சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டாஸ்மாக் திறக்கப்படுமா.. மது கடைகளை மூடியதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

ஹைகோர்ட் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யுமா?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மதுக்கடை மூடலை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. "மூடியது மூடியதாகவே இருக்கட்டுமே, அப்பீல் செய்யாதீங்க" என்று தமிழக தலைவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், ஆன்லைன் மூலம் இந்த மேல்முறையீட்டுக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் திறந்த முதல் நாளே சமூக விலகல் கடைப்பிடிக்கப்படவில்லை.. சமூக விலகலுக்காகவே குடையை எடுத்து வர வேண்டும் என்று சொன்னால், அந்த குடைக்குள் பாட்டில்களை நிரப்பி கொண்டு போன குடிமகன்கள்தான் அதிகம்.

விடிகாலையில் இருந்தே காத்து கிடந்தவர்கள் ஏராளம்.. சரக்கு வாங்கி அங்கேயே திறந்து குடித்துவிட்டு, கடைமுன்னாடியே விழுந்து கிடந்தவர்களும் ஏராளம்..

எம்மாடியோவ்.. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் இரு நாட்களில் வசூல் ஜோர்.. மதுரைக்கு முதலிடம் எம்மாடியோவ்.. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் இரு நாட்களில் வசூல் ஜோர்.. மதுரைக்கு முதலிடம்

வன்முறை

வன்முறை

சமூக விலகல் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக, வட்டம், சதுரம் என டிசைன் டிசைனாக படம் வரைந்து அதற்குள் குடிமகன்களை நிற்க சொன்னால், தள்ளுமுள்ளு, மோதல், நெருக்கி தள்ளுதல் வரை சென்றது.. இதை பார்த்த பாதுகாப்பு போலீசார் சில இடங்களில் தடியடியும் நடத்தினர்.. ரகளை செய்து ரத்தம் சொட்ட சொட்ட கையில் பாட்டிலும், வாயில் சிரிப்புமாய் நடந்து போன குடிமகன்களும் உண்டு.

விசாரணை

விசாரணை

இதுதொடர்பாக நேற்று நடந்த வழக்கு விசாரணையின்போது எடுத்து வைக்கப்பட்ட வாதங்களின் அடிப்படையில், ஊரடங்கு முடியும் வரை கடைகளை திறக்கக் கூடாது, ஆன்லைனில் வேண்டுமானால் மது விற்பனை செய்துகொள்ளலாம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.. இது தமிழக அரசுக்கு பெருத்த அதிர்ச்சியை தந்துள்ளது.. கடையை திறந்த அடுத்தநாளே கோர்ட் இப்படி சொல்லும் என எதிர்பார்க்கவே இல்லை.. ஆனால் கோர்ட்டின் இந்த உத்தரவை திமுக, தேமுதிக, பாஜக, என கட்சி பாகுபாடில்லாமல் அனைவருமே வரவேற்றுள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்

சுப்ரீம் கோர்ட்

எனினும் ஹைகோர்ட்டின் உத்தரவை மீறி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய போவதாக ஒரு தகவல் கசிந்தது.. இதற்கு காரணம் இந்த 2 நாளில் அரசு கண்ணெதிரே பார்த்த லாபம்தான்.. முதல் நாளிலேயே ரூ.172 கோடிக்கு மது விற்பனையானது... 2-வது நாளான நேற்று 122 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆனதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது... இந்த 2 நாட்களில் மொத்தம் 294 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்திருக்கிறது.

நெருக்கடி

நெருக்கடி

அது மட்டுமல்ல.. 2 நாளில் இந்த வருமானம் என்றால் ஊரடங்கு முடிய இன்னும் 8 நாள் இருக்கிறது.. அந்த கணக்கையும் சேர்த்தால் எப்படியும் ஆயிரம் கோடி ரூபாயை எட்டிவிடும். ஏற்கனவே நிதி இல்லாமல் நெருக்கடியில் தத்தளித்து வரும் மாநில அரசு இப்படி ஒரு வருவாயை இழக்க விரும்புமா என்பது சந்தேகம்தான்!

 மனு தாக்கல்

மனு தாக்கல்

இந்த நிலையில் அப்பீலுக்கான வேலைகளை டாஸ்மாக் நிறுவனம் செய்து வருவதாக சொல்லப்பட்டது.. தற்போது அப்பீல் மனுவை ஆன்லைன் மூலமாக டாஸ்மாக் நிறுவனம் தாக்கல் செய்துள்ளது. அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: "தமிழகம் முழுவதும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் பின்பற்றியே மதுக்கடைகள் திறக்கப்பட்டன. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியே கடைகள் திறக்கப்பட்டன.

விதிமீறல்

விதிமீறல்

ஆனால், ஒரு சில இடங்களில் ஏற்பட்ட விதிமீறல்களினால், ஒட்டுமொத்த டாஸ்மாக் கடைகளையும் மூடுவது ஏற்புடையதல்ல. பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கிற்கு மத்தியில் மதுவிற்பனை செய்து வரும் நிலையில், தமிழகத்தில் தடை செய்வது ஏற்புடையதல்ல. எனவே, மதுக்கடைகளை திறக்க அனுமதியளிக்க வேண்டும். மேலும் டாஸ்மாக்கை திறப்பது என்பது அரசின் கொள்கை முடிவு, அதில் நீதிமன்றம் தலையிட முடியாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த இந்த வழக்கில் தங்களை கேட்காமல் தீர்ப்பு அளிக்கக் கூடாது என்று வழக்கறிஞர் ராஜேஷ் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். இதேபோல மகளிர் ஆணையம், மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள் சார்பாகவும் கேவிட் மனு தாக்கல் செய்துள்ளனர். அனைத்து மனுக்களும் திங்கள்கிழமை விசாரிக்கப்படலாம் என்று தெரிகிறது.

English summary
lockdown: Will the tn gov appeal to supreme court over tasmac shops issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X