சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எப்ப பார்த்தாலும் "டெல்லி மாநாட்டுக்கு போய் வந்தவர்கள்" என சொல்லாதீங்க.. அரசுக்கு அன்புமணி கோரிக்கை

தமிழக அரசுக்கு அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: எப்ப பாரு என்ன டெல்லி போய்வந்தவங்கன்னு சொல்லிட்டு.. அது தேவையில்லை.. டெல்லி மாநாட்டை பத்தி பேசவே தேவையில்லை.. எத்தனை பேர் பாதிப்பு என்ற எண்ணிக்கையை மட்டும் தமிழக அரசு சொன்னால் போதும். தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களில் இத்தனை டெல்லி மாநாட்டுக்கு போய் வந்தவர்கள் என்று குறிப்பிட்டும் சொல்ல வேணாம்.. இது என் தனிப்பட்ட கருத்து" என்று அன்புமணி ராமதாஸ் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார்.

Recommended Video

    தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா... 144 தடை நீட்டிக்கப்படுமா?

    பாமகவின் இளைஞர் அணி தலைவரும், எம்பியுமான டாக்டர் அன்புமணி கொரோனாவுக்கு எதிரான விஷயங்களையும் அதுகுறித்த ஆலோசனைகளையும் தினமும் தந்து வருகிறார்.

    "கொரோனாவால் இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படலாம், கொரோனாவை எதிர்கொள்ளும் அளவுக்கு மருத்துவ கட்டுமானம் நம் நாட்டில் இல்லை, முழு அடைப்புதான் கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரே வழி" என்பதை பிரதமர் அறிவிப்புக்கு முன்பிருந்தே சொன்னவரும், தற்போதும் ஊரடங்கை நீட்டிக்க சொல்லி வருபவரும் அன்புமணி ராமதாஸ்தான்!

    சமூக பரவல்

    சமூக பரவல்

    இந்நிலையில், நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அன்புமணி ஒரு பேட்டி அளித்துள்ளார்.. அந்த பேட்டியில் தமிழகத்தில் சமூக பரவல் குறித்தும், ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும் கருத்து கேட்கப்பட்டடது.. அப்போது அன்புமணி சொன்னதாவது: "தமிழ்நாடு அரசுக்கு ஒரு கோரிக்கை, இன்னைக்கும் 69 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு, இதில் 63 பேர் டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் என்று சொல்கிறார்கள்.

    தேவையில்லாதது

    தேவையில்லாதது

    எதுக்கு அதை சொல்றீங்க? அது இப்போ அவசியமா? அந்த நிகழ்ச்சியை அடிக்கடி சொல்லி காட்ட வேண்டியதே இல்லை. தமிழகத்தில் எத்தனை பேர் பாதிப்புன்னு சொன்னால போதும்.. நேத்தும் அப்படித்தான், 50 பேர், அதுல 48 பேர் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் என்று சொல்கிறார்கள்.. இது தேவையில்லாதது.. தப்பு நடந்துபோச்சு.. நடந்து போச்சு.. நாம அடுத்த கட்டத்தக்கு போகணுமே தவிர, இப்படி பழைசையே சொல்லிட்டு இருக்க கூடாது.

    தமிழக அரசு

    தமிழக அரசு

    பாதிக்கப்பட்டவர்கள் யார், யார், அவங்க உறவினர்கள், தொடர்பில் இருந்தவர்களை கவனித்து அவர்களை கண்காணித்தாலே போதும்.. அந்த பணியை தமிழக அரசு சிறப்பாகவே செய்து வருகிறது.. சுகாதாரத்தறை நல்லா செய்துட்டு வர்றாங்க.. அது அப்படியே தொடரட்டும்.. ஆனால், இந்த ஒரு விஷயத்தை மட்டும் மாத்திக்கணும்.. சில மாநிலங்களில் மட்டும் இப்படி டெல்லி மாநாட்டுக்கு போய்வந்தவர்கள் என்று சொல்லி கொண்டே இருக்கிறார்கள்.

    தவறான போக்கு

    தவறான போக்கு

    தங்கள் மேலுள்ள தவறை மறைக்க அப்படி பழி சொல்றாங்க.. டெல்லி போய்வந்தவர்களாலதான் பிரச்சனை என்று தமிழகத்தில் சொல்ல கூடாது.. அது தவறான போக்கு.. முதலில் அந்த நிகழ்ச்சி நடந்திருக்க கூடாது.. மீறி நடந்தபிறகு அடுத்த லெவலுக்குதான் நாம போக வேண்டும்...ஊரடங்கை இங்கு நீட்டிக்க வேண்டும் என்று சொல்லி கொண்டுள்ளேன்.

    எதிர்ப்பு சக்தி

    எதிர்ப்பு சக்தி

    அதே சமயம் தொழிலாளர்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது.. வாரம் 1000 ரூபாய் தொழிலாளர்கள், விவசாய கூலிகளுக்கு தர வேண்டும்.. இயற்கையிலேயே நமக்கு எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது.. இதுபோன்ற நேரத்தில் கபசுரநீர், நிலவேம்பு கசாயம் போன்ற நோய் எதிர்ப்பு சக்திகளை பெருக்கும் சித்த மருந்துகளை அரசு தரலாம்.. இதனால் நம் உடம்புக்கு எந்த கெடுதலும் இல்லை" என்றார்.

    English summary
    lockdown: anbumani ramadoss says about delhi conference
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X