சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் தளர்வுகளுடன் லாக்டவுன் ஜூலை 31 வரை நீட்டிப்பு.. 5 மாவட்டங்களில் முழு லாக்டவுன்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நடைமுறையில் உள்ள லாக்டவுன் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட ஐந்து மாவட்டங்களில் முழு லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் எப்போதும் போல தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட 5 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் பழைய தளர்வுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Lockdown Extension செய்யப்படுமா? | CM Edappadi Palanisamy என்ன சொல்ல போகிறார்?

    கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி தொடங்கி தொடர்ந்து லாக்டவுன் அமலில் உள்ளது. எனினும் கடந்த மே மாதமும் ஜுன் மாதத்தில் முதல் இரண்டு வாரங்களும் நிறைய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

    மண்டலத்திற்குள் செல்ல இபாஸ் தேவையில்லை, பேருந்துகள் இயக்க அனுமதி, கடைகளை வழக்கம் போல் திறக்க அனுமதி என கிட்டத்திட்ட இயல்பு நிலையை தமிழகம் எட்டியது.

    கர்நாடகா முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு.. பிற மாநில வாகனங்கள் பெங்களூர் வர கட்டுப்பாடு?கர்நாடகா முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு.. பிற மாநில வாகனங்கள் பெங்களூர் வர கட்டுப்பாடு?

    பிற மாவட்டங்களில்

    பிற மாவட்டங்களில்

    ஆனால் சென்னையில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்ததால் பலரும் அச்சப்பட்டு தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு வந்தனர். இதனால் கொரோனா பாதிப்பு பிற மாவட்டங்களிலும் பரவலாக அதிகரித்தது. இந்நிலையில் ஜூன் 3வது வாரத்தில் பல மாவட்டங்களில பாதிப்பு கடுமையாக உயர்ந்தது.

    ஜூன் 30 வரை

    ஜூன் 30 வரை

    இதனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அறிவித்தார். இந்த ஊரடங்கு ஜுன் 30 வரை அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளார். இதேபோல் மதரை, தேனி, மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. மேலும், மண்டலங்களுக்கு இடையிலான, பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. ஊரடங்கு, நாளை நிறைவு பெறுகிறது.

    மருத்துவக்குழு உடன்

    மருத்துவக்குழு உடன்

    இந்நிலையில் கொரோனா நோயை கட்டுப்படுத்த, அரசுக்கு ஆலோசனைகள் வழங்க, மருத்துவ நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு முறையும், ஊரடங்கை நீட்டிப்பதற்கு முன், மருத்துவ நிபுணர் குழுவினருடன், முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தி, அவர்கள் கூறும் கருத்துகள் அடிப்படையில், ஊரடங்கு நீட்டிப்பை அறிவித்து வருகிறார்.

     லாக்டவுன் நீட்டிப்பா

    லாக்டவுன் நீட்டிப்பா

    அந்த வகையில் சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவக்குழுவினருடன் முதல்வர் பழனிச்சாமி இன்று காலை 10 மணி முதல் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மருத்துவக்குழுவினர் பல்வேறு பரிந்துரைகளை அளித்ததாக கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு பணிகள், ஊரடங்கை எவ்வளவு நாட்கள் நீட்டிப்பது, எந்த மாவட்டத்திற்கு தளர்வுகளை அறிவிப்பது, எங்கு முழு ஊரடங்கை அமல்படுத்துவது என்பது குறித்து முதல்வர் மருத்துவக் குழுவினருடன் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இந்த கூட்டம் சற்று முன்னதாக நிறைவு பெற்றது. முதல்வர், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    லாக்டவுன் நீட்டிப்பு

    லாக்டவுன் நீட்டிப்பு

    தமிழகத்தில் நடைமுறையில் உள்ள லாக்டவுன் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட ஐந்து மாவட்டங்களில் முழு லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் எப்போதும் போல தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட 5 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் பழைய தளர்வுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Lockdown extension all over Tamil Nadu again? state CM edappadi palanisamy will consulte with medical team today
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X