சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

களமிறங்கிய 20000 போலீஸ்.. 400 செக்போஸ்ட்.. 2 கிமீ தாண்டி சென்றாலே செக்.. சென்னையில் மாஸ் கட்டுப்பாடு

சென்னையில் முழு ஊரடங்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் போலீசார் மிக தீவிரமாக கண்காணிப்பு பணிகளை செய்து வருகிறார்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் முழு ஊரடங்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் போலீசார் மிக தீவிரமாக கண்காணிப்பு பணிகளை செய்து வருகிறார்கள்.

Recommended Video

    Chennai Lockdown கொஞ்சம் வித்தியாசமானது ஏன்?..அதிரடி Plan

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இன்று முதல் இங்கு முழு ஊரடங்கு மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.

    இந்த 4 மாவட்டங்களில் 12 நாட்கள் முழுஊரடங்கு பிறப்பிக்கப்படும். சில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் தொடரும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

    இன்றிலிருந்து அடுத்த 12 நாட்கள்.. சென்னை உட்பட 4 மாவட்டங்களில் முழு லாக்-டவுன்.. எதற்கெல்லாம் தடை? இன்றிலிருந்து அடுத்த 12 நாட்கள்.. சென்னை உட்பட 4 மாவட்டங்களில் முழு லாக்-டவுன்.. எதற்கெல்லாம் தடை?

    2 கிமீ வெளியே சென்றால்

    2 கிமீ வெளியே சென்றால்

    சென்னையில் லாக்டவுனுக்கு இடையே அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே செல்லலாம். ஆனால் அருகே இருக்கும் கடைகளுக்கு மட்டுமே செல்ல முடியும். தூரத்தில் இருக்கும் கடைகளுக்கு செல்ல கூடாது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க வாகனங்களில் செல்ல கூடாது. 2 கிமீ தூரம் இருக்கும் கடைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதை தாண்டிய பகுதிகளுக்கு செல்ல கூடாது.

    செக் போஸ்ட்

    செக் போஸ்ட்

    மொத்தம் சென்னை முழுக்க 400 செக் போஸ்ட் அமைக்கப்பட்டு உள்ளது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் எல்லா ஏரியாவிலும் 4 செக் போஸ்டிற்கும் அதிகமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையை 100 பாகமாக பிரித்து ஒரு பகுதிக்கு ஒரு 4 செக்போஸ்ட் என்று அமைத்து இருக்கிறார்கள். இதனால் மக்கள் வெளியே வந்தாலே போலீஸ் கேள்வி கேட்கும். கட்டுப்பாடுகள் மிக மிக கடுமையாக இருக்கும்.

     20 ஆயிரம் போலீசார்

    20 ஆயிரம் போலீசார்

    சென்னையில் மொத்தம் 20000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு இருக்கிறார்கள். செக்போஸ்ட் பணிகள்,இரவு நேர பணிகள், ரோந்து பணிகள் என்று இவர்களுக்கு தனி தனியாக பணிகள் வழங்கப்பட்டுள்ளது. சென்னை முழுக்க கடுமையான சோதனையில் இவர்கள் ஈடுபடுவார்கள். அதேபோல் போலீசார் டிரோன் கேமரா உதவியுடன் மிக கடுமையான சோதனையும் செய்ய இருக்கிறார்கள்.

    மிக கடுமை

    மிக கடுமை

    சென்னையில் அலுவலகம் செல்லும் பணியாளர்கள் பெரிய அளவில் ஐடி கார்டு அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. பழைய இ பாஸ் வைத்திருக்கும் நபர்கள் புதிய இ - பாஸ் விண்ணப்பிக்க வேண்டும். சென்னையில் இறைச்சி, மீன் கடைகள் செயல்படாது. அதேபோல் கடைகள் எல்லாம் காலை 8-2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.

    English summary
    Lockdown in Chennai: Heavy number of police deployed to follow protocol in all four districts.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X