சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 31 வரை லாக்டவுன் நீடிப்பு - ஞாயிறுகளில் முழு லாக்டவுன்

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை லாக்டவுன் நீடிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். ஜூலை மாதம் போலவே ஆகஸ்ட் மாதத்திலும் அனைத்து ஞாயிறு கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ல

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை லாக்டவுன் சில தளர்வுகளுடன் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் போலவே ஆகஸ்ட் மாதத்திலும் அனைத்து ஞாயிறு கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு லாக்டவுன் நீடிக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. 2 கோடி பேர்வரை நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 1 கோடி பேர் வரை குணமடைந்துள்ளனர். இந்தியாவில் 16 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 10 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

Lockdown 7.0 : Tamil Nadu extends lockdown till August 31, relaxes

தமிழ்நாட்டில் இரண்டரை லட்சம் பேர் வரை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஒன்றரை லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். மார்ச் 24 ஆம் தேதி முதல் பல கட்டமாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு வருகிறது. சில தளர்வுகள் இருந்தாலும் பெரிய அளவில் மக்கள் கூடும் பண்டிகைகள் எதற்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். ஜூலை மாதம் போலவே ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை சில தளர்வுகளிடன் தமிழ்நாட்டில் லாக்டவுன் நீடிக்கும் என்று அறிவித்துள்ளார். அதே நேரத்தில் ஞாயிறு கிழமைகளில் தளர்வுகள் அற்ற முழு லாக்டவுன் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் என்றும் மாநிலங்களுக்கு மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்துக்கு தடை தொடரும் எனவும் முதல்வர் கூறியுள்ளார். வீட்டில் இருந்து வேலை செய்யும் பணியை தனியார் நிறுவனங்கள் தொடரால் என்றும் முதல்வர் கூறியுள்ளார். மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து கிடையாது. இ பாஸ் முறை தொடரும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. நான் பல்வேறு தினங்களில் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட 12 ஒருங்கிணைப்புக் குழுக்களின் கருத்துக்களின் அடிப்படையிலும், பல்வேறு தினங்களில் மாவட்ட ஆட்சியர்களின் காணொலிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு.. மாவட்டங்களிடையே பயணிக்க இ பாஸ் கட்டாயம்.. பஸ், ரயில் சேவை கிடையாதுதமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு.. மாவட்டங்களிடையே பயணிக்க இ பாஸ் கட்டாயம்.. பஸ், ரயில் சேவை கிடையாது

குழுவுடன் நடத்தப்பட்ட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும், மத்திய அரசின் அறிவுரைகளின்படியும், தமிழகத்தில் 31.7.2020 முடிய ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்திலும், பெருநகர சென்னை காவல்துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு அம்மாவின் அரசு, கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், சிகிச்சைகளை வழங்கியும், நிவாரணங்களை வழங்கியும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால் தான், தமிழ்நாட்டில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது. பல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில், குறிப்பாக 29.7.2020 அன்று நடத்தப்பட்ட காணொலிக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் 30.7.2020 அன்று நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 31.7.2020 முடிய தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், 31.8.2020 நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

மேலும், ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் அதாவது 2.8.2020, 9.8.2020, 16.8.2020, 23.8.2020 மற்றும் 30.8.2020) எவ்வித தளர்வுகளும் இன்றி, தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

English summary
The Tamil Nadu government on Monday extended the COVID-19 lockdown across the State by another month till August 31.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X