• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஆரம்பிச்சாச்சு.. "திமுக" அமைச்சர் வீட்டில் "அதிமுக"வினரா?.. யார் அவர்.. அனலடிக்கும் அறிவாலயம்..!

Google Oneindia Tamil News

சென்னை: என்னதான் ஆஹா ஓஹோவென்று ஆட்சி நடந்தாலும், ஆங்காங்கே சில அதிருப்திகளும் திமுகவில் எழுந்து கொண்டுதானிருக்கிறது.. அந்த வகையில் ஒரு அமைச்சர் பெயர் கோட்டையில் பலமாக எதிரொலிக்கிறது.. யார் அவர்? என்ன நடக்கிறது திமுகவில்?

இந்த முறை ஸ்டாலின் பொறுப்பேற்றதுமே, தன்னுடைய அமைச்சரவையை கூட்டி ஒரு மீட்டிங் போட்டிருந்தார்.. அதில், யார் மீது புகார் வந்தாலும், அதை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும், ஒருவேளை தவறு செய்திருந்தால், அமைச்சர் பதவியும் பறிக்கப்படும் என்று ஸ்ட்டிரிக்ட்டாக வார்ன் செய்திருந்தார்.

அதற்கேற்றபடி அமைச்சர்களும் எந்தவித குறையுமில்லாமல் தங்கள் பணிகளை செய்தன.. குறிப்பாக ஒன்றுபட்டு ஒழிப்போம் கொரோனாவை என்ற முழக்கத்துக்கு ஏற்றவாறு எல்லாருமே தங்கள் தங்கள் தொகுதிகளில் முனைப்போடு செயல்பட்டார்கள்..!

ஓஹோ.. ஸ்டாலின் இதற்காகதான் டெல்லி சென்றுள்ளாரா.. குடியரசு தலைவரை இன்று சந்திக்கிறார்.. பரபர தலைநகரம்ஓஹோ.. ஸ்டாலின் இதற்காகதான் டெல்லி சென்றுள்ளாரா.. குடியரசு தலைவரை இன்று சந்திக்கிறார்.. பரபர தலைநகரம்

நெருக்கம்

நெருக்கம்

ஆனால், முதல்முறையாக ஒரு அமைச்சர் மீது ஒரு லேசான புகார் கிளம்பி உள்ளது.. அவர் ஒரு வட தமிழக அமைச்சராம்... திமுக தலைமைக்கு ரொம்பவும் நெருக்கமானவராம்.. அவரது சொந்த மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில், எப்போதுமே ஒரு கூட்டம் அலைமோதுகிறதாம். இவர்கள் எல்லாம் காண்ட்ராக்டர்கள் என்கிறார்கள்.. அதிலும் அவர்களில் பெரும்பாலானோர் அதிமுக காண்ட்ராக்டர்கள் தானாம்.

உத்தரவு

உத்தரவு

அவர்களுக்குத்தான் டெண்டர்களை இறுதி செய்ய, தனது துறையின் உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் அமைச்சர்... இதனை தெரிந்துகொண்ட திமுக காண்ட்ராக்டர்கள், அமைச்சரிடம் ஸ்ட்டிரைட்டாகவே நியாயம் கேட்க கிளம்பி விட்டனர்.. ஆனால், இதற்கெல்லாம் அசராத அமைச்சரோ, "இப்போதைக்கு அதிமுகவினரிடம்தான் பணம் இருக்கு... அவங்ககிட்ட தான் டெண்டர் விதிமுறைகளை பூர்த்தி செய்யற தகுதியும் இருக்கு... ஒரு வருஷம் போகட்டும்.. இப்போ என்ன அவசரம்? அப்பறம் உங்களுக்கு பார்க்கலாம் என்று கூலாக சொல்லிவிட்டாராம்" அமைச்சர்.

பஞ்சாயத்து

பஞ்சாயத்து

இதனால் திமுக காண்ட்ராக்ட்டர்களோ, புலம்பி கொண்டே அவரது வீட்டிலிருந்து வெளியேறி கொண்டிருக்கிறார்களாம்.. இப்படியெல்லாம் கேட்டால் சரியாகாது, நேராக, அறிவாலயத்தில் விரைவில் பஞ்சாயத்தை கூட்டவும் முடிவு செய்து விட்டார்களாம்..

 ஜூனியர் அமைச்சர்கள்

ஜூனியர் அமைச்சர்கள்

இதனிடையே, ஜூனியர் அமைச்சர்கள் சார்ந்த துறைகளில் நடக்கும் டெண்டர் விவகாரங்களில், திமுக மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் சிலர் வேலைகளை எடுக்க சம்மந்தப்பட்ட துறையின் அமைச்சர்களை சந்தித்து வருகிறார்கள்... டெண்டர்கள் எடுக்கவும், பணி நியமனம் மற்றும் இடமாறுதல் குறித்தும் அவர்களிடம் கோரிக்கைகளும் வைக்கப்படுகின்றன.

புலம்பல்

புலம்பல்

ஆனால், ஜூனியர் அமைச்சர்களோ, "எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளன... உங்களின் கோரிக்கைகளை என்னிடம் கொடுப்பதற்கு பதில் , குறிப்பிட்ட ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் பெயரைச் சொல்லி அவரிடம் கொடுங்கள்... அந்த அதிகாரி, முதல்வரிடம் சொல்லி உங்க கோரிக்கையை நிறைவேற்ற முயற்சிப்பார்" என்று தனது இயலாமையை சொல்லி அனுப்புகிறாராம்...

 பஞ்சாயத்து

பஞ்சாயத்து

கோரிக்கைகளை சுமந்து சென்ற திமுக நிர்வாகிகள், அதிகாரிகளிடம் போகலாமா? வேண்டாமா? போனால் காரியம் நடக்குமா ? என்கிற குழப்பத்திலேயே கோட்டையை சுற்றி சுற்றி வருகிறார்களாம்.. ஆக மொத்தம் அறிவாலயத்தில் விரைவில் வெடிக்க போகிறது பஞ்சாயத்து..!

English summary
Local Politics in DMK and what is going to happen within the Party
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X