சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அது எப்படி ஒரு ஆட்டோவில் ஒருவர் மட்டும் போக முடியும்.. ஷேர் ஆட்டோ எப்படி ஓட்றது.. கஸ்தூரி கேள்வி

ஆட்டோக்கள் ஓட அனுமதி குறித்து கஸ்தூரி பதிவு போட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "அது எப்படி ஒரு ஆட்டோவில் ஒருத்தர்தான் போக முடியும்? அப்படின்னா ஷேர் ஆட்டோ எப்படி ஓட்டறது? குடும்பமா எப்படி போவாங்க? இதெல்லாம் போலீஸ் பார்க்கவா போகுது.. எப்படியும் சம்திங் வாங்கி கொண்டு விட்டுவிடுவார்கள்.. இதுதான் நடக்க போகுது.. ஸ்கூல் திறந்துட்டால், மீன் கூடை மாதிரி குழந்தைகளை அடைத்து கொண்டு செல்லும் வண்டிகளும் வலம் வர துவங்கும்" என்று நடிகை கஸ்தூரி தில்லான ஒரு பதிவு போட்டுள்ளார்.

Recommended Video

    ஒவ்வொரு வீட்டிலும் அம்மா தான் சூப்பர் ஹீரோ..நெகிழும் கஸ்தூரி!

    நடிகையும், சமூக செயற்பாட்டாளருமான கஸ்தூரிக்கு வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டுதான்... எப்போதுமே வழவழா கொழ கொழா என்ற பேச்சே கிடையாது.. அரசியல், சமூகம் குறித்த இவரது கருத்துக்கள் எல்லாமே துணிச்சலானவை.

    lockdown: it is necessary to start life with the mood that all others come says kasutri says

    இப்போது தன்னுடைய ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு போட்டுள்ளார்.. அது இதுதான்: "தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஊரடங்கை தளர்த்துகிறார்கள்.

    நேற்று சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி. இன்று ஆட்டோக்களுக்கு. சில கட்டுப்பாடுகளோடு செயல்பட அனுமதித்து இருக்கிறார்கள். உண்மையில், இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் சும்மா, நம்ம மன ஆறுதலுக்குத்தான். பலத்த பாதுகாப்போடு காய் வாங்கினாலே தொற்றிய வைரஸ், இப்போ என்ன சும்மாவா இருக்கும்.
    பொது வாகனத்தில் நாலு ஆளுக்கு பதில் ஒற்றை ஆள் போவதால் எல்லாம் ரிஸ்க் குறையாது. ஒவ்வொரு முறையும் ஆட்டோவை சுத்தப்படுத்தவேண்டும். இதெல்லாம் கொஞ்ச நாளிலேயே யாரும் யாரும் கடைபிடிக்கவும் போவதில்லை, அதை யாரும் தடுக்கவும் முடியாது. ஆட்டோவில் ஒரு பயணி மட்டுமே ஏற்றவேண்டும் என்றால், அப்போ ஷேர் ஆட்டோ இயலாது. ஒற்றை பயணி விதியை ஆட்டோ ஓட்டுனர்கள் கடைபிடித்தாலும் பயணிகள் விடுவார்களா? குடும்பமாக பயணிப்பவர்கள் பெண்கள் சிறார்கள் தனி தனி ஆட்டோவா எடுப்பார்கள்?

    போலீஸ் ஒவ்வொரு ஆட்டோவிலும் குடும்பமா இல்லை ஷேரிங் ஆ என்று பார்க்கவே முடியாது. அங்கொன்றும் இங்கொன்றுமாக பிடிப்பார்கள், சம்திங் வாங்கிக்கொண்டு விட்டுவிடுவார்கள், இதுதான் நடக்க போகிறது. பள்ளிகளை திறந்தால் மீன் கூடை மாதிரி குழந்தைகளை அடைத்து கொண்டு செல்லும் வண்டிகளும் வலம் வர துவங்கும்.

    வீட்டுக்கு வெளியே நின்ற கார்களும் நொறுங்கின.. மளமளவென பெரும் தீ.. பாகிஸ்தான் விமான விபத்து காட்சிகள்வீட்டுக்கு வெளியே நின்ற கார்களும் நொறுங்கின.. மளமளவென பெரும் தீ.. பாகிஸ்தான் விமான விபத்து காட்சிகள்

    ஷூட்டிங்: இதுவும் இப்படித்தான். ஒரு லொகேஷனில் இன்று ஒரு க்ரூப், நாளை வேறு க்ரூப் என்று ஆட்கள் மாறி மாறி வரும் பொழுது, கண்டிப்பாக தொற்று வரும். படப்பிடிப்பு லொகேஷன்களை தினசரி கிரிமிநாசனம் செய்வார்கள் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது. முடிந்தவர்கள் வீட்டில் பாதுகாப்பாய் இருங்கள். மற்றவர்கள் எல்லோரும் வருவது வரட்டும் என்ற மனநிலையோடு வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியதுதான்" என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    lockdown: "it is necessary to start life with the mood that all others come" says kasutri says
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X