• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

EXCLUSIVE: "தொட்டு தொட்டு பேசாதீங்க.. இதை அரசியல் பண்றாங்களே.. அவங்கதான் பெரிய வைரஸ்".. கஸ்தூரி நச்

|

சென்னை: "தள்ளி இருங்க.. சுத்தமா இருங்க.. தொட்டு தொட்டு பேசாதீங்க அப்படின்னு நம்ம குடும்பங்களில் போன தலைமுறை வரைக்கும் வழிவழியா வந்ததுதானே... அதையெல்லாம் கெட்ட பேர் வெச்சிட்டு.. உதாசீனப்படுத்திட்டதால, இப்போ பயமுறுத்தி நாம செய்ய வேண்டிய நிலை இருக்கு.. என்னை கேட்டால் கொரோனாவைரஸ் சம்பந்தமாக தமிழக அரசு, மத்திய அரசு எடுத்து வரும் செயல்பாடுகள் பாராட்டத்தக்கதே.. அரசின் உத்தரவுகளை பின்பற்றும் தமிழக மக்களும் பாராட்டக்குரியவர்களே!" என்று நடிகை கஸ்தூரி மனசார தெரிவித்துள்ளார்.

  EXCLUSIVE: 'இதை அரசியல் பண்றாங்களே.. அவங்கதான் பெரிய வைரஸ்'.. கஸ்தூரி நச்

  "உங்களை பொறுத்தவரை, கொரோனாவைரஸ் தொற்று பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்துவரும் செயல்பாடுகள் எப்படி உள்ளன? திருப்திகரமாக இருக்கிறதா? அல்லது இவை எல்லாமே தாமதமான உத்தரவுகள் என்று நினைக்கிறீர்களா? அல்லது வேறு ஏதாவது நடவடிக்கையை அரசு முன்னமேயே செய்திருக்கலாம் என்று கருதுகிறீர்களா? தமிழக மக்கள் இந்த உத்தரவுகளை எப்படி பார்க்கிறார்கள்? எப்படி ஒத்துழைப்பு தருகிறார்கள்? என்ற அடுக்கடுக்கான தொடர் கேள்விகளை "ஒன் இந்தியா தமிழ்" சார்பாக நடிகையும் சமூக செயற்பாட்டாளருமான கஸ்தூரியிடம் முன்வைத்தோம். அதற்கு அவர் நமக்கு அளித்த பதில்தான் இது:

  "மத்திய அரசை பொறுத்தவரை நிறைய விமர்சனங்களை நிறைய பேர் சொல்றாங்க.. எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியில் இருந்து ஆரம்பிச்சு எல்லாருமே, மெத்தனமா இருக்கீங்க அப்படின்னு மத்திய அரசை சொல்லிட்டுதான் இருக்காங்க.. என்னை பொறுத்தவரை மத்திய அரசு செய்யக்கூடிய ஒரு உடனடி கட்டுப்பாட்டினை பிறப்பித்திருக்கிறது.. இது கடினம்தான்.

  கடினம்தான்

  கடினம்தான்

  ஏன்னா இப்படிப்பட்ட சூழலில் இந்த வைரஸ் பெரிய பெரிய நாடுகளை, பொருளாதாரத்தில் மேல்தங்கிய நாடுகளில் அவனவன் என்ன பண்றதுன்னே தெரியாமல் முழிச்சிட்டு இருக்கும்போது, மக்கள் தொகையும், வறுமையும், கட்டுமானங்களும் குறைவு என்பது இந்தியாவில்தான்.. இப்படிப்பட்ட நாட்டில் எந்த அணுகுமுறையுமே பலனளிக்காது.. வேற வழியே கிடையாது.

   ஒத்துழைப்பு

  ஒத்துழைப்பு

  முதல்ல ஒரு 75 இடங்களை மட்டும்தான் ஊரடங்கு போட்டாங்க.. அது 100 ஆயிடுச்சு.. போக போக இந்த சமூக தொற்று என்பதை தடுக்கணும்னா கண்டிப்பா இப்படி வீட்டில் உட்கார வெச்சிதான் ஆகணும்.. இந்த ஒரு கடினமான நேரத்தை நாம எல்லாரும் பொறுப்போடும் சுயகட்டுப்பாடோடும் அரசாங்கத்துக்கு ஒத்துழைச்சுதான் ஆகணும்.. வேற வழியே இல்லை.. இதுல வேளாண்மை, அத்தியாவசிய தேவைகளுக்கு விதிவிலக்கு இருக்கணும்.. ஏன்னா, விவசாயிகளுடைய வேலை நின்னுபோச்சுன்னா அது ஒட்டுமொத்தமா உணவு சப்ளையை நிறுத்திடும்.

  ஐதராபாத்

  ஐதராபாத்

  அதேபோல அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நல்லாவே வழி செய்துட்டு வர்றாங்க.எனக்கு தெலுங்கானாவைவிட தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சுயகட்டுப்பாடு, ஒத்துழைப்பு ரொம்ப பிடிச்சிருக்கு.. நான் 2 இடத்துலயும் ஏன் சொல்றேன்னா, லாக்டவுன் பிறப்பித்த சமயம் நான் ஐதராபாத்திலதான் இருந்தேன்.. நான் ஷூட்டிங்கில் இருந்தேன்.. அறிவிப்பு வந்ததும் என்னை ஐதராபாத்தில் இருந்து அனுப்பிட்டாங்க.. அதனால அங்கே மக்கள் ஒத்துழைப்பு தர்றதைவிட தமிழ்நாட்டில் நல்ல ஒத்துழைப்பு தர்றாங்க.. நல்லதனமா ஊரடங்குன்னு சொன்னதுமே நம்ம ஆட்கள் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க.

   தமிழக முதல்வர்

  தமிழக முதல்வர்

  அங்க அப்படி இல்லை... கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிச்சாங்க..வெளியே நடமாடினால் கண்டதும் சுட உத்தரவுன்னு கேசிஆர் சொல்லிட்டாரு. தயவு தாட்சண்யமே அவரு பார்க்கலை.. அந்த அளவுக்கு இங்க இல்லை.. சொன்னாலே கேட்கிற மக்கள் இருக்காங்கன்னு நான் நம்பிட்டு இருக்கேன்.. முதலமைச்சர் ஈபிஎஸ்-ஆ இருக்கட்டும், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரா இருக்கட்டும், அவங்களுடைய டீம்-ஆ இருக்கட்டும், போலீஸ், மருத்துவர்கள், அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்றவங்க எல்லாருடைய பங்கும் அதிகம்.. இன்னைக்கு வரைக்கும் பேங்க், பெட்ரோல் பங்க், மெடிக்கல் ஷாப் இப்படி எதுவுமே மூடல. எல்லாரும் திறந்து வெச்சிருக்காங்க.. சொந்த முயற்சியில பண்றாங்க.. அவங்கவங்க சொந்த வாகனத்தில் வந்து போறாங்க.. இப்படி ஒரு பண்பு பாராட்டத்தக்கது.

   பெரிய வைரஸ்

  பெரிய வைரஸ்

  இதில் அரசு, மக்கள் இரு தரப்பையுமே பாராட்டணும்.. இதை வெச்சு அரசியலோ, பிரிவினையோ பேசற எல்லாரையும் வன்மையா கண்டிக்கிறேன்.. அவங்கதான் கொரோனாவைரஸை விட பெரிய வைரஸ்.. ஒத்துழைப்பே தராத மக்கள் வெகு குறைவுதான்.. மத்தபடி பெரும்பாலான மக்களின் ஒத்துழைப்பு இருக்கு அப்படிங்கிறதை நான் பெருமையா சொல்லிக்கிறேன்.. அப்படியே மீறி வெளியே வந்தாலும் போலீசுக்கு பெரிய வேலை வைக்காமல், சொன்னால் உடனே வீட்டுக்கு போயிடறாங்க.

   விழிப்புணர்வு

  விழிப்புணர்வு

  அதனால மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறை லேட்டா என்று கேட்டால், இதுக்கு என்ன சொல்ல முடியும்? 21 நாள்-ன்னு சொல்றாங்க.. ஆனா இன்னும் எவ்ளோ நாள் ஆகுமோன்னு தெரியாது. ஒருகாலத்தில் அம்மை வந்தது, பிளேக் நோய் வந்தது.. அப்பவெல்லாம் கொத்து கொத்தா ஜனங்க விழுந்து செத்தாங்க.. இப்போ அதை தடுக்கணும்னு ஒரு நல்ல எண்ணத்துலயும், திரும்ப அப்படி ஒரு நிலைமை வந்துடக்கூடாதுன்றதுக்காக இந்த அணுகுமுறையை கையில் எடுத்திருக்கோம்.. இந்த ஊரடங்கும் இல்லைன்னா இந்திய மக்கள் தொகையில் பாதிபேர் இறந்துவிடுவாங்க.. வர்றது வரட்டும், வந்தால் வரட்டும் அப்படின்னு விபரீத பரிசோதனையை நாம செய்துட முடியுமா? 130 கோடி பேர் இருக்கோம், இதுல என்ன போகுதுன்னு விட்டுடதான் முடியுமா? முடியாது இல்லை.. இதுக்கு ஒரே வழி வீட்டோட நாம இருந்துட வேண்டியதுதான்.

  பாராட்டுக்கள்

  பாராட்டுக்கள்

  இது ஒன்னுமே இல்லை.. நம் இந்திய கலாச்சாரத்தில் வழிவகையாக வந்த ஒரு விஷயம் தானே... தள்ளி இருங்க.. சுத்தமா இருங்க.. தொட்டு தொட்டு பேசாதீங்க அப்படின்னு நம்ம குடும்பங்களில் போன தலைமுறை வரைக்கும் வழிவழியா வந்ததுதானே... அதையெல்லாம் கெட்ட பேர் வெச்சிட்டு.. அதையெல்லாம் உதாசீனப்படுத்திட்டதால, இப்போ பயமுறுத்தி நாம செய்ய வேண்டிய நிலை இருக்கு.. அதனால என்னை கேட்டால் கொரோனாவைரஸ் சம்பந்தமாக தமிழக அரசு, மத்திய அரசு எடுத்து வரும் செயல்பாடுகள் பாராட்டத்தக்கதே.. அதை பின்பற்றும் மக்களும் பாராட்டக்குரியவர்களே!" என்றார்.

  பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  lockdown: actress kasturi praises central and state governments activities
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more