சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அஜித்துக்கு ஏன் இந்த கொலை வெறி.. நடு ராத்தியில் ஓட ஓட விரட்டி.. 4 மாத வாடகை பாக்கியால் வந்த வினை!

வீட்டு உரிமையாளரை ஓட ஓட குத்திக் கொன்ற பயங்கரம் சென்னையில் நடந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: நடுராத்திரி ஹவுஸ் ஓனரை, தெருவில் ஓட ஓட விரட்டி கொலை செய்துவிட்டார் அஜித்.. 4 மாசம் வாடகை பாக்கியை ஹவுஸ் ஓனர் கேட்டாராம்.. அதனால் இந்த கொலை நடந்துள்ளது... இந்த சம்பவத்தினால் வீட்டின் உரிமையாளர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

சென்னை திருவல்லிக் கேணியை சேர்ந்தவர் குணசேகரன்.. ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்.. இவர் குன்றத்தூர், பண்டார தெருவில் சொந்தமாக ஒரு வீடு கட்டியுள்ளார்.. அந்த வீட்டின் ஒரு போர்ஷனை வாடகைக்கு விட்டுவிட்டு, இன்னொரு போர்ஷனில் குணசேகரன் குடியிருந்து வருகிறார்.

 lockdown crime: house owner killed by his tenent in chennai

வாடகை வீட்டில் அஜித் என்பவர் குடும்பத்துடன் குடியிருக்கிறார்.. அஜித்துக்கு 21 வயசு... லாக்டவுன் என்பதால் எந்த வேலைக்கும் போக முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர் அஜித் குடும்பத்தினர். இதனால் 4 மாசமாக வீட்டு வாடகையும் தரவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் குணசேகரன் அஜித் பெற்றோரிடம் வாடகை கேட்டுள்ளார்... இது தகராறாக உருவெடுத்துள்ளது.. அந்த நேரத்தில் அஜித் வீட்டில் இல்லை.. வெளியே போய்விட்டு நடுராத்திரிதான் வந்தார்.. அப்போது ஹவுஸ் ஓனர் தகராறு செய்ததை அஜித்திடம் பெற்றோர் சொல்லி உள்ளனர்.

 lockdown crime: house owner killed by his tenent in chennai

உடனே தூங்கி கொண்டிருந்த ஹவுஸ் ஓனரை எழுப்பி திரும்பவும் சண்டை போட்டார் அஜித்.. அப்போது ஆத்திரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குணசேகரனை சரமாரியாக குத்தியுள்ளார்.. இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத குணசேகரன், உயிரை காப்பாற்றி கொள்ள தெருவில் ஓடியுள்ளார்.
ஆனால் அப்போதும் அஜித் விடாமல் ஓட, ஓட விரட்டி சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி சென்றார்.

தகவலறிந்து குன்றத்தூர் போலீசார் விரைந்து வந்து குணசேகரன் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. அஜித்தை கைது செய்தனர்... இந்த லாக்டவுன் காலத்தில் ஹவுஸ் ஓனர்கள், வாடகைக்கு குடியிருப்போரிடம் வாடகை பணம் கேட்டு தொந்தரவு செய்ய கூடாது என்று தமிழக அரசும், கோர்ட்டும் தெரிவித்திருந்தது.

 lockdown crime: house owner killed by his tenent in chennai

இந்த வாடகையை நம்பி நிறைய பேர் பிழைப்பு ஓட்டுபவர்களும் உண்டு.. அவர்கள் நிலைமை பரிதாபம்தான்.. சாப்பாட்டுக்கே வழி இல்லாத நிலையில், வாடகை தர முடியாதவர்கள் நிலைமையும் அதைவிட பரிதாபம்தான்.. இன்னும் இந்த கொரோனா என்னவெல்லாம் செய்ய போகுதோ!

English summary
lockdown crime: house owner killed by his tenent in chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X