிவாலயம்

திமுகவில் 2 அமைச்சர்கள் மீது புகார் கிளம்பி வருவதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: யார் கண்ணு பட்டதோ.. திமுகவுக்குள் 2 சீனியர்கள் மீது அதிருப்திகளும், புகார்களும் கிளம்பி உள்ளன.. இந்த புகார்கள் நேரடியாக ஸ்டாலினுக்கு செல்ல உள்ளதால், விரைவில் அறிவாலயத்தில் பஞ்சாயத்து கூடும் என்ற பரபர எதிர்பார்ப்புகள் கூடி வருகின்றன.

இந்த முறை ஸ்டாலின் பொறுப்பேற்றதுமே, தன்னுடைய அமைச்சரவை கூட்டி ஒரு மீட்டிங் போட்டிருந்தார்.. அதில், யார் மீது புகார் வந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், ஒருவேளை தவறு செய்திருந்தால், அதை விசாரித்து உறுதியானபிறக, அமைச்சர் பதவியும் பறிக்கப்படும் என்று ஸ்ட்டிரிக்ட்டாக வார்ன் செய்திருந்தார்.

அதற்கேற்றபடி அமைச்சர்களும் எந்தவித குறையுமில்லாமல் தங்கள் பணிகளை செய்து வந்தனர்.. ஒருங்கிணைந்து கொரோனாவை விரட்டும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர்..

பாஜகவின் செம பிளான்.. உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிடம்.. 5 மாநகராட்சிகளை கேட்க திட்டம்?பாஜகவின் செம பிளான்.. உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிடம்.. 5 மாநகராட்சிகளை கேட்க திட்டம்?

நெருக்கம்

நெருக்கம்

இந்நிலையில், கடந்த மாதம் முதல்முறையாக ஒரு அமைச்சர் மீது ஒரு லேசான புகார் கிளம்பியது.. அவர் ஒரு வட தமிழக அமைச்சராம்... திமுக தலைமைக்கு ரொம்பவும் நெருக்கமானவராம்.. அவரது சொந்த மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில், எப்போதுமே காண்ட்ராக்டர்கள் கூட்டம் அலைமோதுவமாகவும், அதிலும் அவர்களில் பெரும்பாலானோர் அதிமுக காண்ட்ராக்டர்கள் என்றும் சொல்லப்பட்டது. அவர்களுக்குத்தான் டெண்டர்களை இறுதி செய்ய, தனது துறையின் உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாராம் அமைச்சர்...

கான்ட்ராக்டர்கள்

கான்ட்ராக்டர்கள்

இதனை தெரிந்துகொண்ட திமுக காண்ட்ராக்டர்கள், அமைச்சரிடம் நியாயம் கேட்டுள்ளனர்.. அதற்கு அமைச்சரோ, இப்போதைக்கு அதிமுகவினரிடம்தான் பணம் இருக்கு... அவங்ககிட்ட தான் டெண்டர் விதிமுறைகளை பூர்த்தி செய்யற தகுதியும் இருக்கு... ஒரு வருஷம் போகட்டும்.. இப்போ என்ன அவசரம்? அப்பறம் உங்களுக்கு பார்க்கலாம் என்று கூலாக சொல்லி உள்ளதாக தெரிகிறது. அதனால், விரைவில் பஞ்சாயத்து கூடும் என்றும் தகவல்கள் கசிந்தன. இப்போது விஷயம் என்னவென்றால், சீனியர் அமைச்சர்கள் 2 பேர் மீது அறிவாலயத்தில் புகார் வாசித்து வருகிறார்களாம் மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள்.

கழக செயலாளர்கள்

கழக செயலாளர்கள்

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவிருக்கும் 9 மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்கள், அந்த மாவட்டம் மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டத்தின் கழக செயலாளர்கள் என அனைவருக்கும் உள்ளாட்சி தேர்தலில் கவனம் செலுத்துமாறு சமீபத்தில் திமுக தலைமை உத்தரவு பிறப்பித்திருந்தது. சம்மந்தப்பட்ட மா.செ.க்கள், அந்த மாவட்டத்திற்கு பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர்கள் ஆகியோர் உள்ளாட்சி தேர்தலில் முழுமையான வெற்றியை பெற வேண்டும் என்பதற்கேற்ப கவனம் செலுத்தி வருகின்றனர்.

2 அமைச்சர்கள்

2 அமைச்சர்கள்

இந்த நிலையில்தான் சீனியர் அமைச்சர்களான துரைமுருகன், தா.மோ.அன்பரசன் ஆகிய இருவர் மீதும் தங்களின் அதிருப்திகளை அறிவாலயத்தில் கொட்டி வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலின் வெற்றிக்காக வேலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயனம் செய்த துரைமுருகன், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது, "கட்சியிலுள்ள துரோகிகள் யாரென்று எனக்குத் தெரியும். அவர்களின் பட்டியலை தயாரித்து வைத்திருக்கிறேன். உள்ளாட்சி தேர்தலிலிலும் உள்ளடி வேலை செய்து கட்சியை தோற்கடித்தால் நான் சர்வாதிகாரியாக மாறுவேன். எல்லோரையும் கட்சியிலிருந்து நீக்குவேன்" என கடுமையாக பேசினார்.

சீனியர்கள்

சீனியர்கள்

இதுதான், நிர்வாகிகளுக்கு அதிருப்தியை தந்து வருகிறது.. "தேர்தல்னா தட்டிக் கொடுத்து வேலை வாங்க வேண்டும். அதை செய்ய தெரியவில்லை. இவர்தான் மாவட்டத்தில் கோஷ்டி பூசலை வளர்க்கிறார். சீனியராக இருந்தும் எல்லோரையும் அரவணைத்து அரசியல் செய்யத் தெரியவில்லை. கட்சிக்காரனை நீங்க மதிக்கலைன்னா உங்களை கட்சிக்காரன் எப்படி மதிப்பான்? உங்களிடமுள்ள குறையை சரி செய்வதை விட்டு கட்சிக்காரனை குற்றம் சொன்னால் எப்படி?" என்று ஏகத்துக்கும் குமுறிக்கொண்டிருக்கிறார்களாம் வேலூர் உடன்பிறப்புகள்.

அன்பரசன்

அன்பரசன்

இந்த அதிருப்திகள்தான், துரைமுருகனுக்கு எதிராக, அறிவாலயத்தில் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் அன்பகம் கலையிடம் புகாராக தெரிவிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.. இதற்கிடையே, மதுராந்தகத்தில் ஒன்றிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார் அமைச்சர் தா. மோ. அன்பரசன்.. அப்போது பேசிய அவர், "மதுராந்தகம் தொகுதிக்குள் அடங்கிய அனைத்து உள்ளாட்சி இடங்களையும் திமுக கைப்பாற்றியாக வேண்டும். அது நடக்கலைன்னா ஒன்றிய செயலாளர்கள் கழுத்தில் தலை இருக்காது, ஜெயிக்கலைன்னா கழுத்தறுத்துடுவேன்" என்கிற ரீதியில் கடுமை காட்டியிருக்கிறார்.

Recommended Video

    மருத்துவ படிப்பில் OBC-க்கு 27% இட ஒதுக்கீடு.. Twitter-ல் Stalin-க்கு நன்றி சொல்லும் வட இந்தியர்கள்!
    மதிமுக

    மதிமுக

    அதாவது அன்பரசன் பேசும்போது, "மதிமுகவில் 25 வருஷமாக இருக்கிற மல்லை சத்யா, நம்மை நம்பி, மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்டார். அவரது தோல்விக்கு, முதல்வர் ஸ்டாலினே ரொம்ப வருத்தப்பட்டார்... உள்ளாட்சித் தேர்தலில், மதுராந்தகம் தொகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளை கைப்பற்றியாக வேண்டும். அதில் தோல்வி அடைந்தால், கட்சி ஒன்றிய செயலர்கள் கழுத்தை அறுத்து விடுவோம்.

    வேட்பாளர்கள்

    வேட்பாளர்கள்

    திமுகவுக்கு துரோகம் செய்யும் கட்சியினர் வாழ மாட்டார்கள்... எதிர்காலத்தில் உருப்பட மாட்டார்கள்... தேர்தலில் துரோகம் செய்தால், நடுரோட்டில் நிற்க வேண்டியது வரும்... துரோகிகளை கேட்க நாதி இருக்காது... தலைமை அறிவிக்கிற வேட்பாளர்களை, வெற்றி பெற வைக்க வேண்டும்... லோக்சபா, சட்டசபை தேர்தலில் எந்த கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விரும்பி, மக்கள் ஓட்டுப் போடுவார்கள்.. ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் அப்படி இல்லை.. யோக்கிமானவர், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர் இப்படி வேட்பாளரை பார்த்து தான் ஓட்டுப் போடுவர்" என்று பேசியிருக்கிறார்.

    பஞ்சாயத்து

    பஞ்சாயத்து

    இந்த பேச்சை கேட்டு ஒன்றிய செயலாளர்கள் அதிர்ந்து போய்விட்டனராம்.. அப்போதே கூட்டத்தில் முணுமுணுப்பு வந்திருக்கிறது... இந்த நிலையில், அன்பரசனின் அத்தகைய மிரட்டல் பேச்சு குறித்தும் அன்பகம் கலையிடம் புகார் வாசிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே அறிவாலயத்தில் நடக்கும் பல தவறுகள், ஸ்டாலினின் கவனத்துக்கு போவதில்லை என்ற ஒரு செய்தி கசிந்தது.. ஆனால், தன்னுடைய பணிகளை கவனிப்பதற்கே நேரம் போதாததால், கட்சி தலைமையில் நடக்கும் தவறுகளையும், நடப்பவைகளையும் தனது கவனத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதற்காகவே தனது விசுவாசியான ஒருவரை நியமிக்க முடிவு செய்தே கலையை கொண்டு வந்தார்.

    நியமனம்

    நியமனம்

    இப்போது கலையிடம்தான் இந்த 2 சீனியர் அமைச்சர்களின் புகார்களும் சென்றுள்ளன.. கலையின் நியமனத்தில் கட்சிக்குள் சிலரிடம் அதிருப்தி நிலவி கொண்டிருக்கிறது.. அப்படி இருந்தும், தனக்கு வந்து சேரும் புகார்களை விசுவாசியான கலை தெரிவித்தபடியே வருகிறார்.. புகாருக்கு உள்ளாகி உள்ள 2 அமைச்சர்களுமே சீனியர்கள் என்றாலும், இந்த பிரச்சனையை ஸ்டாலின் எப்படி கையாளுவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. விரைவில், அறிவாலயத்தில் சீனியர்களிடம் ஒரு பஞ்சாயத்தை ஸ்டாலின் நடத்துவார் என்கிறது அறிவாலய தரப்பு... பார்ப்போம்.!

    English summary
    Local Politics in DMK and Complaint raised on two senior ministers in the party
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X