சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உள்ளதும் போச்சே நொள்ளை கண்ணா.. கோயம்பேடு மார்க்கெட்டா, வைரஸ் மார்க்கெட்டா?.. கஸ்தூரி ஆதங்கம்!

கொரோனா பரவல் அபாயம் குறித்து கஸ்தூரி ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "உள்ளதும் போச்சா நொள்ளை கண்ணா".. என்று கஸ்தூரி நறுக்கென ஒரு பாயிண்ட் சொல்லி உள்ளார்.. தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கஸ்தூரியின் இந்த ட்வீட் நிறைய யதார்த்தங்களையும், உண்மைகளையும் புரிய வைத்துள்ளது!

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கூடி வருகிறது.. சுகாதாரத்துறையும் முழு வீச்சில் இறங்கி உள்ளது.. தமிழக அரசு தொற்று இல்லாத மாநிலமாக மாற்ற போராடி வருகிறது.

இந்த சமயத்தில் சில மாவட்டங்களில் அதிரடிகள் நடந்தன.. ஆபத்தில் இருந்த மாவட்டங்கள், பாதிப்பு அதிகமாக இருந்ததாக சொல்லப்பட்ட மாவட்டங்கள், பச்சை மண்டலத்தில் அடியெடுத்து வைத்துள்ளன.. 12 மாவட்டங்கள் தவிர மற்ற இடங்களில் பாதிப்பு குறைந்து வருகிறது.. இதற்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகள், மக்களின் ஒத்துழைப்புகள் என அனைத்துமே காரணம்தான்.

கஸ்தூரி

கஸ்தூரி

இதுபோன்ற சாதகமான சமயத்தில்தான் தளர்வு என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.. ஆனால் இவைகளுக்கும் பிரச்சனை கிளம்பி உள்ளது.. நடிகை கஸ்தூரி ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. "உள்ளதும் போச்சா நொள்ளை கண்ணா.. பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்ட கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.. அரியலூர் மாவட்டமும் ஆரஞ்சு கலரில் இருந்து ரெட் கலருக்கு சென்றுவிட்டது.. கோயம்பேட்டில் இருந்து தொற்றை பரப்பியவர்களுக்கு நன்றி. கோயம்பேடு மார்க்கெட் இப்போது வைரஸ் மார்க்கெட் ஆகிவிட்டது" என்று பதிவிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கஸ்தூரியின் இந்த ட்வீட்டில் 2 விஷயங்கள் கவனிக்கப்பட உள்ளன.. முதலாவதாக கிருஷ்ணகிரி மாவட்டம்.. பச்சை கலருக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட மாவட்டத்தில் இன்று முதியவர் ஒருவருக்கு தொற்று உறுதியாகி உள்ளது... இப்போதைக்கு முதியவர் வசித்த கிராமம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டும், முதியவருடன் இருந்த உறவினர்கள் 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டும், கண்காணிக்கப்பட்டும் வருகின்றனர், என்றாலும் இது அதிர்ச்சியை தந்து வருகிறது.

பச்சை கலர்

பச்சை கலர்

இதன்மூலம் நமக்கு தெரியவருவது பச்சை கலர் என்று அறிவிக்கப்பட்ட இடத்தில்கூட தொற்று மீண்டும் வரும் என்றால், ஆரஞ்சு, ரெட் கலர் ஜோன்கள் நிலைமை என்னாகும் என்பதே பீதியை தருகிறது. அதனால் தளர்வு செய்யப்பட்ட பச்சை மண்டங்களிலும் தீவிர கண்காணிப்பும், பரிசோதனையும் தேவைப்படுவதையும் இது உணர்த்துகிறது.

மார்க்கெட்

மார்க்கெட்

அதேபோல, கோயம்பேடு மார்க்கெட் விவகாரம் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.. இந்த மார்க்கெட்டில் இருந்து அரியலூர், பெரம்பலூர் வந்த 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது... கோயம்பேடு மார்க்கெட்டில் தொடர்புடைய 65-க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது... இது வேறு மாவட்டங்களுக்கு பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

மைய புள்ளி

மைய புள்ளி

கோயம்பேட்டில் இருந்து லாரிகளில் செல்லும் தொழிலாளர்கள் மூலம் கொரோனா பரவுவதாக சொல்லப்படுகிறது.. கொரோனா பரவலில் மைய புள்ளியாக கோயம்பேடு மார்க்கெட் உள்ளதா என்கிற சந்தேகமும் எழுந்து வருகிறது... இதைதான் கஸ்தூரி அரியலூர் மாவட்டத்தை குறிப்பிட்டு சொல்கிறார்!!

தெரிந்தே தவறு

தெரிந்தே தவறு

கஸ்தூரியின் இந்த டுவீட்டுக்கு பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.."இந்திய அரசாங்கம், வெளியூர்ல இருக்குறவங்க சொந்த ஊருக்கு போலாம், பஸ்ல ட்ரெயின் மக்கள் பயணம் செய்யும்போது இடைவெளி விட்டு நிற்கவும், இதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன என்றும், தெரிஞ்சே செய்யும் தவறை என்ன சொல்வது மேடம்?" என்றும் வினாக்களை எழுப்பி வருகின்றனர்.

English summary
lockdown: actress kasturi tweeted about coronavirus issues
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X