சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ரொம்ப நெருக்கடி".. பிரதமரிடம் வலியுறுத்துவோம்.. பத்திரிகை நிறுவன நிர்வாகிகளுக்கு சிபிஎம் நம்பிக்கை

அச்சு காகிதம் மீதான வரியை நீக்க பத்திரிகை நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன

Google Oneindia Tamil News

சென்னை: "ரொம்ப நெருக்கடியா இருக்கு.. மீள்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்கணும்.. அச்சு காகிதம் மீதான வரியை குறைக்கணும்.. அரசு விளம்பரங்களுக்கு வர வேண்டிய நிலுவை தொகையை வழங்க வேண்டும்.. இதுகுறித்து பிரதமரிடம் நீங்கள்தான் சொல்லி வலியுறுத்த வேண்டும்" என்று பத்திரிகை நிறுவன நிர்வாகிகள் சிபிஎம் கட்சியினருக்கு கோரிக்கை விடுத்தனர்.. இதையடுத்து, "எல்லாமே நியாயமான கோரிக்கைதான், கண்டிப்பாக பிரதமரிடம் இதை பற்றி வலியுறுத்துகிறோம்" என்று கட்சியின் மாநிலத் தலைவர்கள் நம்பிக்கை அளித்தனர்.

Recommended Video

    Lockdown 4.0| நாடு முழுவதும் மே 31 வரை தொடரும் ஊரடங்கு... மத்திய அரசு அறிவிப்பு

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் ஆகியோரை பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் இன்று சந்தித்து பேசினர்.

    இந்து என்.ராம், தினகரன் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், தினமலர் ஆதிமூலம் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.. கொரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் நிலையில், அச்சு ஊடகங்களான நாளிதழ்கள் உள்ளிட்ட பத்திரிகைகள் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருவது குறித்தும், அதிலிருந்து மீள்வதற்கு அரசு செய்ய வேண்டியவைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

     சமையல் எண்ணெய் இனி பாக்கெட்களில் மட்டுமே... ஜூன் 1-ம் தேதி முதல் சில்லறையாக வாங்க முடியாது சமையல் எண்ணெய் இனி பாக்கெட்களில் மட்டுமே... ஜூன் 1-ம் தேதி முதல் சில்லறையாக வாங்க முடியாது

    நிலுவை தொகை

    நிலுவை தொகை

    மேலும், மத்திய அரசு, பத்திரிகை அச்சுக் காகிதம் மீதான வரியைக் குறைக்க வேண்டும், அரசு விளம்பரங்கள் தொடர்பாக மத்திய - மாநில அரசுகள் வைத்துள்ள நிலுவைத் தொகைகளை உடனடியாக பத்திரிகைகளுக்கு வழங்க வேண்டும், நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அரசு விளம்பரக் கட்டணத்தை நூறு விழுக்காடு உயர்த்தி வழங்க வேண்டும், அடுத்து 2 ஆண்டுகளுக்கு முழுமையாக வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமருக்கு அளித்திருப்பதையும் தெரிவித்தனர்.

    பாலகிருஷ்ணன்

    பாலகிருஷ்ணன்

    இந்தக் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்த வேண்டுமென்றும், அச்சு ஊடகங்கள் மக்களின் குரலாக செயல்படுவதற்குத் துணை நிற்க வேண்டும் என்றும் அவர்கள் பாலகிருஷ்ணனிடம் வேண்டுகோள் விடுத்தனர். அதேபோல, இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பிக்கள் மூலம் பிரதமரின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டனர்.

    பத்திரிகை துறை

    பத்திரிகை துறை

    இதையடுத்து இந்த கோரிக்கைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாக கட்சி சார்பில் உறுதி அளிக்கப்பட்டுது.. மேலும், "இந்தக் கோரிக்கைகள் எல்லாமே நியாயமானவை... ஜனநாயக நாட்டில் பத்திரிகைத்துறை மற்றும் ஊடகங்கள் மிகவும் கேந்திரமான பங்கு வகிப்பவை... மக்களது பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் பெரும் கருவியாக விளங்கி வருகின்றன... கொரோனா கொடுமையால் பொது முடக்கத்திற்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு பெரும் விழிப்புணர்வை அளிப்பதில் அச்சு ஊடகங்களின் பங்கு மகத்தானது.

    பாதுகாப்பு

    பாதுகாப்பு

    நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பத்திரிகைத் துறையினை பாதுகாப்பது சமூக நோக்கிலும் அத்தியாவசியமானதாகும். அச்சு ஊடகங்கள் செயல்பட குறைந்தபட்சம் அரசு செய்ய வேண்டிய கோரிக்கைகள்தான் இவை. ஊடகங்களின் கருத்து சுதந்திரத்திற்கும், நடுநிலைத் தன்மையோடு செயல்படுவதற்கும் எப்போதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை நின்று வருகிறது.

    பிரதமர் மோடி

    பிரதமர் மோடி

    அச்சு ஊடகங்களின் கோரிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி மூலமும், எம்பிக்கள் மூலமும், பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கிறோம்" என்று பத்திரிகை நிறுவன நிர்வாகிகளிடம் மாநிலத் தலைவர்கள் தெரிவித்தனர்.

    English summary
    lockdown: Request to remove customs duty on print journalism
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X