சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விளக்கு பிடிக்க சொன்ன பாஜகவே.. இதுதான் தேசபக்தியா.. தமிழன் என்ன அடிமையா.. திருமுருகன் காந்தி ஆவேசம்

திருமுருகன் காந்தி கிண்டல் செய்து 2 ட்வீட்களை பதிவிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "'விளக்கு' பிடிக்க சொன்ன பிஜேபியே.. நெருக்கடி காலத்திலும் தமிழனை அழிப்பது தான் உம் தேசபக்தியா? தமிழன் இந்திக்காரனுக்கு அடிமையா? டில்லியின் காலனியா தமிழ்நாடு?" என்று திருமுருகன் காந்தியின் காட்டமான ட்வீட் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Recommended Video

    கொரோனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம் சென்ற மக்கள்

    பிரதமர் வேண்டுகோளுக்கு இணங்க நேற்று நாடு முழுவதும் மக்கள் அனுசரித்து தீபம் ஏற்றும் நிகழ்வு குறித்து திருமுருகன் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

    நாடு முழுவதும் லாக் டவுனில் உள்ளது... 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவினை மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர்... நேற்றைய தினம் இரவு 9 மணிக்கு மின்விளக்கை அணைத்துவிட்டு மெழுகுவர்த்தி, தீபம் ஏற்றி, டார்ச் லைட் அடிக்கும்படி பிரதமர் மோடி கேட்டுக்கொண்டிருந்தார்.

    அறிவிப்பு

    அறிவிப்பு

    மிக மிக முக்கியமான அறிவிப்பினை பிரதமர் அறிவிப்பார் என்று அனைத்து தரப்பினருமே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு சில தரப்பினருக்கு அதிருப்தியை தந்தது.. எனினும் பிரதமர் கேட்டுக் கொண்டதற்காகவும் இந்தியாவின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சிக்கு நன்றி சொல்லவும், நம்முடைய கூட்டு ஆன்மாவை வலுப்படுத்தவும் பொதுமக்களும் கீழ்ப்படிந்து அதன்படியே நடந்து கொண்டனர்.

    கிண்டல்கள்

    கிண்டல்கள்

    பிரதமர் இப்படி அறிவித்ததில் இருந்தே விமர்சனங்களும், கிண்டல்களும் சோஷியல் மீடியாவில் எழுந்தபடியே உள்ளது.. நேற்றைய தினம் பிரதமர் தீபம், டார்ச்லைட் மெழுகுவர்த்திதான் ஏற்ற சொன்னார்.. ஆனால் பல இடங்களில் வெடிசத்தம் கேட்க முடிந்தது.. சிலர் தீபங்களை ஏந்தி ஊர்வலமாக சென்ற நிகழ்வும் நடந்தது. பலரும் இச்செயலை விமர்சித்த நிலையில், மே17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தியும் விமர்சித்துள்ளார்.

    பாசிட்டிவ்

    பாசிட்டிவ்

    இதை பற்றி தனது ட்விட்டரில் 2 பதிவுகளை போட்டுள்ளார்.. "ஆரிய இந்துத்துவ பார்ப்பனிய வேதமதம்' என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த நம்பிக்கை குப்பைகள் எவ்வளவு 'மூடத்தனமானது', 'பிற்போக்குத்தனமானது', 'மக்களை முட்டாளாக்குவது' என்பதை உலகிற்கே 'விளக்கு' போட்டு காண்பித்த பிரதமருக்கு நாம் ஏன் நன்றி சொல்லக்கூடாது? பாசிட்டிவாக யோசிப்போமே!!!" என்கிறது ஒரு பதிவு.

    விளக்கு

    "பல்லிளிக்கும் தேசபக்தி.. தமிழினத்திற்கு எதிரானது மோடி அரசு என்பதற்கான உதாரணம்! 'விளக்கு' பிடிக்க சொன்ன பிஜேபியே நெருக்கடி காலத்திலும் தமிழனை அழிப்பது தான் உம் தேசபக்தியா? தமிழன் இந்திக்காரனுக்கு அடிமையா? டில்லியின் காலனியா தமிழ்நாடு? பனியா சேட்டுகளுக்கு தாரை வார்க்கவா எம் வரிப்பணம்" என்று இன்னொரு கேள்வி கேட்டு ட்வீட் போட்டுள்ளார். திருமுருகன் காந்தி பதிவிட்ட இந்த 2 ட்வீட்களுமே சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

    English summary
    lockdown: "is your patriotism?" thirumurugan gandhi criticized central gov
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X