சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்று முதல் கிராமப்புறங்களில் வழிபாட்டு தலங்கள் முழுமையாக திறப்பு- ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடலாம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கிராமப்புறங்களில் இன்று முதல் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

சென்னை உட்பட 4 மாவட்டங்கள் மற்றும் மதுரை மாவட்டங்களில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தீவிரமாக அமல்படுத்தபட்டு வருகின்றன. இந்த கட்டுப்பாடுகள் சில இன்று முதல் தளர்த்தப்படுகின்றன.

Lockdown relaxed in TN Other Dists from today

இதேபோல் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் இன்று முதல் பல்வேறு தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. அவை:

17 நாட்களுக்குப் பின் சென்னையில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்வு - இறைச்சி கடைகள் ஹோட்டல்கள் திறப்பு17 நாட்களுக்குப் பின் சென்னையில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்வு - இறைச்சி கடைகள் ஹோட்டல்கள் திறப்பு

  • கிராமப்புறங்களில் உள்ள சிறிய கோவில்கள் (ஆண்டு வருவாய் ரூ10,000க்கும் குறைவானவை), மசூதிகள், தேவாலயங்களில் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்
  • இந்த வழிபாட்டுத் தலங்களில் சமூக இடைவெளி, நோய் தடுப்பு நடவடிக்கைகள் அவசியம்.
  • மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வழிபாட்டு தலங்களில் பொது தரிசன அனுமதி இல்லை
  • தொழில், ஏற்றுமதி நிறுவனங்கள் 100% தொழிலாளர்களுடன் இயங்கலாம்.
  • ஐடி நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் இயங்கலாம்.
  • ஷாப்பிங் மால்கள் தவிர மற்ற அனைத்து வர்த்தக நிறுவனங்களும் 50% பணியாளர்களுடன் செயல்படலாம்.
  • அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை இயங்கலாம்
  • ஹோட்டல்களில் சமூக இடைவெளியுடன் அமர்ந்து சாப்பிடலாம்
  • இந்த தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.
English summary
Lockdown in Other Districts of Tamilnadu relaxed from today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X