• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"83 வயசில் இது தேவையா?".. வெடித்து பொருமும் ஜூனியர்கள்.. குழப்பத்தில் அறிவாலயம்!

|

சென்னை: "83 வயசில் இது தேவையா? 8-வது முறையாக துரைமுருகன் போட்டியிடுவது எல்லாம் நியாயமா? இப்படியே எல்லா மாவட்டங்களிலும் சீனியர்கள், தங்கள் இடத்தை விடாமல் கெட்டியாக பிடித்து வைத்து கொண்டால், நாங்கள் எல்லாம் எங்கே போவது?" என்று திமுகவின் இளைஞர்கள் குரல் அறிவாலயம் நோக்கி வெடித்து கிளம்பி உள்ளது.

எல்லா கட்சிகளிலும் உள்ளதுபோலதான், வழக்கம்போல, திமுகவிலும் உட்கட்சி பூசல் கிளம்பி வருகிறது.. தேர்தல் காலம் நெருங்கிவிட்டதால், அதிருப்திகளும் கூடி வருகின்றன.

விருப்ப மனுக்கள் தாக்கல் செய்து வருகின்றனர்.. பிரச்சனை இங்கிருந்தே ஆரம்பித்துள்ளது.. எத்தனையோ பேர், முக ஸ்டாலின், உதயநிதிக்காக பணம் கட்டுகின்றனர்..

ஒரே கல்லில் மோடி அடித்த "3 மாங்காய்கள்".. மாறிய திடீர் உத்தி.. அதிரும் திமுக.. திகைப்பில் அதிமுக!

ஐயம்

ஐயம்

இளைஞர்களுக்கும், நடுத்தர வயதினருக்கும் சீட் கிடைக்குமா என்ற ஐயம் எழுந்து வருகிறது. காரணம், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், 8-வது முறையாக மறுபடியும் காட்பாடியில் போட்டியிட போகிறாராம்.. அவரது வயதை குறிக்கும் வகையில் 83 பேர் அவருக்காக மனு போட தயாராகி விட்டனர். துரைமுருகன் மீது தொகுதி மக்களுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை வலுத்துள்ளது, குறைந்துள்ளது என்ற விவாதத்துக்குள் போக தேவையில்லை என்றாலும், இளைஞர்கள் பெரும் மனக்குமுறலில் உள்ளதாக கூறப்படுகிறது.

 துரைமுருகன்

துரைமுருகன்

83 வயதாகும் துரைமுருகன், இந்தமுறை போட்டியிடாமல் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று திமுகவினரே சிலர் கட்சி தலைவருக்கு லெட்டரும் எழுதியிருந்தனர். வேலூர் தொகுதி ஒரு உதாரணம்தான்.. இதுபோலவே, நெல்லை, கோவை என பல்வேறு மாவட்டங்களிலும் நடந்து வருகிறது.. சீனியர்களின் இந்த நடவடிக்கை இளைய தலைமுறைக்கு ஒரு சலிப்பை உருவாக்க வருவதாகவும், இப்படி இருந்தால் களப்பணியில் எப்படி இறங்கி வேலை பார்ப்பது என்ற கேள்வியையும் எழுப்புகிறார்கள்.

அப்பாவு

அப்பாவு

நெல்லை ராதாபுரத்தில், அப்பாவு போட்டியிட ரெடியாகி இருந்தாலும், இந்த 6 மாதமாக வீனஸ் வீர அரசு மக்களுடன் படு இணக்கமாகி உள்ளார்.. விருப்ப மனுவையும் தாக்கல்செய்துள்ளார்.. அதுபோலவே, சூலூரில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் இருக்கிறது.. ஆனால், பல இளைஞர்கள் இதே சூலூரை குறி வைத்துள்ளனர்.. இறுதியில் சூலூர் யாருக்கு போக போகிறது என்று தெரியவில்லை.

 தலைமை

தலைமை

மொத்தத்தில் சுருக்கமாக சொல்லப்போனால், ஏற்கனவே குறைந்தபட்சம் 3, 4 முறை போட்டியிட்டவர்கள்தான் இந்த முறையும் சீட் கேட்டு வருகிறார்கள்.. தலைமையுடன் தங்களுக்கு இருக்கும் நெருக்கத்தை காரணமாக காட்டுகிறார்கள்.. தொகுதிக்குள் இதுவரை செய்த திட்டங்களை, மீட்டிங்குகளை, போராட்டங்களை வரிசைப்படுத்துகிறார்கள்.

 ஜுனியர்கள்

ஜுனியர்கள்

அதுமட்டுமல்ல, "எம்ஜிஆர் காலத்தில் இருந்து, கருணாநிதி காலத்தில் இருந்து நாங்கள் கட்சியில் இருக்கிறோம் என்பதை சொல்லி, தங்கள் வாரிசுகளுக்கும் சீட் கேட்டு நெருக்கடி தருகிறார்கள்.. இதை யாராவது எதிர்த்து கேட்டால் இளைஞர்களுக்கு வழிவிடுகிறோம் என்றும் சொல்லி கொள்கிறார்கள்.. இந்த முறையாவது வாரிசுகளை அதிக அளவில் களமிறக்காமல் இருக்க வேண்டும்.. எங்களை போன்றவர்கள் எல்லாம் இப்படியே உழைத்து உழைத்து பின்தங்கிவிடாமல், கைதூக்கி மேலே கொண்டு வர வேண்டும், வாய்ப்பு தர வேண்டும்" என்ற ஏக்க குரல்கள் அதிகமாகவே கேட்க தொடங்கி உள்ளன.

 
 
 
English summary
Local Politics is increasing in the DMK: TN Assembly Election 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X