சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா அதிகமுள்ள மாவட்டங்களில்.. மேலும் 6-8 வாரம் லாக்டவுன் நீடிக்க வேண்டும்.. ஐசிஎம்ஆர் அறிவுரை!

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் அடுத்த 6-8 வாரங்கள் கண்டிப்பாக லாக்டவுன் நீடிக்க வேண்டும் என்று ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா கேஸ்களால் பல மாநிலங்களில் லாக்டவுன் போடப்பட்டுள்ளது. தேசிய அளவில் முழு லாக்டவுன் அறிவிக்கப்படவில்லை என்றாலும், கிட்டத்தட்ட 80% அதிகமான மாநிலங்களில் லாக்டவுன் அமலில் உள்ளது.

2.56 லட்சத்தை கடந்த பலி எண்ணிக்கை.. இந்திய கிராமங்களுக்கு படையெடுக்கும் கொரோனா.. அதிர்ச்சி பின்னணி 2.56 லட்சத்தை கடந்த பலி எண்ணிக்கை.. இந்திய கிராமங்களுக்கு படையெடுக்கும் கொரோனா.. அதிர்ச்சி பின்னணி

மத்திய அரசு நேரடியாக லாக்டவுனை அறிவிக்கவில்லை என்றாலும் மாநில அரசுகள் சார்பாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

லாக்டவுன்

லாக்டவுன்

இந்த நிலையில் இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலான ஐசிஎம்ஆரின் தலைவர் பால்ராம் பார்கவா இந்த லாக்டவுன் தொடர்பாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் அடுத்த 6-8 வாரங்கள் கண்டிப்பாக லாக்டவுன் நீடிக்க வேண்டும். இங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த கூடாது.

10%

10%

எங்கெல்லாம் பாசிட்டிவிட்டு ரேட் எனப்படும் கொரோனா பாசிட்டிவ் சதவிகிதம் 10%க்கும் அதிகமாக உள்ளதோ அங்கெல்லாம் லாக்டவுனை நீட்டிக்க வேண்டும். இங்கு கேஸ்கள் குறைய 6-8 வாரங்கள் ஆகும். அதுவரை இங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த கூடாது.

தளர்வு

தளர்வு

இந்தியாவில் 718 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 4ல் 3 பங்கு மாவட்டங்களில் கொரோனா பாசிட்டிவ் சதவிகிதம் 10%க்கும் அதிகமாக உள்ளது. மும்பை, டெல்லி, பெங்களூர் போன்ற பெரு நகரங்களிலும் இதே நிலை. இங்கெல்லாம் லாக்டவுன் தொடர்வதே ஒரே தீர்வு. இங்கு கேஸ்கள் குறைந்தால் கட்டுப்பாடுகளை தளர்த்தலாம்.

கட்டுப்பாடுகள்

கட்டுப்பாடுகள்

5% வரை கொரோனா பாசிட்டிவ் சதவிகிதம் குறைந்தால் கட்டுப்பாடுகளை தளர்த்தலாம். ஆனால் அதற்கு 6-8 வாரம் ஆகும். டெல்லியில் பாசிட்டிவிட்டி சதவிகிதம் 35%ல் இருந்து 17% ஆக குறைந்துள்ளது. இப்போது டெல்லி போன்ற நகரங்களை திறக்க கூடாது.

 டெல்லி

டெல்லி

டெல்லியில் இப்போது தளர்வுகளை கொண்டு வந்தால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். கொரோனாவிற்கு எதிராக மத்திய அரசு கட்டுப்பாடுகளை அறிவிப்பதில் தாமதமாக செயல்பட்டது. எங்களின் அறிவுரைகளை செயல்படுத்துவதில் கொஞ்சம் தாமதமாக செயல்பட்டுவிட்டது, என்று ஐசிஎம்ஆரின் தலைவர் பால்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

English summary
Coronavirus : Lockdown should continue for 6-8 more weeks in districts with 10% or more Coronavirus positivity rate says ICMR.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X