சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எதுக்காக இவங்களை அடிக்கிறீங்க.. சுவர் எழுப்பியவரை போய் கேட்க வேண்டியதுதானே.. திருமுருகன்காந்தி கோபம்

திருமுருகன் காந்தி பிரதமர் மீது காட்டமாக ட்வீட் பதிவிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "இவங்களை ஏன் அடிக்கிறீங்க... கொரோனா அழிவுநோய் வருவது 3 மாசமாக அறிந்தும் நடவடிக்கை எடுக்காத பிரதமரை என்ன செய்யபோகிறீர்கள்? ட்ரம்ப் வரும்போது, ஏழை மக்களை மறைக்கும் சுவர் எழுப்பி கொண்டிருந்தவரை நோக்கி என்ன கேள்வி கேட்க போறீங்க?" என்று திருமுருகன் காந்தி ஒரு ட்வீட் போட்டுள்ளார். இதை பார்த்ததும் ட்விட்டர்வாசிகள், "அரசியல் பேசுறத கொஞ்ச நாளைக்கு நிறுத்துங்கய்யா புண்ணியவாங்களே!" என்று கமெண்ட்களை போட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஒட்டுமொத்த இந்தியாவும் லாக்டவுன் செய்யப்பட்டுள்ளது.. 21 நாட்களுக்கு பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியில் வரலாம், அப்படியே வெளியில் வந்தாலும் பிறரிடமிருந்து ஒரு மீட்டர் முதல் 3 மீட்டர் தூரம்வரை தள்ளியிருக்க வேண்டும்... 5 பேருக்கு மேல் எந்த பொது இடத்திலும் கூடக்கூடாது என்ற அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு உள்ளன.

எச்சரிக்கை

எச்சரிக்கை

ஆனால் சீரியஸ்தன்மை உணராத சிலர், வெளியில் நடமாடியபடி இருந்துள்ளனர்.. குறிப்பாக இளைஞர்கள் சிலர் பைக்கில் ஹாயாக ஊர் சுற்றி வந்துள்ளனர்.. காரணமே இல்லாமல் வெளியே அவர்கள் நடமாடுவதை பார்த்து போலீசாரும் தடுத்து எச்சரிக்கை செய்துள்ளனர்.. அப்படியும் பேச்சை கேட்காதவர்கள் மீது தடியடி நடத்தி வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். போலீசார் அனைவரின் நன்மைக்காகத்தான் இப்படி செய்தாலும், எப்படி பொதுமக்களை லத்தியால் போலீஸ்காரர்கள் அடிக்கலாம் என்ற கேள்வியும் எழுந்தது.

திருமுருகன் காந்தி

திருமுருகன் காந்தி

இதை பற்றிதான் மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. அதில், "ஊரடங்கை மீறுகிறார்களென மக்களை அடிக்கிறீர்கள். அழிவுநோய் வருவது 3 மாதமாக அறிந்தும் நடவடிக்கை எடுக்காத பிரதமரை என்ன செய்யபோகிறீர்கள்? கொரோனா பரவும் போது, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகைக்காக ஏழை மக்களை மறைக்கும் சுவர் எழுப்பிக்கொண்டிருந்தவரை நோக்கி என்ன கேள்வி கேட்க போகிறீர்கள்?" என்று பதிவிட்டுள்ளார்.

கமெண்ட்கள்

கமெண்ட்கள்

திருமுருகன் காந்தி சொல்வது ஓரளவு நியாயம் என்றாலும், அதை தேவையில்லாத நேரத்தில் கொண்டு வந்து ட்விட்டரில் போட்டு கமெண்ட்களில் வாங்கி கட்டிக் கொண்டு வருகிறார். "இந்த நேரத்திலும் மோடி எதிர்ப்பு அரசியல் பேசுறத நிறுத்திட்டு, அரசோடு சேர்ந்து மக்களுக்கு சேவை செய்... நாளைக்கு இருப்போமா என தெரியல, இந்த நேரத்திலும் அரசியல் பேசிகிட்டு... அரசியல் பேசுறத கொஞ்ச நாளைக்கு நிறுத்துங்கய்யா புண்ணியவாங்களே!" என்று ஒருவர் காட்டமாகவே கூறியுள்ளார்.

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

இன்னொருவரோ, "இப்போ அடுத்தவருக்கு நாளை நமக்கும் பரவ உள்ள நோய்யை தடுக்க நடவடிக்கை எடுப்போமா இல்லை... நேற்று அரசு செய்த தவறுக்காக போராடுவோமா... நல்ல முடிவை கூறுங்கள்" என்றும் கேள்வி கேட்கும் நேரம் அல்ல இது... செயல் படும் நேரம்... முடிந்தால் உதவுங்கள்", "3 நாளுக்கு முன்பு வரை பாராளுமன்றம் சட்டமன்றத்தையும் நடத்தியவர்கள் தான் இன்றைக்கு எல்லாரும் தனித்திருங்கள் என்று விழிப்புணர்வு செய்கிறார்கள்... மக்களின் கவனக்குறைவு எவ்வளவு ஆபத்தை உருவாக்குகிறது" என்றும் திருமுருகன்காந்திக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்!

English summary
lockdown: thirumurugan gandhi criticized pm modi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X