சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விரைவில் பேருந்து போக்குவரத்து.. இந்திய மருத்துவ சங்கம் அளித்த கிரீன் சிக்னல்.. தயாராகும் தமிழக அரசு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பேருந்து போக்குவரத்தை தொடங்குவது தொடர்பாக அரசு முடிவுகளை எடுக்கலாம், கொரோனா கேஸ்கள் குறைய தொடங்கி உள்ளது என்று இந்திய மருத்துவ சங்கமான ஐ.எம்.ஏ தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி ஊரடங்கு நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின்படி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

பேருந்துகள் இயக்கப்படும், தியேட்டர்கள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு தளர்வுகளுடன் மாத இறுதி வரை தொடரும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

அதி நவீன வசதிகள்.. கோயம்பேட்டை விட அருமையான வண்டலூர் புதிய பேருந்து நிலையம்.. தீவிரமாக பணிகள் அதி நவீன வசதிகள்.. கோயம்பேட்டை விட அருமையான வண்டலூர் புதிய பேருந்து நிலையம்.. தீவிரமாக பணிகள்

கேஸ்கள் எப்படி

கேஸ்கள் எப்படி

தமிழகத்தில் தற்போது உள் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும், உள்மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாக குறையவில்லை. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 273460 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா காரணமாக 1 லட்சத்து 5 ஆயிரத்து 4 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கட்டுப்பாடு தேவை இல்லை

கட்டுப்பாடு தேவை இல்லை

இந்த நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு தேவை இல்லை. அதிக கட்டுப்பாடுகள் தேவை இல்லை. இன்னும் தளர்வுகளை கொண்டு வரலாம் என்று இந்திய மருத்துவ சங்கமான ஐ.எம்.ஏ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய மருத்துவ சங்கமான ஐ.எம்.ஏவின் தமிழக கிளை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் கடுமையான ஊரடங்கு அவசியம் இல்லை.

தளர்வு கொண்டு வரலாம்

தளர்வு கொண்டு வரலாம்

கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகளை கொண்டு வரலாம். தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் குறைய தொடங்கி உள்ளது. ஆனாலும் நாம் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். முகக்கவசம் அணிவதை வழக்கமாக வைக்க வேண்டும். கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். தடுப்பூசி வரும் வரை கவனமாக இருக்க வேண்டும். கேஸ்கள் இப்போதுதான் படிப்படியாக குறைகிறது .

தளவுகளுடன் ஊரடங்கு

தளவுகளுடன் ஊரடங்கு

எனவே தளவுகளுடன் கூடிய ஊரடங்கு போதும். ஆகவே இனி பேருந்துகளை தொடங்குவது குறித்த ஆலோசனைகளை செய்யலாம். மீண்டும் பேருந்து போக்குவரத்தை தொடங்குவது தொடர்பாக முடிவுகளை எடுக்கலாம்.இது தொடர்பாக தமிழக அரசுக்கு பரிந்துரைகளை அளிக்க உள்ளோம். பள்ளிகளை திறப்பது தொடர்பாகவும் முக்கியமான தமிழக அரசு முடிவுகளை எடுக்கலாம், என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

வாய்ப்புள்ளது

வாய்ப்புள்ளது

தமிழகத்தில் பேருந்து போக்குவரத்தை தொடங்க நேரடியாக மருத்துவ சங்கம் பரிந்துரை செய்யவில்லை. ஆனாலும் கூட, கேஸ்கள் குறைந்துள்ளது. பேருந்து போக்குவரத்தை தொடங்குவது குறித்து ஆலோசனை செய்யலாம் என்று மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழக அரசு பேருந்து போக்குவரத்து தொடர்பாக கிரீன் சிக்னல் கிடைத்துள்ளது என்றுதான் கூற வேண்டும். விரைவில் தமிழக அரசு இதில் முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

English summary
Lockdown: Tamilnadu may soon open its transport bus service after IMA green signal on coronavirus cases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X